Thursday, February 20, 2014

80கோடி ரூபாயை அறபணிகளுக்காக அற்பணித்த வியக்க வைக்கும் முஸ்லிம் பெண்

80கோடி ரூபாயை அறபணிகளுக்காக அற்பணித்த
வியக்க வைக்கும் முஸ்லிம் பெண்
***************************************
ஆணாகினும் பெண்ணாகினும் பொன்னாசை பொருளாசை இல்லாத மனிதர்களே இல்லை அதிலும் பொன்னையும் பொருளையும் நேசிப்பதில் ஆண்களைவிட பெண்களின் பங்கு அதிகமானது பொன்னின் மீதும் பொருளின் மனித சமூகம் கொண்டுள்ள வெறியின் காரணமாக கொலை கொள்ளைகள் அரங்கேறுவதை கூட பார்க்கிறோம்

தன்னை படைத்தவனின் மீது கொண்டுள்ள ஆழ்ந்த பற்றும் பயமும் பாசமும் ஒரு முஸ்லிம் சகோதிரியை நாம்மேல் கூறிய விதியிலிருந்து வேறு படுத்தி காட்டியுள்ளது

அந்த சகோதிரி அனுபவ முதிர்ச்சி பெற்றவரும் இல்லை முதிர்ந்த வயது உடையவரும் இல்லை வாழ்வின் துவக்கத்தில் இருப்பவர் கல்லுரியில் படித்து கொண்டு இருப்பவர் பதினேழு வயதுக்கு மட்டுமே சொந்தமானவர்

இளமை துள்ளம் அந்த உள்ளம் அள்ளி கொடுப்தில் வரலாறு படைத்திருக்கிறது

அவரின் தந்தையின் மரணத்திர்கு பிறகு தந்தையின் சொத்திலிருந்து அவரின் பாகமாக 50 மில்லியன் சவுதி ரியால் கள் கிடைத்தன சுமார் 80 கோடி இந்திய ரூபாய்கள்
இவ்ளவு பெரிய தொகை ஒரு சராசரி இளம் பெண்ணுக்கு கிடைத்தால் அவளின் சிந்தனை எப்படி அமையும்
அந்த பெரும் தொகையை வைத்து கொண்டு சுகமாக சொகுசாக வாழ்வதர்கு எத்னைவழிகள் உள்ளனவோ அத்தனை வழிகளையும் தேடுவாள்

ஆனால் இந்த பதினேழு வயது இளம் பெண்ணின் சிந்தனை வேறு விதமாக அமைந்தது அந்த சகோதிரிக்கு கிடைத்த 80 கோடி ரூபாயையும் இறைவனின் பாதையில் அற்பணம் செய்து மறுமை வெற்றியை தேடுவதர்கு அந்த இளம் உள்ளம் முடிவு செய்தது தனது தாய் மற்றும் சகோதர்ர்களிடம் போராடி அனுமதியும் பெற்றார்

சிலதினங்களுக்கு முன்பு ரியாத் நீதி மன்றத்திர்கு அந்த சகோதிரி வருகை தந்து தனது 80 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துதளையும் இறைவன் பாதையில் அற்பணிப்பதாகவும் அவைகளை இறையில்லம் மற்றும் மதரஸாக்கள் கட்டுவதர்கு பயண் படுத்துமாறு வேண்டி கொண்டார்

நிதிமன்றத்திலிருந்து வெளியில் வந்த அந்த சகோதிரியை செய்தியாளர்கள சூழ்ந்து கொண்டு அவரது பெயர் மற்றும் விபரங்களை கேட்டனர் அதர்கு அந்த சகோதிரி இது எனது மரணத்திர்கு பிறகும் என்னை நண்மைகள் வந்தடைய வேண்டும் என்பதர்காக செய்யபட்டுள்ள நிலையான தர்ம மாகும் இதர்கு மேல் நான் வேறு எதையும் கூறவிரும்பவில்லை என கூறிவிட்டு தனது வாகனத்தில் ஏறி சென்று விட்டார்

அந்த முன்மாதிரி முஸ்லிம் பெண்ணின் படத்தையும் அவர் எழுதி கொடுத்த இஸ்டதான பத்திரத்தையும் தான் நீங்கள் பார்க்கின்றீர்கள்

0 comments:

Post a Comment