Thursday, December 11, 2014

பாலஸ்தீன அமைச்சரை அடித்தே கொன்ற இஸ்ரேல் இராணுவம்



துர்முசியா: பாலஸ்தீனத்தின் வெஸ்ட் பேங்க் பகுதியை இஸ்ரேல் ராணுவம் ஆக்கிரமித்துள்ளது. அப்பகுதியில் நேற்று பாலஸ்தீன அமைச்சர் ஜியாத் அபு எய்ன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தின்போது இஸ்ரேல் ராணுவ வீரர்கள் அமைச்சரின் கழுத்தை பிடித்து கீழே தள்ளியதில் தலையில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்த£ர். பாலஸ்தீனத்தின் வெஸ்ட் பேங்க் பகுதியில் உள்ள துர்முசியாவை கடந்த போரின்போது இஸ்ரேல் ராணுவம் ஆக்கிரமித்தது. அங்கு சுற்றுச்சுவர் எழுப்பும் பணியில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பாலஸ்தீனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக துர்முசியா பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 50 வயதான பாலஸ்தீன அமைச்சர் ஜியாத் அபு எய்ன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது இஸ்ரேல் ராணுவம் அமைத்த சுற்றுச்சுவரை அமைச்சர் தலைமையிலான குழுவினர் இடிக்க முயன்றனர்.

பாலஸ்தீன குழுவினர் மீது இஸ்ரேல் ராணுவம் கண்ணீர் புகை வீசினர். அத்துடன் தடியடி நடத்தினர். இஸ்ரேல் ராணுவ வீரர்கள் அமைச்சரின் கழுத்தை பிடித்து தள்ளினார்கள். இதில் ஜியாத் அபு எய்ன் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவரது தலை பாறையில் மோதியதால், சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. கடைகள் அடைக்கப்பட்டன. இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதியில் ராணுவத்தின் மீது இளைஞர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர் என்று பாலஸ்தீன பாதுகாப்பு வட்டாரம் தகவல் தெரிவிக்கின்றன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாலஸ்தீன அதிபர் மக்மூத் அப்பாஸ், இஸ்ரேல் ராணுவத்தின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையால் பாலஸ்தீன அமைச்சர் பலியாகி உள்ளார். இதுபற்றி ஐ.நா.விடம் எங்களது எதிர்ப்பை தெரிவிப்போம் என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இச்சம்பவம் இரு நாடுகளுக்கு இருக்கும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

0 comments:

Post a Comment