Monday, February 24, 2014

தொன்மையான பள்ளிவாசலை மீட்டெடுத்த ரஷிய முஸ்லிம்கள்










தொன்மையான பள்ளிவாசலை மீட்டெடுத்த ரஷிய முஸ்லிம்கள்

ரஷியாவில் ‘காசிமோவ்’’ கிராமத்தில் ‘மஸ்ஜிது கான்’’ எனும் பள்ளிவாசலைப் பெரும் போராட்டத்திற்குப்பின் ரஷிய முஸ்லிம்கள் மீட்டனர். 15ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தப் பள்ளிவாசலை 1702ஆம் ஆண்டு ரஷிய மன்னர் பீட்டர் தி கிரேட் இடித்துத் தள்ளினார். பாங்குமேடை மட்டுமே எஞ்சியிருந்தது.

பின்னர் 1768ஆம் ஆண்டு அப்பள்ளிவாசல் மீண்டும் கட்டப்பட்டது. 1835ஆம் ஆண்டு தாத்தாரிய தலைவர்கள் பள்ளிவாசலை விரிவுபடுத்தி, தற்போதைய வடிவில் சீரமைத்தனர். பாரம்பரியமிக்க இந்தப் பள்ளிவாசல் கடந்த 30 ஆண்டுகளாக அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு, தொழுகைக்குத் தடையும் விதிக்கப்பட்டிருந்தது. நீண்டகால சட்டப் போராட்டத்திற்குப்பின் நீதிமன்றத் தீர்ப்பின்படி ரஷிய முஸ்லிம்கள் ‘மஸ்ஜிது கான்’’ பள்ளிவாசலை மீட்டெடுத்தனர்.

இதற்கிடையில் ரஷியாவின் கிறித்தவப் பெண்மணி ஒருவர் இஸ்லாத்தை ஏற்றார். ஒலிஜா சைரஜீ சோர்கீனா என்ற அப்பெண்மணி பாலஸ்தீன மக்களை ‘ஃகஸ்ஸா’வில் சந்தித்து தமது விருப்பத்தை வெளிப்படுத்தினார். ஃகஸ்ஸாவில் உள்ள ஷரீஆ உயர்நீதிமன்றத்தின் முன் ஆஜரான அவர், தமது சுயவிருப்பத்தின்பேரில் கலிமா சொல்லி இஸ்லாத்தில் இணைந்தார்.

இன்னொரு புறம், ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் தாஃகிஸ்தானைச் சேர்ந்த முஸ்லிம் பெண்மணி ஒருவர் கொல்லப்பட்டார். அவரது உடலில் சிலுவை அறையப்பட்டு, கைகால்கள் வெட்டப்பட்டு, அடுக்குமாடி கட்டிடத்தின் லிஃப்டில் பிணமாகக் கிடந்தார்.

ரஷியாவின் மொத்த மக்கட்தொகையில் 15 விழுக்காடு முஸ்லிம்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. ரஷியாவிலிருந்து தனிநாடாகப் பிரிவதற்காகப் போராடிவரும் கௌகாஸ் மாகாணத்தில் மட்டும் 23 மில்லியன் முஸ்லிம்கள் உள்ளனர்.

0 comments:

Post a Comment