Friday, December 12, 2014

ஆப்கனிஸ்தானில் அப்பாஸ் என்ற முஸ்லிம் புரூஸ்லீ!


காபூல்: பிரபல ஹாலிவுட் நடிகரும், தற்காப்புக் கலை நிபுணருமான மறைந்த புரூஸ்லீயின் ஜெராக்ஸ் காப்பி போல் இருக்கிறார் இந்த ஆப்கன் இளைஞர். இதனாலேயே இவரை ஆப்கன் புரூஸ்லீ என மக்கள் அழைக்கிறார்கள். ஜீட் குன் டோ என்ற உள்ளொளித் தற்காப்புக்கலையைத் தோற்றுவித்த பெருமைக்குரியவர் பிரபல நடிகர் புரூஸ்லீ.
இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான தற்பாதுகாப்புக்கலை நிபுணர்களுள் ஒருவராகக் கருதப்பட்ட புரூஸ்லீ, கடந்த 1973ம் ஆண்டு திடீரென மரணமடைந்தார். தலைவலிக்காக மாத்திரை சாப்பிட்ட அவர் பிறகு எழவேயில்லை. அவரது மரணம் குறித்த மர்மம் இன்னும் விலகவில்லை. குறைந்த எண்ணிக்கையிலான படங்களிலேயே அவர் நடித்திருந்தாலும், அவரது புகழ் இன்னும் சண்டைப் பிரியர்கள் மத்தியில் நிலைத்து நிற்கிறது. இந்நிலையில், இவரைப் போன்ற உருவ ஒற்றுமையுடன் ஆப்கானிஸ்தானில் ஒரு இளைஞர் உள்ளார். ஆப்கானிஸ்தானில் வாழும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர் இந்த அப்பாஸ் அலிஷாடா (20). 10 சகோதர சகோதரிகளூடன் பிறந்த இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் சிறிய வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில், அப்படியே புரூஸ்லீயின் தோற்றத்துடன் காணப்படுகிறார் அப்பாஸ். எனவே இவருக்கு ஆப்கான் புரூஸ்லீ என இணைய தள ரசிகர்கள் பெயரிட்டுள்ளனர். உருவ ஒற்றுமை மட்டுமல்லாது, புரூஸ்லீயைப் போலவே தனது சண்டையிடும் திறமையையும் வளர்த்துக் கொண்டுள்ளார் அப்பாஸ். இந்த வீடியோவில் அவர் புரூஸ்லீ செய்யும் சாகசங்களைச் செய்து காட்டி ஆச்சர்யப்பட வைக்கிறார். பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள தனது வீடியோவுக்கு புரூஸ் ஹசாரா என அப்பாஸ் பெயரிட்டு உள்ளார்.

Read more at: http://tamil.oneindia.com/news/international/bruce-lee-is-alive-he-lives-afghanistan-216849.html   

0 comments:

Post a Comment