Wednesday, January 08, 2014

நவீன அறிவியலுக்கும் நாமே முன்னோடி...



ஒளியியல்
 
 
கண்ப்பார்வை ஒளி சம்பந்தமான ஆராய்ச்சியிலும் முஸ்லிம்கள் ஈடுப்பட்டுள்ளனர். ஈராக்கில் உள்ள பஸ்ரா நகரில் பிறந்த அபூ அலி முஹம்மது இப்னு அல்ஹசன் இப்னு அல்ஹைதம் (கி.பி 965 - 1039 ) என்பவர் இயற்பியலாளராக, வானவியல் அறிஞராக, கணித மேதையாக, தத்துவ ஞானியாக, பொறியாளலாரக, மருத்துவராக, இறையியல் அறிஞராகவும் விளங்கினார். இவர் மேற்குலகில் அல் ஹாசன் என்றே அலைக்கபடுகிறார்.
இவர் தன் வாழ்நாளில் பல்வேறு துறைகள் குறித்து மொத்தம் 200 நூல்கள் எழுதியுள்ளார். ஆயினும் ஒளியியல் சம்பந்தமாக இவர் எழுதிய கிதாபுல் மனாசிர் என்ற நூலே மிகவும் பிரபல்யமானது. இவரது இந்நூல் செயல்முறை ஆய்வை அடிப்படையாகக் கொண்ட ஊர் ஒப்பற்ற படைப்பாகும். இந்நூல் ஒளியின் இயல்பு, அதன் நிறம் மற்றும் கண்ணின் பகுப்பாய்வு, செயலியல், பார்வை, அதன் பிரதி பிம்பம், ஒளிவிலகல்(Refraction ) ஆகியவற்றின் நிகழ்வுகள் பற்றி விவரிகின்றது. நவீன ஒளியியல் (Modern Optics ) விஞ்ஞானமே இவரிடமிருந்து தான் ஆரம்பமாகிறது.
இப்னு அல் ஹைதம் எழுதிய "கிதாபுல் மனாசிர்" என்ற நூல் ஆறு நூற்றாண்டுகள் விஞ்ஞான சிந்தனையின் மீது இடைவிடாது செல்வாக்கு செலுத்திய உயர் தனி இலக்கியமாக் (Classic ) விளங்குகின்றது.
லத்தின் எழுத்தாளர்களான ரோஜர் பேகன், ஜான் பெக்காம் விட்டியோ, முஸ்லிம் எழுத்தாளர்களான அஹ்மத் இப்னு இத்ரிஸ் அல்கரபி, குத்புதீன் அல்ஸிராசி, ஹீப்ரு மொழி எழுத்தாளரான பென் கெர்சன் போன்றோர் இந்நூலையே தங்களது படைபிற்கு ஆதாரமாக கொண்டனர். இவர்களில் ரோஜர் பேகன் என்பவரோ தான் எழுதிய சீபஸ் மஜாஸ்(Cepus  Majus ) என்ற நூலின் ஐந்தாம் பகுதியில் ஒளியியல் சம்பந்தமான கருத்துகளை கூறியுள்ளார். இந்த பகுதி முற்றிலும் இப்னு அல் ஹைதம் எழுதிய "கிதாபுல் மனாசிர்"  நூலிலிருந்து அப்படியே எடுத்து பிரசுரிக்கப்பட்டதாகும். அதாவது காப்பியடிக்கப்பட்டதாகும் என்பதை வரலாற்று அறிஞர் ராபர்ட் பிரிபால்ட் தனது மனித இனத்தை உருவாக்குதல் என்ற நூலில் மிக்க வேதனையோடு எடுத்துரைக்கிறார்.
(ஆதாரம்: S.H.M முஹையதீன் எழுதிய உலகின் அறிவியல் முன்னோடிகள் எமும் நூலிலிருந்து...)

வேதியல் துறை

நவீன ரசாயனத்தின் தந்தை (Father pf Modern Chemistry) என அழைக்கப்படும் ஜாபிர் பின் ஹையான் என்பவர் தான் முதன் முதலில் ரசாயனத்தில் செயல்முறை ஆய்வினை மேற்கொண்டார். இவர் வாழ்ந்த காலம் கி பி 8 ம் நூற்றாண்டாகும். இவரது பெயரைக் கூட மேற்க்கதியர்கள் அல்கெபர்(Geber ) என்று திரித்து விட்டனர். இவரது முக்கியக் கண்டுப்பிடிப்புகளில் ஒன்று கந்தக அமிலம் ஆகும். இன்றைய நவீன உலகில் ஒரு நாட்டின் தொழில் முன்னேற்ற அளவை தீர்மானித்திட அந்நாடு பயன்படுத்தும் கந்தக அமிலத்தின் அளவே அடிப்படையாக கொள்ளப்படுகிறது. இதிலிருந்து பார்க்கும் போது இந்த அமிலம் கண்டுப்பிடிக்கப்பட்டதன் முக்கியத்துவத்தை உணர்ந்துக் கொள்ளலாம்.
 
ரசாயனம் பற்றி இவர் இயற்றிய நூல்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட நூறாகும். இவர் எழுதிய நூல்கள் அனைத்தும் இன்றளவும் அரபி மொழியில் பாதுக்காக்கபட்டுள்ளமை இவரது புகழுக்கு பெருமை சேர்பதாக அமைந்துள்ளது.
 
இவருக்கு பின் அல்ராஷி, சுன்னான், அல் ஹாஜிஸ், இப்னு வாசியா, மஸ்லமா இப்னு அஹ்மத், அபு மன்சூர், அல் பிருணி, இஸ்சுதீன் அலி இப்னு அல்ஜில்தகி  போன்ற வேதியல் அறிஞர்கள் தோன்றி வேதியல் துறைக்கு வியக்கதக்கப் பணிகள் பல புரிந்துள்ளனர்.
 
பல்வேறு தொழில்கள் சம்பந்தமான பெரும்பாலான கலைகள் தோன்றுவதற்கு இந்த முஸ்லிம் அறிஞர்கள் தங்களது ரசாயன அறிவை செயல்ப்படுத்தி உள்ளனர். இவர்களின் செயல்முறை ரசாயன அறிவை (Knowledge of Applied  Chemistry ) புரிந்துக் கொள்ள இங்கே காகித கலையே சான்றாகும்.
 

கணிதத் துறை

கணிதத்துறையில் முஸ்லிம்கள் ஆற்றிய சாதனைகள் மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் இன்றைய நவீன கணினிக்கு அவை தான் அடிப்படையாகும்.

எட்டாம் நூற்றாண்டில் இரண்டாம் பகுதியில் ஆட்சிப் புரிந்த அப்பாசியக் கலிபா அல்-மாமுனூடைய காலத்தில் தான் முறையான கணித விஞ்ஞான ஆய்வு தொடங்கிற்று. இந்தக் காலக்கட்டத்தில் கணித துறை ஆக்கங்கள் அனைத்தும் முஸ்லிம்களால் மட்டுமே இயற்றப்பட்டன. 11 ஆம் நூற்றாண்டு வரை கணிதத்துறையில் முஸ்லிம்களின் அடிப்படையான ஆக்கங்களே காணப்பட்டன. 12 ஆம் நூற்றாண்டில் இவர்களுடைய கணிதவியல் ஆக்கங்களை யூதர்களும்,கிறித்தவர்களும் அரபி மொழியிலிருந்து லத்தின் மற்றும் ஹீப்ரு மொழிகளில் மொழிபெயர்த்தனர். 13 ஆம் நூற்றாண்டு வரை யூத கிறித்துவர்களால் கூட இவர்களுடைய ஆக்கங்களுக்கு நிகரானவற்றை இயற்ற முடியவில்லை.


நாம் இன்று எழுதக்கூடிய 1,2,3 என்ற எங்கள் ஆங்கில எண்கள் என்றே பலர் தவறாக எண்ணிக்கொள்கின்றனர்.ஆனால் அவை அரபி எண்கள் என்று தான் அழைக்கபடுகின்றன. இந்த எண்கள் முறை இந்தியாவிலிருந்து அரபுலகதிற்கு வந்தது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் முஸ்லிம்கள் தாம் பிறரிடமிருந்து பெற்றக் அறிவுக் கலைக்கு என்றும் நன்றிக் கடன் பட்டவர்களாக, அறிவு துறையில் நேர்மையுடையவர்களாக (Intellectual Honesty ) விளங்கியுள்ளனர். அதன் காரணமாக வலப்புறத் திலிருந்து இடப்புறமாக எழுதப்படும் அரபி எழுத்து முறை வழக்கத்திற்கு மாறாக இந்த எண்கள் மட்டும் இடப்புறத்திலிருந்து வலபுறமாகத்தான் இன்றும் எழுதப்படுகின்றன. இன்றும் அரபுலகில் இந்த எண்கள் இந்திய எண்கள் என்றே அழைக்கப்படுகின்றன.

இந்தியர்களிடமிருந்து கணித எங்களைக் கற்றுக் கொண்ட முஸ்லிம்கள் அதற்கு நன்றி செலுத்தும் முகமாக இவ்வாறுதான் மேற்குலகத்திற்கு அதனை அறிமுகம் செய்து வைத்துள்ளனர்.
இன்னும் பூஜ்யம் அல்லது ஸைபர் என்ற எண் வடிவத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் எண் முறை கணிதத்தை (Arithmetic) முஸ்லிம்கள் மிகவும் எளிமைப் படுத்திவிட்டனர். Zero என்ற ஆங்கில சொல்லுக்கு பிரெஞ்சு மொழியில் Ciphra எனப்படும். இது Sifr என்ற அரபி சொல்லிலிருந்து தோன்றியதாகும். என்றால் பூஜ்யம் என்று பொருள்படும்.

ஒன்பதாம் நூற்றாண்டில் கலிபா அல் மாமூனுடைய காலத்தில் வாழ்ந்த மிகப் பெரும் கணித மேதை அபு அப்துல்லா முஹம்மது இப்னு மூசா அல்குவாரிஸ்மி என்பவராவர். இவர் வாழ்ந்த காலம் கி.பி ஆகும். 1,2,3 என்ற எண்முறை கணிதம் இவரது பெயராலேயே ஐரோப்பாவிலிருந்து அறிமுகமானது. அதனை ஆங்கிலத்தில் Algorithm என அழைப்பர். அல்குவாரிஸ்மி என்ற பெயரே Algorithm என மருவி வந்துள்ளது

Algebra என்ற குரிக்கணிதவியலின் தந்தையும் இவர்தான். இவர் கிதாபுல் ஜபர் வல் முகாபலா என்ற நூலினை எழுதியுள்ளார். அல்ஜபர் என்ற அரபி சொல்லிருந்து தான் Algebra என்ற சொல் பிறந்தது.
வடிவக்கணிதம் (Geometry ), முக்கோணக்கணிதம் (Trigonometry ) என்ற கணித முறைகள் ஏற்படுத்தியவர்களும் முஸ்லிம்களே.
அரபியர்களின் நடமாடும் கலைக்களஞ்சியம் என அழைக்கப்படும் அல்-கிந்தி என்பவர் 270 நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் சில கணித நூல்களும் அடங்கும். இவரது முழுப்பெயர் அபுயூசுப் யாகூப் இப்னு இசாக். இவர் வாழ்ந்தக் காலம் கி.பி 801 - 873 ஆகும்.

அல் குவாரிஸ்மி மற்றும் அல் கிந்தினுடைய எழுத்துகளின் வழியாக தான் எண்முறை கணிதம் மேற்குலகிற்கு நன்கு அறிமுகமானது. இவர்களுக்கு பின் எண்ணற்ற பல முஸ்லிம் கணித மேதைகள் தோன்றி கணிதவியல் விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கு தொண்டாற்றியுள்ளனர்.
 

வானவியல் துறை

வானவியல் துறைக்கு முஸ்லிம்கள் ஆற்றியப் பங்கு அளப்பரியது.

வானசாஸ்திரம் பற்றிய முறையான ஆய்வு 8 ம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் ஆட்சிப் புரிந்த அப்பாசியக் கலிபா அல் மன்சூருடைய காலத்தில் பாக்தாத் நகரில் துவங்கியது.


முதல் கட்டமாக இந்திய, பாரசிக, கிரேக்க மொழிகளில் இருந்த வானசாஸ்திர நூல்களை எல்லாம் அரபி மொழியில் மொழியாக்கம் செய்தனர்.


வான ஆராய்ச்சியில் முஸ்லிம்கள் பெரும் ஆர்வம் காட்டியதன் விளைவாக மிக குறுகியக் காலத்தில் எண்ணற்ற முஸ்லிம் வானவியலாளர்கள் உருவாகியதோடு, 10 ம் நூற்றாண்டின் இறுதியில் பாக்தாத் பெருநகரில் முஸ்லிம் வானவியல் அறிஞர்கள் ஒன்றுக் கூடினர். 11 ம், 12 ம் நூற்றாண்டுகளில் ஸ்பெயினில் வானாராய்ச்சி செழித்தோங்கி வளர்ந்தது. இந்த காலக்கட்டத்தில் விண் ஆராய்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டனர் முஸ்லிம் விஞ்ஞானிகள். மேலும் இத்துறை குறித்து அரும் பெரும் படைப்புகளையும் உருவாக்கிவிட்டு சென்றுள்ளனர்.


13 ம், 14 ம் நூற்றாண்டுகளில் இந்த வானாராய்ச்சி சாதனையின் சிகரத்தை தொட்டது. இந்தக் காலக்கட்டங்களில் யூதர்களும் கிறித்துவர்களும் லத்தின் மற்றும் ஹிப்ரு மொழியில் இந்த படைப்புக்களை எல்லாம் மொழிப்பெயர்த்தனர். வானவியல் துறையில் கலங்கரை விளக்கமாக திகழ்ந்ததாக சொல்லப்படும் டாலமி (Ptolemy ) என்பவர் எழுதிய "Almagest " என்ற பிரபல்ய வானநூல் ஸ்பெயின் முஸ்லிம் விஞ்ஞானிகளால் நன்கு அலசி ஆராயப்பட்டு கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது குறிபிடதக்கதொரு நிகழ்வாகும்.

இது மட்டுமின்றி வானசாஸ்திர அட்டவணைகளை (Astronomical Tables ) தொகுத்ததன் மூலம் நட்சத்திரங்களின் நிலைகளையும் அளவுகளையும் பிரதிப்பலிக்கும் வான் கோளங்களை முஸ்லிம் வானவியலாளர்கள் தயாரித்தனர்.

இப்ராஹீம் இப்னு ஹபீப் அல்பாசாரி என்பவர்தான் முதன் முதலில் சூரியனின் உயர்வை அளக்கும் astrolabe என்ற கருவியை கண்டுப்பிடித்தார். இதனை தமிழில் சூரிய உயர்வு மானி என்றழைக்கலாம்.

இந்தக் காலப்பகுதியில் தோன்றிய

வானவியலாளர்களிலே மிகவும் பிரசித்திப் பெற்றவர் அப்துல்லாஹ் முஹம்மது இப்னு ஜாபிர் சீனான் அல்பத்தானி என்பவராவர். இவர் வாழ்ந்தக் காலம் கி பி 858 - 929 ஆகும். அல்பத்தானி இளம் வயதிலிருந்தே 42 ஆண்டுகள் தொடர்ந்து வானாராய்ச்சியில் ஈடுப்பட்டு முக்கியமான பல கண்டுப்பிடிப்புகளை உலகிற்கு வழங்கினார். இவருடைய மிகவும் முக்கியமான கண்டுப்பிடிப்புகளில் ஒன்றுதான் 365 நாட்கள், 5 மணி நேரங்கள், 46 நிமிடங்கள், 24 வினாடிகள் என்று சூரிய ஆண்டுக் கணக்கை தீர்மானித்ததாகும். இது இன்றைய நவீன விண்ணாராய்ச்சி மதிப்பீட்டிற்கு ஒத்ததாக விளங்குகின்றது.


அபுல் ஹுசைன் அப்துல் ரஹ்மான் அல் சூபி என்பவர் 10 ம் நூற்றாண்டில் மாபெரும் வானவியல் அறிஞராக திகழ்ந்தார். இவர் வாழ்ந்தக் காலம் கி பி 903 - 966 வரை ஆகும். இவர் பாரசீகத்தை சார்ந்தவர். இவர்தான் முதன்முதலில் நட்சத்திரங்களின் நிறம். அளவில் தென்படும் மாற்றதியும் அவற்றின் சரியான இயக்கத்தையும் பற்றிக் கண்டறிந்தார். இவர் எழுதிய சுவார் அல் கவாகிப் (நிலையான நட்சத்திரங்களின் நூல்) மிகவும் பிரபல்யமானது.


இவ்வாறு வானவியல் துறையில் விண்மீன்களைப் போன்று பிரகாசிக்கும் எண்ணற்ற முஸ்லிம் வானவியலாளர்களின் வாழ்வு, ஆராய்ச்சிப், சாதனைப் பற்றிய பட்டியல் நீண்டுக் கொண்டு செல்கிறது. 
 
 
 மருத்துவத் துறை

மருத்துவர்களின் இளவரசன் (Prince Of Physicians) என்று அடைமொழி சூட்டப்பட்ட அபூ அலி ஹுசைன் இப்னு அப்துல்லாஹ் இப்னு சீனா கி பி (980 – 1036) மருத்துவ துறையின் மாமேதையாக விளங்கினார். இப்னு சீனா 10 ம் வயதிலையே இஸ்லாமிய அடிப்படை அறிவை பெற்று திருக்குர்ஆன் முழுவதையும் மனனம் செய்தார். இவர் இளம் வயதிலையே பல்வேறு ஆசிரியர்களிடம் அல் ஜிப்ரா, வான சாஸ்திரம், தர்க்கவியல், தத்துவம், இறையியல் என்று பல்வேறு விசயங்களை கற்றுக் கொண்டார்.

இவர் தனது 16 ம் வயதில் மருத்துவத்தில் கவனம் செலுத்தினார். இவர் 18 ம் வயதில் புகழ்பெற்ற மருத்துவராக விளங்கினார். மன்னர் நூஹ் இப்னு மன்சூர் சாமாணி என்பவர் நோய்வாய் பட்டிருந்தபோது அவரது நோயை குணப்படுத்த முடியாமல் பல்வேறு மருத்துவர்கள் திரும்பிச் செல்லவே, இறுதியாக இப்னு சீனா அழைக்கப்பட்டார். மன்னரின் நோயை குணப்படுத்தினார் இப்னு சீனா. குணமாகிவிட்ட மகிழ்ச்சிப் பெருக்கால் மன்னர் யாருக்கும் அனுமதிக்காத தனது அரச நூலகத்தை பயன்படுத்தும் உரிமையை இப்னு சீனாவிற்கு வழங்கினார். தனது சிகிச்சைக்கு கைமாறாக இதனை கருதிய இப்னு சீனா, அந்நூலகத்தில் பொதிந்திருந்த அரும்பெரும் நூல்களை எல்லாம் கற்று பயன் அடைந்தார்.
இப்னு சீனா கிட்டத்தட்ட 200 நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் மருத்துவ நூல்கள் மட்டும் 16 ஆகும். இதில் 8 நூல்கள் செய்யுள் வடிவில் அமைந்துள்ளன. அவர் எழுதிய நூல்களிலே உலகப் புகழ்ப்பெற்ற நூல்
அல் கானூன் பித்திப் ஆகும்.

இந்நூல் 1270 ல் ஹீப்ரு (யூதர்களின்) மொழியிலும் லத்தின் மொழியிலும் மொழிப்பெயர்க்கப்பட்டு உள்ளது. இதன்
லத்தின் மொழியாக்கம் ஐரோப்பாவில் வெளியிடப்பட்டதிலிருந்து 30 பதிப்புகளை கண்டுள்ளது.

15 ம் நூற்றாண்டில் இந்நூல் குறித்து பல்வேறு விளக்கவுரை நூல்கள் வெளிவந்துள்ளன. இந்நூலில் உள்ள உடற்கூறு பகுதி மட்டும் நீக்கப்பட்டு, டாக்டர்.O . C Gruner என்பவரால் 1930 ல் ஆங்கில மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது என்றால் இந்த 21 ம் நூற்றாண்டு வரை நீடித்து நிற்கும் இதன் செல்வாக்கை புரிந்துக் கொள்ளலாம்.


இவ்வாறு இப்னு சீனா எழுதிய "அல் - கானூன் பித்திப்" என்ற மருத்துவ கலைக்களஞ்சியம் 15 ம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய பல்கலைகழகங்களின் மருத்துவ பாடத்திட்டத்தில் முக்கிய நூலாக சேர்க்கப்பட்டிருந்தது.

பிரான்ஸ் நாட்டில் அமைந்து இருக்கும் பாரிஸ் மருத்துவ பல்கலைகழகத்தில் இவரது பெயரில் ஆய்வகம் ஒன்று அமைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

(S.H.M. முஹையதீன் அவர்கள் எழுதிய உலகின் அறிவியல் முன்னோடிகள் முஸ்லிம்கள் எனும் நூலிலிருந்து...


0 comments:

Post a Comment