குண்டு வெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ். தலைவருக்குத் தொடர்பு!
சாமியார் அசிமானந்த வெளியிட்ட திடுக்கிடும் தகவல்.
ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் அஜ்மீர்; தர்கா, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவற்றில் வெடி குண்டுகள் வைக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்பட்டனர். முஸ்லிம்களைக் கொன்று குவிப்பதுதான் ஆர்.எஸ்.எஸ்.ஸின் பயங்கரத் திட்டம். எனவே இந்த நூற்றுகணக்கான முஸ்லிம்களின் படுகொலைகளுக்காக ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை போலீசார் கைது செய்திருக்க வேண்டும். ஆனால் கைது செய்யவில்லை என்பதோடு பிரச்சனை முடியவில்லை.
முஸ்லிம்களின் படுகொலைக்காக ஏராளமான முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டு, அவர்கள் அனைவரும் லஷ்கர் இ தய்யிபா, இந்தியன் முஜாஹீதீன், சிமி இயக்க தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்பட்ட அநியாயம் நடந்தது. பின்னர் சாமியார் அசிமானந்தா என்பவர் தானே முன் வந்து வாக்கு மூலம் கொடுத்தது, இந்த குண்டு வெடிப்புகள் அனைத்தையும் நாங்கள் தான் நடத்தினோம். நாங்கள் ஆயினவ் பாரத் என்ற இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். காவித் தலைவர்களின் கட்டளைப்படி இந்தக் குண்டு வெடிப்புகளை நடத்தி முடித்தோம் என்றார்.
சி.டி.சவர்கிகர் என்பவர்தான் அபிநவ் பாரத் இயக்கத்தை தோற்றுவித்தவர். ஆர்.எஸ்.எஸ்.ஸின் பிதாமகன்களின் இவரும் ஒருவர். அசிமானந்த்தின் இந்த வாக்கு மூலத்திற்குப் பின்னால் அசிமானந்திற்கு கட்டளை பிறப்பித்த மேலிடம் யார் என்பதை போலீசார் கண்டுபிடித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் எடுக்கவில்லை. இந்நிலையில் அந்த மேலிடம் யார் என்பதை அசிமானந்த ஒரு பேட்டியின் போது தெளிவு படுத்திவிட்டார். அவர் வேறு யாருமில்ல, ஆர்.எஸ்.எஸ்.ஸின் தலைவரான பகவத்து தான் என்று பெயர் குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார்.
பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்த சாமியார் அசிமானந்த், மோகன் பகவத்துக்கு குண்டுகள் வைக்கப்பட்டது நன்கு தெரியும். குண்டு வெடிப்பில் சிக்கினால் அவர்களை ஆர்.எஸ்.எஸ். காப்பாற்றும். அவர்களுக்கு வேண்டிய எல்லாவித உதவிகளையும் செய்யும் என்று அவர் உத்தரவாதம் அளித்திருந்தார். அந்த உத்திரவாதத்தின் விளைவாகத்தான் குண்டுவெடிப்பை முஸ்லிம்கள் நடத்தியதுபோல் காட்டப்பட்டது. எங்களுக்கு ஆதரவாக காவி வட்டாரத்தியிருந்து குரல் எழுந்தது என்றார்.
அவர் சொல்லியது முழுக்க முழுக்க சரி. குண்டு வெடிப்புகளில் ஆண் சாமியார் அசிமானந்த், பெண் சாமியார் பிராக்கிய சிங் ஆகியோர் மாட்டிக் கொண்டபோது, அவர்களை சிறையில் போய் இவர் சந்தித்தார். அத்வானி.
பின்னர் சிறைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அத்வானி, குண்டு வெடிப்புக்காக கைது செயப்பட்டவர்களிடம் நான் பழகி இருக்கிறேன். அவர்கள் அகிம்சைவாதிகள். அவர்கள் குண்டு வெடிப்பை நடத்தி இருக்க மாட்டார்கள் என்றார். பின்பு அத்வானி தலைமயில் குடியரசு தலைவரை சந்தித்த பி.ஜெ.பி. தலைவர்கள் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட பெண் சாமியார் பிராக்கியா சிங் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று மனு கொடுத்தனர்.
பெண் சாமியார் பிராக்கியா சிங், ஆண் சாமியார் அசிமானந்த் ஆகியோரை காப்பாற்றினால்தான் இவர்களின் கை மோகன் பகவத், அத்வானி ஆகியோர் பக்கம் நீளாது. இவர்களை காப்பாற்றாமல் விட்டால் மோகன் பகவத்தும், அத்வானியும் கூட மாட்டிக் கொள்வார்கள். அதனால் குண்டுகளை வெடித்த பிராகியா சிங், அசிமானந்த் ஆகியோரை காப்பாற்றுவதாகாது. மாறாக, அது மோகன் பகவத். அத்வானியை காப்பாற்றுவது என ஆகிப் போனதால் தான் பி.ஜே.பி.யில் உள்ள பெருந்தலைகள் எல்லாம் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு படை எடுத்தார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அதில் அவர்களால் வெற்றி காண இயலவில்லை. அசிமானந்த், பிராக்கியா சிங் ஆகியோர் மட்டும் தான் குண்டு வெடிப்பு வழக்கில் மாட்டி கொள்வார்கள். இவர்களை தூண்டிவிட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மாட்டிக் கொள்ள மாட்டார் என ஆன பிறகுதான் அசிமானந்த் திருவாய் மலர்ந்து இப்போது குண்டு வெடிப்பில் மோகன் பகவத்துக்கு உள்ள பங்கை வெளிப்படித்தியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ். இதை மறுக்கும் என்பது எதிர் பார்க்கப்பட்ட ஒன்றுதான். அதற்காக இந்த வழக்கை விசாரித்து வரும் போலீசார், அசிமானந்தின் வாக்கு மூலத்தை வைத்து, இதுவரை மோகன் பகவத் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது சட்டத்தை மீறிய செயலாகும்.
சாமியார் அசிமானந்தின் வாக்கு மூலம் உண்மைதான். அவர்களுக்கு (ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு) குண்டு வெடிப்பில் சம்பந்தம் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே, சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவது தான் அவருடைய தலையாய பணி. இந்தப் பணியை இவர் இன்று வரை ஆற்றாமல் இருப்பது கை சேதமே!
உணர்வு வார இதழ்
பிப்ரவரி 14-20,2014

0 comments:
Post a Comment