சாதனைப் பெண் சுமைய்யா...!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
“சவூதி கெஸட்” ஆங்கில நாளிதழுக்கு
முதன்மை ஆசிரியராக (சீஃப் எடிட்டர்)
சுமைய்யா ஜாபர்தி
பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.
சவூதியில் ஓர் ஆங்கில நாளிதழுக்கு
ஒரு பெண் சீஃப் எடிட்டராகப் பொறுப்பேற்பது
இதுவே முதல் முறையாகும். அவர் இதுவரை
அந்த நாளிதழின் டெபுடி எடிட்டராகப்
பணியாற்றிக் கொண்டிருந்தார்.
காலித் அல்மயீன் என்பவர்தான் இதற்கு முன்பாக
சவூதி கெஸட்டின் முதன்மை ஆசிரியராக இருந்தார்.
அவர் சுமைய்யா பற்றிக் கூறும்போது,
“13 ஆண்டுகள் என்னுடன் பணியாற்றிய சுமைய்யா
பத்திரிகைத் துறையில் திறமையும் தகுதியும்
அர்ப்பணிப்பு உணர்வும் மிக்கவர்” என்றார்.
ஏற்கனவே இதழியல் துறையில் சவூதி பெண்கள் பலரும்
பணியாற்றி வருகின்றனர். வார, மாத இதழ்கள் பலவற்றில்
பெண்கள் ஆசிரியராகத் திறம்படச் செயலாற்றி வருகின்றனர்.
ஓர் ஆங்கில நாளிதழுக்கு முதன்மை ஆசிரியராக
ஒரு பெண் வருவது இதுவே முதல் முறையாகும்.
சகோதரி சுமைய்யாவின் இதழியல் பணி சிறக்கட்டுமாக.
-சிராஜுல்ஹஸன்

0 comments:
Post a Comment