ஹஜ் மானியம் விரைவில் ரத்து? |
---|
ஹஜ் மானியம் விரைவில் ரத்து? ஆண்டு தோறும் இந்தியாவிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு மத்திய அரசு மானிய உதவி அளித்து வருகிறது. அரசு ஹஜ் கமிட்டி மூலம் செல்பவர்களுக்கு மட்டும் இந்த மானியம் வழங்கப்பட்டு வருகிறது. ஹஜ் பயணிகளுக்கு வழங்கப்படும் மானியத்தை ரத்து செய்யவேண்டுமென்று பல இஸ்லாமிய அமைப்புகள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளன. இதனை மத்திய அரசு ஆலோசித்து வருவதுடன், பல அமைப்புகளிடமும் கருத்து கேட்டு வருகிறது. இது குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்த வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, ”ஹஜ் பயணத்துக்கான மானியம் ரத்தாகலாம்” என்று தெரிவித்துள்ளார். |
0 comments:
Post a Comment