இறை இல்லமான கஃபதுல்லாஹ்

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

நபி இல்லமான மதீனா முனவ்வரா

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

முன்னாள் கிப்லாவான பைத்துல் முகத்தஸ்

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

இந்தியாவின் இதயமான பாபரி மஸ்ஜித்

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

முஸ்லிம்களின் உயிரான திருக்கலிமா

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Saturday, February 13, 2016

மீலாதும் மௌலிதும் கொண்டாடுவதற்கு நபிவழியில் ஆதாரம்​​

மீலாதும் மௌலிதும்  கொண்டாடுவதற்கு நபிவழியில்  ஆதாரம்​​


மீலாத் கொண்டாடுவதற்கு ஆதாரம்                                                              



நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் தங்களுக்கு நபித்துவம் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர் (அவர்களின் பிறந்த தினத்தில்) அவர்களுக்காக சில மிருகங்களை அறுத்து   பங்கிட்டார்கள்.

பைஹகி 43, தபரானி, பத்ஹுல் பாரி


ஹதீஸ் விளக்கம் - நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் பிறந்தபோதே அவர்களுக்காக அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப் அகீகா கொடுத்துவிட்டார்கள். ஏற்கனவே செய்து முடித்த ஷரியத்துடைய அமல் ஒன்றை திரும்ப செய்ய முடியாது. எனவே, இது நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் தமது பிறந்த தினத்தை கொண்டாடுவதற்காகவும், அத்தினத்தில் https://drive.google.com/open?id=0BzM6sH3KI8qKbVJ0Yl9BSjNRZm8


அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதற்காகவும் இந்த மிருகங்களை அறுத்து உணவு சமைத்து மக்களுக்கு பங்கிட்டுள்ளார்கள். எனவே நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்களின் பிறந்த தினத்தை கொண்டாடுவது முஸ்தஹப் (விரும்பத்தக்க நற்செயல்) ஆகும் என மாபெரும் ஹதீஸ் கலை வல்லுநர், இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் பத்வா வழங்கியுள்ளார்கள். ​

இமாம் ஜலாலுத்தீன் சுயுதி (ரலியல்லாஹு அன்ஹு) ​
ஹுஸ்ன் மக்ஸித் பி அமல் இல் மௌலித் 64-6​​
​​​

நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்களிடம் திங்கட்கிழமை நாள் நோன்பு நோற்பதன் காரணம் பற்றி வினவப்பட்டபோது அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். அன்றைய தினத்தில்தான் நான் பிறந்தேன். மேலும் அன்றுதான் என் மீது வஹீ இறக்கப்பட்டது.

ஸஹிஹுல் முஸ்லிம் 1162 - 198, முஸ்னத் அஹ்மத் 5- 299, மிஷ்காத் 2045


ஸுவைபா அபூலஹபின் அடிமைப் பெண்ணாவார். அபூலஹப் அவரை விடுதலை செய்திருந்தார். அவர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்குப் பாலூட்டினார். அபூலஹப் இறந்தபோது அவருடைய குடும்பத்தாரில் ஒருவர் அவரைக் (கனவில்) கண்டார். அபூலஹப் மோசமான நிலையில் அவருக்குக் காட்டப்பட்டார். அபூலஹபிடம் (மரணத்திற்குப் பிறகு) நீ எதிர்கொண்டது என்ன என்று அவர் கேட்டார். உங்களை விட்டுப் பிரிந்த பின் ஒரு சுகத்தையும் நான் சந்திக்கவில்லை. ஆயினும் நான் ஸுவைபாவை விடுதலை செய்ததற்குப் பிரதியாக இந்த விரல்களினூடே எனக்கு நீர் புகட்டப்படுகிறது என்று கூறினார்.

ஹழ்ரத் உர்வா (ரலியல்லாஹு அன்ஹு)
ஸஹீஹுல் புகாரி - 5101​


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் பிறந்தபோது அபூலஹபின் அடிமை ஸுவைபா அபூலஹபிடம் வந்து உங்கள் சகோதரருக்கு குழந்தை கிடைத்துள்ளதுஎன்று கூறினார். அதற்கு சந்தோஷத்தில் அபூலஹப் தன் கை விரலால் சைகை செய்து, அவரை விடுதலை செய்தான். ​பிற்காலத்தில் அபூலஹப் அல்லாஹ்வின் எதிரியானான். கப்ர் வாழ்க்கையில் எப்போதும் வேதனைப்படும் அவனுக்கு, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் பிறப்பை சந்தோஷப்படுத்தி கௌரவித்ததற்காக, அவர்கள் பிறந்த ஒவ்வொரு திங்கட்கிழமையும் சைகை காட்டிய அந்த விரலால் மட்டும் அவனுக்கு தண்ணீர் புகட்டப்படுகிறது.

​​
​​நபிகள் நாயகம் மீது மௌலித் ஓதுவதற்கு ஆதாரம்​​

♣  நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களால் அமைக்கப்பட்ட தனி மேடையில் (மிம்பரில்) நின்று ஹஸ்ஸான் இப்னு ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களை புகழ்ந்து கவிதை பாட, அதனைக் கேட்டு மகிழ்ந்த நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் "அல்லாஹ்வின் தூதரை புகழும் காலமெல்லாம், ரூஹுல் குத்ஸியை (ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம்) அவர்களை கொண்டு ஹஸ்ஸானை நிச்சயமாக அல்லாஹ் வலிமைப்படுத்துவானாக! என்று கூறி ஹஸ்ஸான் இப்னு ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை வாழ்த்தினார்கள்.

ஸஹிஹுல் புகாரி

♣   மஸ்ஜிதுந் நபவீயில் (நபித் தோழரும் கவிஞருமான) ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரலியல்லாஹு அன்ஹு) கவிபாடிக் கொண்டிருக்க, உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அங்கு வந்தார்கள். (ஹஸ்ஸான் (ரலியல்லாஹு அன்ஹு) பள்ளிவாசலில் கவிபாடுவதை உமர் (ரலியல்லாஹு அன்ஹு) கண்டித்தார்கள்)

​​அதற்கு ஹஸ்ஸான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்,
"நான் இந்தப் பள்ளிவாசலில் உங்களை விடச் சிறந்தவர் (நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள்) இருக்கும் போதே (நான்) கவிபாடிக் கொண்டிருந்தேன்" என்று கூறிவிட்டு, அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் பக்கம் திரும்பி, 'அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கிறேன். (என்னிடம்) இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள்,"(ஹஸ்ஸானே!) என் சார்பாக (எதிரிகளின் வசைக் கவிகளுக்கு) நீங்கள் (கவிகளாலேயே) பதிலளியுங்கள். இறைவா! ஹஸ்ஸானுக்கு ரூஹுல் குத்ஸ் (தூய ஆத்மா வானவர் ஜிப்ரீல் அவர்களின்) மூலம் துணை புரிவாயாக!" என்று கூறியதை நீங்கள் செவியுற்றிருக்கிறீர்களா?' என்று கேட்டார்கள்.

​​அதற்கு அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) "ஆம்" (செவியுற்றிருக்கிறேன்)' என்று பதிலளித்தார்கள்.

ஹழ்ரத் ஸயீத் இப்னு முஸய்யப் (ரலியல்லாஹு அன்ஹு)​​
​​ஸஹிஹுல் புகாரி 3212
​​​
​​​அன்னை ஆயிஷா (ரலியல்லாஹூ அன்ஹா) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
'நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்கள், ஹஸ்ஸான் (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்களுக்கு கூறினார்கள்: (ஹஸ்ஸானே) நீங்கள் இறைவனுக்காகவும், இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்களுக்காகவும் கவி பாடும் காலமெல்லாம் பரிசுத்த ஆன்மாவான ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) உங்களை பலப்படுத்திக்கொண்டே இருப்பார்கள்.

முஸ்லிம் 4545
​​
https://4.bp.blogspot.com/-OregV7l6wsQ/Voi2FBY4efI/AAAAAAAABbs/fPEx5GLX7GQ/s320/Rabi-ul-Awwal-moon-sighted-EidMiladunNabi-PBUH-Jan14_1-2-2014_132676_l.jpg
மஸ்ஜிதுன் நபவியில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களும் ஸஹாபா பெருமக்களும் குழுமியிருந்த திருச்சபையில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களை ஸுஆத் என்ற அழகிய மங்கைக்கு ஒப்பிட்டு கஹ்ப் பின் சுஹைர் ரலியல்லாஹு அன்ஹு என்ற ஸஹாபி கவிஞர் பாடிய போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் மகிழ்ச்சியால் தனது மேனியில் இருந்த போர்வையை எடுத்து அந்த ஸஹாபியின் மேல் போர்த்தி அத்துடன் 100 ஓட்டகைகளையும் அன்பளிப்பாக வழங்கி கௌரவித்தார்கள்.

ஹாகிம் - 3-578, ரத்துள் முஹ்தார் - 1-47, அகீததுஸ் சுன்னா 318

கஃபு இப்னு சுஹைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பள்ளிவாசலில் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை புகழ்ந்து படித்தார்கள்.

ஹழ்ரத் இப்னு ஜதஆன் ரலியல்லாஹு அன்ஹு
ஹாகிம் 6555


பள்ளிவாசலில் ஹஸ்ஸான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கவிபாடிக் கொண்டிருந்த போது அங்கு சென்ற உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கடைக்கண் பார்வையால் பார்த்தார்கள். அப்போது ஹஸ்ஸான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள்: உங்களை விட சிறந்தவரான இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இருந்தபோதே இப்பள்ளிவாசலில் கவி பாடியுள்ளேன்.

ஹழ்ரத் அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)
ஸஹிஹுல் புகாரீ - 2973,  ஸஹிஹுல் முஸ்லிம் - 4539


♣   ​அல்லாஹ்வின் தூதர்  ஸல்லல்ல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாகக் கவிதையிலும், ஞானம் (ஹிக்மத்) உண்டு.

ஹழ்ரத் உபை பின் கஅப் (ரலியல்லாஹு அன்ஹு)
ஸஹிஹுல்  புகாரி 6145,  அபூதாவூத் 5010,  இப்னு மாஜா 3755,  திர்மிதி 2844


♣   அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
திடமாக எனக்கு பல பெயர்கள் உள்ளன, நான் "முஹம்மத்" (புகழபடுபவன்) , நான் "அஹ்மத்" (அல்லாஹ்வினால் அதிகம் புகழபட்டவன்), நான் "மாஹி" (குப்'ரை அழிப்பவன்). நான் "ஹாஷிர்" (எனக்கு பின்னால் என் வழி தொடரும் சமுதாயம் கொண்ட இருப்பவன்), நான் "ஆகிப்" (எனக்கு பின்னால் எந்த நபியும் இல்லாது இருப்பவன்).

ஹழ்ரத் ஜுபைர் பின் முத்'இம் ரழியல்லாஹு அன்ஹு
ஸஹிஹுல் புகாரி, ஸஹிஹுல் முஸ்லிம் - 2849, திர்மிதி, அஹ்மத்​​

♣  நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்)  கூறியுள்ளார்கள்:
"நிச்சயமாக நான் அல்லாஹுதஆலாவின் பால் அன்பளிப்பு செய்யப்பட்ட ரஹ்மத்தாக இருக்கிறேன்"

மிஷ்காத் – 5800, தாரமி – 15, பைஹகி ஸுஃபுல் ஈமான் – 1446​​​ ​​​​​


♣  கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் ) அன்னவர்கள் கூறினார்கள்:
"நானே முன்னோர் பின்னோர் யாவரிலும் மிக சங்கைகுரியவனாக இருக்கின்றேன்."

திர்மிதி 3131, தாரமி 47, முஸ்னத் அஹமத் 3 - 164, மிஷ்காத் 5762, 5920​​​​​​
​​
​​​
வலிமார்கள் மீது மௌலித் ஓதுவதற்கு ஆதாரம்​​

எனக்கு திருமணம் நடந்த பின்னர், நபிகள் நாயகம் ஸல்லல்ல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் என்னிடம் வந்தார்கள். எனக்கருகில் இப்போது நீங்கள் (ஹதீஸின் இரண்டாவது அறிவிப்பாளர்) அமர்ந்து இருப்பது போல் (அத்தகைய தூரத்தில்) என் விரிப்பின் மீது அமர்ந்தார்கள். அப்போது சில சிறுமிகள் பத்ர் போரில் ஸஹீதான முன்னோர்களை புகழ்ந்து பாடி கஞ்சிராக்களை (தஃப்) அடித்துக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு சிறுமி, “எங்களிடையே இறை தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்கவிருப்பதையும் அறிவார்என்று கூறினாள். உடனே நபி ஸல்லல்ல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள். இதை விட்டு விட்டு நீ முன்பு சொல்லி கொண்டிருந்ததை சொல் என்றார்கள்.
ஹழ்ரத் ருபய்யிஃ  பின்த் முஅவ்வித் ரலியல்லாஹு அன்ஹா​
ஸஹிஹுல் புகாரி 5147,  அபூதாவூத்,  திர்மிதி

​எனது திருமண வைபவத்தின் போது இறைத்தூதர் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் எனது இல்லம் வந்தார்கள். அந்த நேரத்தில் சிறுமிகள் பத்ர் போரில் ஷஹீதான முன்னோர்களை புகழ்ந்து பாடி தஃப் அடித்துக் கொண்டிந்தார்கள்.

ஹழ்ரத் ருபய்யிஃ  பின்த் மு அவ்வித் ரழியல்லாஹு அன்ஹா
ஸஹிஹுல் புகாரி 3700,  திர்மிதி :1010,  அபூதாவூத் : 4276​​

♣  இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஹாஜிர் மற்றும் அன்ஸார் தோழர்களுக்கு பிராத்தனை செய்து கவி படித்தார்கள். திண்ணமாக, வாழ்வு என்பது மறுமையின் வாழ்வுதான். இறைவனே! அன்ஸார் முஹாஜிர் தோழர்களை மன்னிப்பாயாக! நிச்சயமாக மறுமை நலனைத் தவிர வேறு எந்த நலனும் கிடையாது. இறைவனே! அன்ஸார் முஹாஜிர் தோழர்களுக்கு பரகத் (அபிவிருத்தி) செய்வாயாக! உறுதியாக மறுமை வாழ்வைத் தவிர வேறு எந்த வாழ்வுமில்லை. இறைவனே! அன்ஸார் - முஹாஜிர் தோழர்களுக்கு கருணை புரிவாயாக!

ஹழ்ரத் அனஸ் ரழியல்லாஹு அன்ஹு
ஸஹிஹுல் புகாரி  2622,2623,2741,3616

♣  நாங்கள் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களை சந்திக்க சென்றோம். அப்போது ஹஸ்ஸான் இப்னு ஃதாபித் ரழியல்லாஹு அன்ஹு தனது கவிகளின் மூலம் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களை புகழ்ந்து பாடிக் கொண்டிந்தார்கள் (அவற்றில் ஒன்று) ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா நல்லொழுக்கமும், நுண்ணறிவுமிக்கவர்கள். ஐயத்திற்கு அப்பாற்பட்டவர்கள். எந்தவொரு பெண்ணை பற்றியும் தவறாக பேசமாட்டார்கள்.
ஹழ்ரத் மஸ்ரூக் ரழியல்லாஹு அன்ஹு
ஸஹிஹுல் புகாரி  3831,  ஸஹிஹ் முஸ்லிம் 4543​​


♣   இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
​உங்களில் முன் சென்றோர்களின் நல்லவைகளை எடுத்துக்கூறுங்கள்.

​ஹழ்ரத் இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு)
திர்மிதி 940, அபூதாவூத் 4254​​​


♣   கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம்) அன்னவர்கள் கூறினார்கள்:
நபிமார்களை நினைவு கூறுவது வணக்கமாகும். ஸாலிஹீன்களை நினைவு கூறுவது பாவ பரிகாரமாகும்.

​அல்ஜாமிஉஸ் ஸகீர் 2 – 299
​​​

♣  ஜனாஸாவைக் கடந்து சென்ற (அருமைத் தோழர்கள்) புகழ்ந்து பேசினார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் கடமையாகிவிட்டது என்று கூறினார்கள். எது கடமையானது என்று உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கேட்டார்கள். இறந்துபோன இம்மனிதரை நீங்கள் புகழ்ந்தீர்கள். எனவே, அவருக்கு சொர்க்கம் கடமையாகிவிட்டது என கூறினார்கள்.

ஹழ்ரத் அனஸ் ரழியல்லாஹு அன்ஹு
ஸஹிஹுல் ​புகாரி எண் 1278,  ஸஹிஹ் முஸ்லிம் 1578 ​​​
​​​

ஸஹாபாக்கள் ஓதிய மௌலித்
​​
♣  ஹழ்ரத்  ஹஸ்ஸான் இப்னு ஃதாபித் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஒதிய மவ்லித்:

1) இறைமறுப்பாளர்களே!) முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை குறைவுபடுத்தி நீங்கள் கவிபாடுகிறீர்கள். அதற்கு பதிலாக அவர்களை நான் புகழ்ந்து பாடுவேன். அதற்குரிய நற்கூலி இறைவனிடமுண்டு.

2) நல்லவராகவும் நேரிய வழியில் உள்ளவராகவும் இருக்கிற இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை குறைவுபடுத்தி பேசுகிறீர்கள். வாக்குறுதியை நிறைவேற்றுவது அவர்களின் அழகிய குணமாகும்.

3) அவர்கள் விஷயத்தில் இறைவன் கூறினான்: சத்தியத்தைக் கூறுகிற ஒர் அடியாரை திருத்தூதராக அனுப்பியுள்ளேன் அதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை.

ஹழ்ரத் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா
ஸஹிஹுல் முஸ்லிம் - 4545

♣  ஹழ்ரத்  அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஒதிய மவ்லித்:

1) எங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார்கள். வைகறைப்பொழுது புலரும் நேரத்தில் அவர்கள் இறைவேதத்தை ஒதுகிறார்கள்.

2) குருட்டுத் தன்மையில் இருந்த எங்களுக்கு நேர்வழி காட்டினார்கள். அவர்கள் கூறியது நிச்சயம் நிகழும் என எங்கள் உள்ளங்கள் உறுதியாக நம்புகின்றன.

3) இரவில் இணைவைப்பாளர்கள் படுக்கையில் ஆழ்ந்து கிடக்கும் போது நபியவர்கள் படுக்கையிலிருந்து எழுந்து தொழுவார்கள்.

ஹழ்ரத் அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு)
ஸஹிஹுல் புகாரி - 1087

♣  ஹழ்ரத்  கஃப் இப்னு ஜுஹைர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஒதிய மவ்லித்:

1) இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எனக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்களென எனக்கு தெரிவிக்கப்பட்டது. மன்னிப்பு என்பது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே.

2) மன்னிப்புத் தேடியவனாக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் நான் வந்தேன். அம்மன்னிப்பு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் ஒப்புகொள்ளப்பட்டது.

3) திண்ணமாக இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒளி கொடுக்கும் பேரொளியாகவும்,இறைவனின் வாட்களில் உருவிய வாளாகவும் உள்ளார்கள்.

ஹழ்ரத் ஆஸிம் இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு)
ஹாகிம் - 6558

♣   ​கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மகிழ்ச்சி அடைந்தால் அவர்களின் முகம் சந்திரனில் இருந்து (வெட்டி எடுக்கப்பட்டு) ள்ள ஒரு துண்டை போன்று (பேரொளியால்) பிரகாசிக்க துவங்கி விடும்.
ஹழ்ரத் கஹ்பு பின் மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு)
ஸஹிஹுல் ​​புகாரி 3556 , முஸ்லிம் 2769 , முஸ்னத் அஹமத் 3 - 459 , மிஷ்காத் 5798​

♣  ​​நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் முகம் சூரியனை போன்றும் சந்திரனை போன்றும் வட்ட வடிவமாக இருந்தது.
ஹழ்ரத் ஜாபிர் (ரலியல்லாஹு அன்ஹு)
ஸஹிஹ் முஸ்லிம் 2344, திர்மிதி 3636, மிஷ்காத் 515
​​​
♣  ​பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் திருமுகம் வாளைபோன்று (மின்னக்கூடியதாக) இருந்ததா என்று பர்ராஉ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் இல்லை, சந்திரனை போன்று இருந்தது என்று கூறினார்கள்.

​​ஹழ்ரத் அபூ இஸ்ஹாக் (ரலியல்லாஹு அன்ஹு )
ஸஹிஹுல் ​​புகாரி  3552​​

​​
​​​♣  ஹழ்ரத் அபூஹூரைரா (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
'நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்களை விட மிக அழகான எந்த வஸ்துவையும் நான் கண்டதில்லை. அவர்களின் முகத்தில் சூரியன் ஓடிக்கொண்டிருப்பது போன்று இருப்பார்கள்.'

திர்மிதி 3648, மிஷ்காத் 5795, முஸ்னத் அஹ்மத் 2-350


♣  ஸய்யிதத்துனா ஆயிஷா (ரலியல்லாஹூ அன்ஹா) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
'கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் மிக்க மகிழ்ச்சியுடன் என்னிடத்தில் நுழைந்தார்கள். அப்போது அவர்களுடைய நெற்றிக் கோடுகள் (மின்னலைப் போன்று) பளிச்சிடக் கூடியவைகளாக இருந்தன.

​புகாரி 3555, 6770, 6771


பறா இப்னு ஆஸிகப் (ரலியல்லாஹூ அன்ஹூ) அன்னவர்கள் நபிகளாரைப்பற்றி வர்ணிக்கையில், 'அண்ணலார் அன்னவர்களை விட அழகான ஒருவரை என் வாழ்க்கையில் நான் பார்த்ததே இல்லை' என்றும் அவர்களின் முகம் சந்திரன் போல் இருந்தது என்றும் கூறுகிறார்கள்.

​(நூல்: புகாரி 4ம் பாகம், 165ம் பக்கம்)


♣ ​​ ஹழ்ரத் அபூ ஜூஹைஃபா (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்:
'கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் திருக்கரத்தை எடுத்து என் முகத்தின் மீது வைத்துக்கொண்டேன். அது பனிக்கட்டியை விட குளிர்ச்சியானதாகவும், கஸ்தூரியை விட நறுமணமிக்கதாகவும் இருந்தது.

ஸஹிஹுல் ​​புகாரி 3553


♣  ஹழ்ரத் ஜாபிர் இப்னு ஸமுரா (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
ரஸூலே கரீம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்களின் திருவதனம் சூரிய, சந்திரனைப்போல் வட்ட வடிவமாய் ஜொலித்துக் கொண்டிருக்கும்.

​முஸ்லிம் 2344, திர்மிதி 3636, மிஷ்காத் - 5779


♣  ​​​ஹழ்ரத் ஜாபிர் இப்னு ஸமூரா (ரலியல்லாஹூ அன்ஹூ) அன்னவர்கள் அறிவிக்கிறார்கள்:
'சந்திரன் சூழ்ந்த இரவில் நான் கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்களை பார்த்தேன். பின்னர் சந்திரனையும் பார்த்தேன். (அச்சமயம்) கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் மீது சிவப்பு நிறப்போர்வையொன்று இருந்தது. அப்போது அன்னவர்கள் சந்திரனை விட அழகாக இருந்தார்கள்.

​திர்மிதி 2811, தாரமி 57, மிஷ்காத் 5794


♣  ​​ஹழ்ரத் அபூஉபைதா இப்னு முஹம்மத் (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
'நான் ருபய்யிஃ (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்களிடத்தில், கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்களை பற்றி எனக்கு கூறுங்கள் என்று கேட்டேன். அதற்கவர்கள் 'அருமை மகனே! அருமை நபி; (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்களை நீ பார்த்தாயானால், சூரியன் உதிப்பதாகவே காண்பாய் என்று கூறினார்கள்.

​தாரமி 60, மிஷ்காத் 5793


♣  ​ஹழ்ரத் ஆஸிம் இப்னு உமர் (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
'நிச்சயமாக இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் ஒளி கொடுக்கும் பேரொளியாகவும், இறைவனின் வாள்களில் உருவிய வாளாகவும் உள்ளார்கள்.

​ஹாகிம் 6558


♣  ​அன்னை ஆயிஷா (ரலியல்லாஹூ அன்ஹா) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
'இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் ஹஸ்ஸான் (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்களுக்கு, பள்ளிவாசலில் ஒரு மிம்பரை அமைத்துக் கொடுத்தார்கள். அதிலே அவர்கள் ஏறி நின்று இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்களையே புகழ்வார்கள்.

​திர்மிதி 2773


♣  ​ஹழ்ரத் இப்னு ஜத்ஆன் (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
'கஃபு இப்னு ஸூஹைர் (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்கள் பள்ளிவாசலில் இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்களை புகழ்ந்து படித்தார்கள்.

​ஹாகிம் 6555


♣  ​ ஹழ்ரத் ஹஸ்ஸான் (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்கள் கூறினார்கள்:
'(இறைமறுப்பாளர்களே!) இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்களை குறைவுப்படுத்தி கவி பாடுகிறீர்கள். அதற்கு பதிலளிக்கும் வகையில் அன்னவர்களை நான் புகழந்து படிப்பேன். அல்லாஹ்விடம் அதற்குரிய நற்கூலி உண்டு.

​​முஸ்லிம் 4545



நபிகள் நாயகம் ​ அன்னவர்கள் தங்களை புகழ்ந்து கூறிய ஹதீஸ்கள்
அல்லாஹூதஆலா தமக்கு வழங்கிய சிறப்புகளையும் உயர்வுகளையும் பற்றி நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அன்னவர்களே கூறிய அல்-ஹதீஸ்களில் சில:

♣  அல்லாஹூதஆலா அருள்களை என் கையில் கொடுக்கிறான். அவைகளை நான் பங்கீடு செய்கிறேன்.
​ஸஹிஹுல்​ புகாரி 71

♣  பூமியிலுள்ள கருவூலங்களின் திறவுகோல்கள் எனக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

​ஸஹிஹுல் புகாரி 1344

♣   நான் உங்களைப் போன்றவன் அல்ல. (அல்லாஹ்விடமிருந்து) உண்ணவும் பருகவும் எனக்கு வழங்கப்படுகிறது.

​ஸஹிஹுல் புகாரி 1922

♣  மறுமை நாளையில் நான்தான் 'லிவாஉல் ஹம்து' எனும் புகழுக்குரிய கொடியை ஏந்தி நிற்பேன்.

​திர்மிதி 3615, 3616, இப்னு மாஜா 4308, முஸ்னத் அஹ்மத் 2-243, தாரமி 47

♣  ஆதம் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் முதற் கொண்டு அனைவரும் அதன் (லிவாஉல் ஹம்து கொடியின்) கீழ்தான் இருப்பார்கள்.

​திர்மிதி 3615, 3616, இப்னு மாஜா 4308

♣  யார் என்னை கனவில் கண்டாரோ, அவர் என்னை விழிப்பில் காணுவார்.
ஸஹிஹுல் புகாரி 6993, முஸ்லிம், இப்னு மாஜா 3900, முஸ்னத், அஹ்மத் 5-306, மிஷ்காத் 4611

♣  எனது உள்ளங்கையைப் பார்ப்பது போல் உலகம் முழுவதையும் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.  (​திர்மிதி)

♣  நிச்சயமாக நான் அல்லாஹூ தஆலாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ரஹ்மத்தாக இருக்கிறேன்.

​மிஷ்காத் 5800, தாரமி 15, ஸூபுல் ஈமான் 1446

♣  நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் மக்களில் நான்தான் மிகவும் இறைபக்தி மிக்கவன்.  (நஸாஈ)

♣  நான் அல்லாஹ்வின்பாலிருந்து நற்குணங்கள் முழுமைப்படுத்துவதற்காக அனுப்பப்பட்டுள்ளேன்.  (முஅத்தா)

மூர்ச்சையடைந்து விழும் (மறுமை) நாளில், மக்கள் மூர்ச்சையடைந்து கீழே விழுந்து விடுவார்கள். நான்தான் (மயக்கம் தெளிந்து) எழுபவர்களில் முதல் ஆளாக இருப்பேன்.

​ஸஹிஹுல் புகாரி 6518

♣  சுவனத்தில் பரிந்துரை செய்பவர்களில் முதலாமவன் நான்.

​முஸ்லிம் 93

♣  நபிமார்களில் எந்த நபியும் நான் உண்மை படுத்தப்பட்ட அளவிற்கு உண்மை படுத்தப்படவில்லை.

​முஸ்லிம் 93

♣  ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தம் உடலுக்கும், ருஹூக்கும் இடையில் இருந்தபோதே நான் நபிதான்.

​திர்மிதி, முஸ்னத் அஹ்மத் 4-66, 5-379

ஒவ்வொரு நபியும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு (நபியாக) அனுப்பப்பட்டார்கள். ஆனால் நான் மக்கள் யாவருக்கும் ரஸூலாக அனுப்பப்பட்டிருக்கிறேன்.

​​ஸஹிஹுல் புகாரி 335, முஸ்லிம் 521, மிஷ்காத் 5747

நானே உங்கள் யாவரிலும் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடப்பவனாகவும், மிக வாய்மைக்குரியவனாகவும், மிக நல்லவனாகவும் இருக்கின்றேன்.

​மிஷ்காத் 226

♣  நானே முன்னோர், பின்னோர் யாவரிலும் அல்லாஹ்விடம் மிக சங்கைக்குரியவனாக இருக்கின்றேன்.

​திர்மிதி 3615,3616, தாரமி 47, முஸ்னத் அஹ்மத் 2-243, மிஷ்காத் 5762, 5920

♣  நான் சிறந்தோர் வழியாகவே வந்துள்ளேன்.

​தப்ரானி (கபீர்) 13474, ஹாகிம் 705, தலாயில் நுபுவா 3-294

எனக்கு பல பெயர்கள் உள்ளன, நான் முஹம்மத் (புகழப்படுபவன்), நான் அஹ்மத் (அல்லாஹ்வினால் அதிகம் புகழப்பட்டவன்), நான் மாஹி (குப்ரை அழிப்பவன்), நான் ஹாஷிர் (எனக்கு பின்னால் என் வழிதொடரும் சமுதாயம் கொண்டவன்) நான் ஆகிப் (எனக்கு பின்னால் எந்த நபியும் இல்லாது இருப்பவன்)

ஸஹிஹுல்​ புகாரி, முஸ்லிம் 2849, திர்மிதி, அஹ்மத்

♣  நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் களிமண்ணுக்கும், தண்ணீருக்குமிடையில் இருக்கும்போது நான் நபியாக இருந்தேன்.

​மிஷ்காத் 513

♣  நானோ ஹபீபுல்லாஹ்வாக (அல்லாஹ்வின் அன்பராக) இருக்கிறேன்.

​திர்மிதி 3615,3616, இப்னு மாஜா 4308, மிஷ்காத் 5762,63

கியாமத் நாளையில் முதன் முதலில் பரிந்துரை செய்பவனாகவும், முதன் முதலில் பரிந்துரை ஒப்புக்கொள்ளப்பட கூடியவனாகவும் இருக்கிறேன்.

​திர்மிதி 3615,3616, இப்னு மாஜா 4308, மிஷ்காத் 5762,63

நானே சுவனத்தின் வளையங்களை முதன் முதலில் அசைப்பவனாகவும் இருக்கிறேன். அல்லாஹ் எனக்காக சுவனத்தைத் திறந்து என்னை நுளையச் செய்வான்.

​திர்மிதி 3615,3616, தாரமி 47, முஸ்னத் அஹ்மத் 2-243

♣  யார் என்னை அன்பு வைத்தாரோ அவர் என்னுடன் சுவனத்தில் இருப்பார்.

​திர்மிதி 2678, மிஷ்காத் 175

♣  பூமி முழுவதும் சுத்தம் செய்யத்தக்கதாகவும் தொழுமிடமாகவும் எனக்கு ஆக்கப்பட்டுள்ளது.

ஸஹிஹுல் ​புகாரி 335

♣  நான் உங்களுக்கு முன்பே (அல் கவ்ஸர்) தடாகத்திற்கு சென்று (நீர் புகட்ட) காத்திருப்பேன்.

​​ஸஹிஹுல் புகாரி 6575

♣  (கப்றுகளிலிருந்து) எழுப்பப்படும் பொழுது நான்தான் மனிதர்களில் முதல்வனாக வெளிப்படுவேன்.  (திர்மிதி)

♣  மறுமை நாளில் நான் நபிமார்களுக்கெல்லாம் தலைவனாகவும், அவர்களின் பேச்சாளனாகவும் இருப்பேன்.  (திர்மிதி)

♣  இறைத்தூதர்களிலேயே அதிகமான மக்களால் பின்பற்றப்படுபவன் ஆவேன்.  (​முஸ்லிம்)

♣  போரில் கிடைக்கிற பொருள்கள் எனக்கு ஹலாலாக்கப்பட்டுள்ளன எனக்கு முன்பு ஹலாலாக்கப்பட்டதில்லை.

​ஸஹிஹுல் புகாரி 335


​​​

நபிகள் நாயகம்   அன்னவர்களின் பிறப்பின் சிறப்புகள்♣  நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:
'எனது தாயார் என்னை ஈன்றெடுக்கும் போது அவர்களிலிருந்து ஒரு பேரொளி புறப்பட்டு அதன் மூலம் சிரியா நகர கோட்டைகள் எல்லாம் பிரகாசித்தன'

ஹழ்ரத் அபூ உமாமா (ரலியல்லாஹூ அன்ஹூ)
முஸ்னத் அஹ்மத் 5-262, ஹாகிம் 2-600, மிஷ்காத் 5759


​​♣ ஹழ்ரத் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் அன்சாரி ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்:
​நான் ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டேன்: அல்லாஹ் முதன் முதலின் எதைப் படைத்தான்? அதற்கு ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதிலளித்தார்கள்: முதலில் அல்லாஹ் தனது ஒளியிலிருந்து எனது ஒளியைப் படைத்தான். இந்த ஒளியானது அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்கி பயணித்தது, அந்நேரத்தில் சொர்க்கம், நரகம், எழுதுகோள், லவ்ஹு, வானம், பூமி, சூரியன், சந்திரன், ஜின், மனித இனம் என எதுவும் படைக்கப்படவில்லை. அல்லாஹ் படைப்பினங்களை படைக்க நாடிய போது, அந்த ஒளியை நான்கு பாகங்களாக பிரித்து, முதல் பாகத்திலிருந்து எழுதுகோலையும், இரண்டாவதிலிருந்து லவ்ஹையும், மூன்றாவதிலிருந்து அர்ஷையும் படைத்தான். நான்காவது பாகத்தை மீண்டும் நான்கு பாகங்களாக ஆக்கி, முதலாவதிலிருந்து அர்ஷை சுமக்கும் மலக்குமார்களையும், இரண்டாவதிலிருந்து குர்ஸியையும், மூன்றாவதிலிருந்து மலக்குமார்களையும் படைத்தான். மீதமுள்ள ஒரு பாகத்தை மீண்டும் நான்காக பிரித்து, முதலாவதிலிருந்து வானங்களையும், இரண்டாவதிலிருந்து கோளங்களையும், மூன்றாவதிலிருந்து சுவனத்தையும், பூமியையும் படைத்தான். ரப்புல் ஆலமீன் அல்லாஹ் மீண்டும் நான்காவதை நான்கு பாகங்களாக பிரித்து, அவற்றில் முதலாவதிலிருந்து மூஃமின்கள் காணக்கூடிய ஒளியையும், இரண்டாவதிலிருந்து மூஃமின்களின் ஒளி பொருந்திய இதயங்களையும், மூன்றாவதிலிருந்து கலிமாவை மொழியக்கூடிய மூஃமின்களின் நாவுகளையும் படைத்தான்.
​தலாயினுன் நுபுவ்வத் - இமாம் பைஹகி
​​​
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:
"நபி ஆதம் அலைஹி ஸலாம் அவர்கள் களிமண்ணுக்கும், தண்ணீருக்கும் இடையிலிருந்த போது நான் நபியாக இருந்தேன்."

மிஷ்காத் - 513​

நபிகள் நாயகம் (ஸல்லலாஹு அலைஹி வசல்லம் ) அன்னவர்கள் கூறினார்கள்:
"எனது தாய் - தந்தை இருவரும் அறியாமை கால திருமண முறையை சந்தித்ததில்லை. தூய்மையான முதுகந்தண்டிலிருந்து பரிசுத்தமான கருவறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் என்னை இறைவன் கொண்டு வந்து கொண்டேயிருந்தான். இரு பிரிவினர் தோன்றினால் அவ்விரண்டில் சிறந்த பிரிவினரில் நானிருந்தேன்.

ஹழ்ரத் இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு)
தலாயில் நுபுவ்வா - 15, இப்னு அஸாகிர் - 1217, துர்ருல் மன்தூர் - 3/294


நாயகம் (ஸல்லலாஹு அலைஹி வசல்லம் ) அன்னவர்கள் கூறினார்கள்:
"ஆதமுடைய பிள்ளைகளில் தலை முறை தலைமுறையாக இப்போது நானிருக்கும் தலைமுறை வரை சிறந்தோர் வழியாக நான் அனுப்பப்பட்டேன்."

ஸஹிஹுல் புகாரி - 3293


கண்மணி நாயகம் (ஸல்லலாஹு அலைஹி வசல்லம் ) அன்னவர்கள் கூறினார்கள்:
"ஒவ்வொரு நபியும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு (நபியாக) அனுப்பப்பட்டார்கள். ஆனால் நான் மக்கள் யாவருக்கும் ரசூலாக அனுப்பப்பட்டிருக்கிறேன்"

ஸஹிஹுல் புகாரி 335 , ஸஹிஹ் முஸ்லிம், மிஷ்காத் 5747​​​

​​​♣ நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:
"மக்கள் இருப்பிரிவினராக பிரிகின்றபோது அவற்றில் சிறந்த பிரிவில் இறைவன் என்னை அமைத்தான்"

ஹழ்ரத் அனஸ் (ரலியல்லஹு அன்ஹு)
பைஹகி (தலையில் நுபுவ்வா) 81

​​​​

நபிகள் நாயகம் அன்ன​வர்கள் ரபியுல் அவ்வல் மாதம் 12 ஆம் நாள் பிறந்ததற்கு ஆதாரம்
​​​
நபிகள் நாயகம் (ஸல்லலாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் ரபீ உல் அவ்வல் மாதம் 12 ம் பிறையில் பிறந்தார்கள்.

ஹழ்ரத் முஹம்மது இப்னு இஸ்ஹாக் (ரலியல்லாஹு அன்ஹு)
ஹாக்கிம் - 2-603, ஸீரத் இப்ன் ஹிஷாம் - 1-211​​


​​♣ நபிகள் ​நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அன்னவர்கள் யானை ஆண்டில் பிறந்தார்கள்.

ஹழ்ரத் இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு)
ஹாகிம், இப்னி ஹிஷாம்
இந்த ஹதீஸ் இமாம் புஹாரி, இமாம் முஸ்லிம் (ரலியல்லாஹு அன்ஹுமா) ஆகியோரின் நிபந்தனையின் படி ஸஹீஹான ஹதீஸாகும். ​​​


♣  நபிகள் நாயகம் அன்னவர்கள் யானை ஆண்டு ரபிஉல் அவ்வல் மாதம் 12, திங்கட்கிழமை அதிகாலை நேரம், மக்கா நகரில் ஷிஃபு பனீ ஹாஷிம் என்ற பகுதியில் உள்ள தாரு அபீதாலிப் என்ற (அதாவது தற்போது முஹம்மது இப்னு யூஸுப் அவர்களுக்குரிய வீடு என்று கூறப்படுகின்ற)  இடத்தில் பிறந்தார்கள்.
முஹம்மதுர் ரசூலுல்லாஹ் பக்கம் 12,  இப்திகாவுல் உஸூல் பக்கம் 16,  அல்புன்யானுள் மர்ஸுஸ் 29, 40, 76 
வஹாபிகளுக்கு சமார்ப்பணம் 

மௌலித் ஓதுவதற்கு அசைக்க முடியாத ஆதாரங்கள் ... 

குறிப்பு :- இந்த பதிவை பெறுபவர்கள் அனைவரும் கட்டாயம் அனைத்து ஹதீஸ்களையும் நன்றாக வாசித்து ஆதார நூல்கள் மற்றும் இலக்கங்களையும் மனதில்கொள்ளவும் ...

***********************************************************************************

(458) கவி (மௌலித்) மூலம் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை புகழ்து பாடுவதற்காக ஆதாரங்கள்
*********************************************************************************
♦கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கவி பாடியதற்க்குறிய ஆதாரம்
ஜுன்தப் இப்னு சுஃப்யான்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் போர் ஒன்றில் பங்கு கொண்டபோது அவர்களின் விரலில் (காயம் ஏற்பட்டு) ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. அப்போது அவர்கள், “நீ இரத்தம் சொட்டுகிற ஒரு விரல் தானே? நீ அடைந்த (பழு)தெல்லாம் இறைவழியில் தானே!” என்று (ஈரடிச் சீர் பாடல் (கவி) போன்ற வடிவில்) கூறினார்கள்.
(ஷஹீஹ் புஹாரி 2802)

.
♦நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் மறைவின் பின் ஸஹாபாக்கள் கவி மூலம் புகழ்து அவர்களை பாடியதற்க்குறிய ஆதாரம்
ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) அறிவித்தார். மஸ்ஜிதுந் நபவீயில் (நபித் தோழரும் கவிஞருமான) ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி) கவிபாடிக் கொண்டிருக்க, உமர்(ரலி) அங்கு வந்தார்கள். (ஹஸ்ஸான்(ரலி) பள்ளிவாசலில் கவிபாடுவதை உமர்(ரலி) கண்டித்தார்கள்) ஹஸ்ஸான்(ரலி), “நான் இந்தப் பள்ளிவாசலில் உங்களை விடச் சிறந்தவர் (நபி(ஸல்) அவர்கள்) இருக்கும் போதே கவிபாடிக் கொண்டிருந்தேன்” என்று கூறிவிட்டு, அபூ ஹுரைரா(ரலி) பக்கம் திரும்பி, “அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கிறேன். (என்னிடம்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், “(ஹஸ்ஸானே!) என் சார்பாக (எதிரிகளின் வசைக் கவிகளுக்கு) நீங்கள் (கவிகளாலேயே) பதிலளியுங்கள். இறைவா! ஹஸ்ஸானுக்கு ரூஹுல் குதுஸ்(தூய ஆத்மா வானவர் ஜிப்ரீல் அவர்களின்) மூலம் துணை புரிவாயாக!” என்று கூறியதை நீங்கள் செவியுற்றிருக்கிறீர்களா?“ என்று கேட்டார்கள். அதற்கு அபூ ஹுரைரா(ரலி), “ஆம் (செவியுற்றிருக்கிறேன்)” என்று பதிலளித்தார்கள். 
(ஷஹீஹ் புஹாரி 3212)

.
♦ பள்ளிவாசல்களிலும் கவி மூலம் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹிவஸல்லம் அவர்களை புகழ்து பாடுவதற்காக ஆதாரம்
கஃபு இப்னு ஜீஹைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பள்ளிவாசலில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் புகழ்து கவி பாடினார்கள் 
அறிவிப்பாளர் இப்னு ஜத்ஆன் ரலியல்லாஹு அன்ஹு 
(ஆதாரம் ஹாகிம் 6555)

.
♦வீடுகளில் கவி (மௌலித்) பாடுவதற்காக ஆதாரம்
மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது 
ஒரு முறை நான் ஆயிஷா நாயகியிடம் சென்றேன் அப்போது அவர்களுக்கு அருகில் ஹஸ்ஸான் பின் ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இருந்து கவி பாடிக்கொண்டும் தம் பாடல்களால் ஆயிஷா நாயகி அவர்களை பாராட்டிக்கொண்டுமிருந்தார்கள் 
(ஆதாரம் முஸ்லிம் 1901)

.
♦திருமண வீட்டில் கவி (மௌலித் பாடுவதற்காக ஆதாரம்
ஆயிஷா(ரலி) அறிவித்தார் நான் ஒரு பெண்ணை அன்சாரிகளில் ஒருவ(ருக்கு மணமுடித்து வைத்து அவளை அவ)ரிடம் அனுப்பிவைத்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், “ஆயிஷாவே! உங்களுடன் பாடல் (பாடும் சிறுமியர்) இல்லையா? ஏனெனில், அன்சாரிகளுக்குப் பாடலென்றால் மிகவும் பிடிக்குமே““ என்றார்கள்
(ஷஹீஹ் புஹாரி 5162)

.
♦கவி (மௌலித்) பல தடவைகள் பாடுவதற்காக ஆதாரம்
ஷரீத் பின் சுவைத் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு நாள் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களது வாகனத்தில்) அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், ”உமய்யா பின் அபிஸ்ஸல்த்தின் கவிதைகளில் ஏதேனும் உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். நான் ”ஆம் (தெரியும்)” என்றேன். ”பாடு” என்றார்கள். உடனே நான் ஒரு பாடலைப் பாடினேன். ”இன்னும் பாடு” என்றார்கள். பிறகு இன்னொரு பாடலைப் பாடினேன். ”இன்னும் பாடு”என்றார்கள். இவ்வாறே அல்லாஹ்வின் தூதருக்காக நூறு பாடல்களைப் பாடிக்காட்டினேன். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் ஷரீத் பின் சுவைத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் ”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைத் தமக்குப் பின்னால் தமது வாகனத்தில் அமரச்செய்தார்கள்...” என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. - மேற்கண்ட ஹதீஸ் ஷரீத் பின் சுவைத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் ”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என்னிடம் உமய்யா பின் அபிஸ் ஸல்த்தின் கவிதைகளைப் பாடுமாறு கூறினார்கள்” என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. மேலும் ”உமய்யா பின் அபிஸ்ஸல்த் இஸ்லாத்தைத் தழுவும் அளவுக்கு வந்துவிட்டார்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாகக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது. அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ”அவர் தமது கவிதையி(ன் கருத்துகளா)ல் இஸ்லாத்தைத் தழுவும் அளவுக்கு வந்துவிட்டார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகக் காணப்படுகிறது.
(ஸஹீஹ் முஸ்லிம் 4540)

.
♦கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை புகழ்து பாடினால் மலக்குமார்களின் பாதுகாப்பு கிடைக்கும் என்பதற்குறிய ஆதாரம்
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஸ்ஸான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு சொன்னார்கள் நீங்கள் அல்லாஹ்விற்றாகவும் அல்லாஹ்வின் தூதருக்காகவும் கவி மூலம் பாடும் காலமெல்லாம் பரிசுத்த ஆன்மாவான ஜிப்யீல் (அலை) அவர்கள் உங்களைப் பலப்படுத்திக் கொண்டே இருப்பார்கள் 
அறிவிப்பாளர் ஆயிஷா ரலியல்லாஹுஅன்ஹா 
(ஆதாரம் முஸ்லிம் 4545)

.
♦கூட்டமாக சேர்ந்து கவி பாடுவதற்கான ஆதாரம்
நபி(ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த போது பெண்களும் சிறுவர்களும் குழந்தைகளும் பின்வரும் பாடலைப் பாடினார்கள். ” ”தலஅல் பத்ரு அலைனா மின் தனிய்யாதில் வதாயீ வஜபஷ்ஷுக்ரு அலினா மாதஆ லில்லாஹி தாயீ” 
(ஆதாரம்: தலாயிலுன் நுபுவ்வா:2015)

.
♦மேடை போட்டு கவி பாடுவதற்கான ஆதாரமும், பள்ளியில் பாடுவதற்காக ஆதாரமும்
ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலியல்லாஹு அன்ஹு) ‘நபியே நாயகமே! உங்களைப் போன்ற அழகான எந்த ஒரு மனிதரையும் எனது இந்த இரு கண்களும் கண்டதேயில்லை. உங்களைபோன்ற ஒரு அழகான ஒருவரை எந்தப் பெண்ணும் பெறவுமில்லை எனப் பாடியுள்ளார்கள்.’ கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு பள்ளியில் மேடை போட்டுக் கொடுத்தார்கள். அம்மேடையில் ஸஹாபி அவர்கள் ஏறிநின்ற வண்ணம் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை புகழ்ந்து பாடுவார்கள். இன்னும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை முஷ்ரிகீன்கள் இகழ்வதை தனது பாடல்களினால் முறியடிப்பார்கள். கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுக்குப் புகழும் காலமெல்லாம் (முஷ்ரிகீன்களின் வசை மொழிகளை தனது பாடலைக்கொண்டு முறியடிக்கும் காலமெல்லாம் ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) மூலம் ஹஸ்ஸான் இப்னு தாபிதிற்கு உதவி செய்வாயாக! எனப்பிரார்த்தித்தார்கள். அறிவிப்பவர் ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) 
(நூல் - புகாரி எண் 453, முஸ்லிம் 4545. மிஷ்காத் )

.
♦கவி பாடினால் நன்மை, கூலி கிடைக்கும் என்பதற்குறிய ஆதாரம்
ஒரு சமயம் ஹஸ்ஸான் இப்னு ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இறைமறுப்பாளர்களே! முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களைக் குறைவுப்படுத்தி கவி பாடுகிறீர்கள். அதற்கு பதிலாக அன்னவர்களை நான் புகழ்ந்து பாடுவேன். அதற்குரிய நற்கூலி இறைவனிடம் உண்டு. ஹதீஸ் தொடர் நீண்டுசெல்வதால் சுருக்கிக்கொள்கிறேன். தேவையெனில் பார்க்கவும் (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) 
நூல்: முஸ்லிம் எண்: 4545

.
♦நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹிவஸல்லம் அவர்களை புகழ்து பாடுபவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்குவதற்குறிய ஆதாரம்
கஃப் இப்னு ஜுஹைர் (ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஓதிய மவ்லித் அவர்களுக்கு அன்பளிப்பாக கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு போர்வை வழங்கியது பற்றிய தெளிவாக இந்த நீண்டகு ஹதீஸ் தொடரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது பார்க்கவும். 
(நூல்: ஹாகிம் எண்: 6558, அல்பிதாயா வன்னிஹாயா)
♻ وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ
மேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக.
(அல்குர்ஆன் : 93:11)
எனவே இறைவன் நமக்கு தந்த மாபெரும் அருட்கொடை ரஹ்மத் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான்
என்பதை அல்லாஹ் குர்ஆனில் தெளிவாக கூறியுள்ளான் அந்த அடிப்படையில் அந்த அருட்கொடை இவ்வுலகிற்க்கு ரபிஉல் அவ்வல் மாதம் கிடைத்த காரணத்தினால்தான் 
இறைவன் வழங்கிய அருட்கொடை, ரஹ்மத்தான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புகழ்களை கவி மூலம் ஸஹாபாக்கள் காட்டிய அழகிய முன்மாதிரிகளை மனதில் கொண்டு மேலே கூறப்பட்ட குர்ஆன் வசனத்தின் பிரகாரம் மக்களிடம் கவி மூலம் புகழ்து பாடி சொல்லிட்காட்டுகிறோம்
இது mail of islam என்ற இணையத்தில் இருந்து எடுத்து பதிவு செய்ய பட்டது  நன்றி mail of islam
- See more at: http://www.mailofislam.com/al_hadith-tam-mowlid_meelad.html#sthash.5DahNrPJ.dpuf