Monday, September 15, 2014

இஸ்லாத்தை ஏற்ற Hollywood நடிகை Sara Bokker

இஸ்லாத்தை ஏற்ற Hollywood
நடிகை Sara Bokker-ன் பரபரப்பான
வாக்குமூலம்
நீச்சலுடையை எறிந்து விட்டு நிகாபுக்கு ஏன் மாறினேன்?
இஸ்லாத்தை ஏற்ற Hollywood நடிகை Sara Bokker-ன்
பரபரப்பான வாக்குமூலம்
[ நான் '
நிகாப்' அணிந்து கொண்ட
செய்தி வெளியானதுதான் தாமதம்
அமெரிக்காவில்
ஏதோ பூகம்பமே வெடித்துவிட்டதுபோல் அங்குள்ள
அரசியல்வாதிகளும், வாடிகனைச்சேர்ந்த

மதகுருமார்களுடன், (போலியான) பெண்
விடுதலைக்காக போராடக் கூடியவர்களும், உலக மனித
உரிமைக்கழகமும் குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைக்க ஆர
ம்பித்தனர்.
உலகெங்கிலுமுள்ள எல்லா ஊடகங்களிலும்,
விருப்பத்துடனோ, விருப்பமின்றியோ, ‘ஸ்டைல்’ என்ற பெயரில்
மிகமிகக் குறைவாக, ஏறத்தாழ
உடையே இல்லை என்று சொல்லுமளவுக்கு அணிவதற்கு
பெண்கள் வற்புறுத்தப்படுகிறார்கள்.
ஹிஜாபை நான் அணிந்து கொண்டதால்
எனக்குக் கிடைத்ததுபோன்று, ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும்
நிம்மதி, மகிழ்ச்சி ஆகியவைப் பற்றி அறிந்து கொள்ள
பெண்களுக்கு உரிமை இருக்கிறது.
எனக்குத்தெரிந்து ஏராளமான மேற்கத்திய
பெண்கள் ‘நிகாப்’ அணிகிறார்கள். திருமணம்
முடிக்காதவர்கள் கூட அதில் அடக்கம். ஒரு விஷயம்
மிகத்தெளிவானது, ‘நிகாப்’ அணியும்
பெண்ணுக்கு குடும்பத்தார்களின், சுற்றத்தார்களின்,
சமூகத்தின் ஆதரவு இருக்கிறதோ இல்லையோ அதைப்பற்றி அவர்கள்
கவலைப்படமாட்டார்கள். ஏனெனில் அவர்கள்
மனதில் ”அந்த உடை அல்லாஹ்வுக்கு பிடித்தமானது”
என்கின்ற நம்பிக்கை அழுத்தமாக பதிந்துவிட்டது.
பெண்களின் புதிய சுதந்திரக் குறியீடு ‘நிகாப்’ தான்.
நீச்சலுடை அல்ல. – முன்னாள் அமெரிக்க
நடிகை ஸாரா போக்கர்
அமெரிக்காவின் இதயப்பகுதியில் பிறந்த
அமெரிக்கப்பெண் நான். மற்றவர்களைப்போல்
நானும் அந்தப் பெரிய நகரத்தின்
கவர்ச்சிகளுக்கு ஆட்பட்டவளாகத் தான் வளர்ந்தேன்.
கவர்ச்சிக்கேந்திரமான ஃபுளோரிடாவுக்கு,
தெற்கு மியாமி கடர்கரையின் நாகரீக
வாழ்வைத்தேடி ஓடினேன்.
ஒரு சாதாரண மேற்கத்திய பெண்
எப்படி இருப்பாளோ அப்படியேதான் நானும் இருந்தேன்;
ஆம்! என் அழகின்மீது அதிக
ஈடுபாடு கொண்டவளாக இருந்தேன். நான்
வளர வளர, நாகரீகத்துக்கு அடிமையாகி விட்டேன்
என்பதை நன்றாகவே புரிந்து கொண்டேன்.
எனது அழகான
தோற்றமே என்னை பிணைக்கைதியாக்கி விட்டதை உணர்ந்தேன்.
நாகரீக வாழ்வை மேற்கொண்டால்
வாழ்க்கையின் தேவைகளுக்கான
பொருளாதாரத்துக்கு என்ன செய்வது?
இரண்டுக்கும் இடைவெளி அதிகமானது.
மதுபானங்கள் பரிமாறப்படும்
கேளிக்கை பார்ட்டியை விட்டு விலகி தியானம், சமூக
சேவை போன்றவற்றில் கவனத்தை திருப்பினேன். ஆனால்
இவைகளால் பெரிய பலன் ஏதும் கிட்டவில்லை.
அவ்வப்போது போட்டுக்கொள்ளும் வலி மாத்திரைகள்
தற்காலிக நிவாரணத்தைத்தானே கொடுக்கும்.
அதற்கு மேல் எந்த பலனையும்
கொடுக்காது அல்லாவா? என்னுடைய மன
வலிக்கு அழுத்தமான தீர்வுதான் என்ன?
செப்டம்பர் 11, 2001. அப்பொழுதுதான்
இஸ்லாத்தைப்பற்றி, இஸ்லாமிய கலச்சாரத்தைப்பற்றி,
அதன் மதிப்பைப்பற்றி கேள்விப்படுகிறேன். அதுவரை இஸ்லாம்
என்றாலே பெண்களை ”கூடாரத்துக்குள்”
அடைத்து வைத்து கொடுமைப்படுத்தும் மதம்,
மனைவியாக வருபவளை அடித்து உதைக்கும் மதம்,
பயங்கரவாத மதமாகத்தான் அறிந்து வைத்திருந்தேன்.
அப்பொழுதுதான் ஒருநாள்
திருக்குரானை காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
ஒரே மாதிரியான மேற்கத்திய
கருத்துக்களுக்கு மாற்றமான அதன் நடை என்னை மிகவும்
கவர்ந்தது. இருப்பு, வாழ்க்கை, படைப்பு, படைத்தவனுக்கும்
படைப்புகளுக்கும் உள்ள தொடர்பு ஆகியவற்றைப்
பற்றிய விளக்கங்கள் என்னை மிகவும் கவர்ந்தன.
இதயத்தோடு ஒன்றிப்போகும் அதன் வார்ததைகளை விளக்க
எவருமே தேவையில்லை எனும் அளவுக்கு என்
ஆன்மாவோடு (அதன் வார்த்தைகள்)
ஒன்றிப்போனது என்றுதான் சொல்வேன்.
இறுதியாக
உண்மை எது என்பதை விளங்கிக்கொண்டேன்.
கடைவீதிக்குச்சென்று நீளமான அழகான ‘கவுன்’
ஒன்றை வாங்கி வந்தேன். முஸ்லீம் பெண்மணிகள்
தலையை மறைக்க அணியும் துணியையும்
கட்டிக்கொண்டு நான்
தினசரி நடந்து செல்லும் வீதிகளில் நடக்க ஆரம்பித்தேன்.
அதே வீதியில்தான் நேற்றுவரை கவர்ச்சிகரமான
குட்டையான (ஷார்ட்ஸ்) மற்றும் நீச்சலுடைகளுடன்
நடந்து சென்றேன். வீதியில் அதே பழைய முகங்கள்,
அதே பழைய கடைகளைத்தான் பார்க்கிறேன். ஆனால்
மிகப்பெரிய வேறுபாட்டை என் உள்ளம் காண்கிறது.
ஆம் சுதந்திரப்பெண்மணியாக
இப்போது என்னை நான் உணர்கிறேன். மற்றவர்கள் என்
கவர்ச்சியான உடலமைப்பை ஆசையோடு நோக்கும் அந்த
பார்வையிலிருந்து தப்பித்து நான்
விடுதலை அடைந்து விட்டது போல், என்னை சுற்றியிருந்த விலங்குகள்
அறுந்து விழுவது போல் உணர்ந்தேன்.
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால்
கவர்ச்சியான என் உடலமைப்பை வேட்டையாடும்
மனிதர்களிடமிருந்து எனக்கு முழு விடுதலை கிடைத்துவிட்டது என்று
உள்ளம் குதூகளித்தது. அந்த நேரத்தில் என் மனம் அடைந்த
நிம்மதியை எப்படி வர்ணிப்பது என்று எனக்கு
சொல்லத் தெரியவில்லை.
அதுமட்டுமின்றி எனது தோள்களில் இருந்து ‘பெரிய சுமை’
கீழிறக்கி வைக்கப்பட்டது போல் உணர்ந்தேன். முன்போல நான்
ஷாப்பிங் செய்வதிலும்,
ஒப்பனை செய்து கொள்வதிலும், கூந்தலைச்
சரி செய்து கொள்வதிலும்
எனது நேரத்தையெல்லாம் வீணடிப்பது நின்றுபோனது.
நான் முழு சுதந்திரம் அடைந்துவிட்டதாக
என்று உணர்ந்தேன்.
”பெண்களை அவமதிக்கும் மதம்” என்று சிலரால்
வர்ணிக்கப்படுகின்ற இஸ்லாத்தை உளப்பூர்வமாக
முழு மனதோடு ஏற்றுக்கொண்டேன். அவர்கள்
சொல்லும் காரணமே,
இஸ்லாத்தை எனக்கு இன்னும் நெறுக்கமாக்கியது.
முஸ்லீமான ஒருவரை நான் திருமணமும்
செய்து கொண்டேன். நான்
ஹிஜாபை (ஹிஜப்) அணிந்து கொண்டாலும்
நிகாபை (ணிஃஅப்) அணிந்து கொள்ள வேண்டும்
என்பதிலேயே மிகவும் ஆர்வமாக இருந்தேன்.
எனது முஸ்லீம் கணவரிடம்
எனது எண்ணத்தை வெளிப்படுத்தியபோது ‘ஹிஜாப்’
அணிந்து கொள்வதுதான்
பெண்களுக்கு கடமையே தவிர ‘நிகாப்’ அல்ல,
என்றார். (ஹிஜாப் என்பது பெண்கள் முகம்
மற்றும் கை கால்கள் தவிர உடம்பின் மற்ற
பகுதிகளை மறைப்பது, ‘நிகாப்’ என்பது முகத்தையும்
மறைப்பது கண்களைத்தவிர)
ஒன்றரை ஆண்டுகளுக்குப்பிறகு என் கணவரிடம் மறுபடியும்
எனது ‘நிகாப்’ இன் மீது உள்ள ஆசையை தெரிவித்தேன்.
இம்முறை நான் சொன்ன
காரணத்தை அவரால் மட்டுமல்ல வேறு எவராலும்
தட்ட முடியாது. ஆம்! என் பிரியமுள்ள கணவரிடம்
சொன்னேன், “நான் ‘நிகாப்’
அணிவது அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமானதாக
இருக்கும், அத்துடன் அதிக அடக்கமாக இருப்பதனால்
என் மன அமைதியையும் அது அதிகப்படுத்தும்
என்று நம்புகின்றேன்” என்றேன்.
இம்முறை என் இனிய கணவர் என் கருத்துக்கு மறுப்பேதும்
சொல்லாமல் உடனே ஏற்றுக்
கொண்டார்.
அதுமட்டுமின்றி என்னை உடனே கடை வீதிக்கு அழைத்துச்சென்று
அதனை வாங்கியும் கொடுத்து விட்டார்.
அல்ஹம்துலில்லாஹ்.
நான் ‘நிகாப்’ அணிந்து கொண்ட
செய்தி வெளியானதுதான் தாமதம்
அமெரிக்காவில்
ஏதோ பூகம்பமே வெடித்துவிட்டதுபோல் அங்குள்ள
அரசியல்வாதிகளும், வாடிகனைச்சேர்ந்த
மதகுருமார்களுடன், (போலியான) பெண்
விடுதலைக்காக போராடக் கூடியவர்களும், உலக மனித
உரிமைக்கழகமும் குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைக்க
ஆரம்பித்தனர். அந்த ஒப்பாரியுடன் எகிப்து நாட்டு (!!!)
அதிகாரிகளும் சேர்ந்து கொண்டு ‘நிகாப்”
அணிவது பிற்போக்குத்தனம் என்று புலம்பித்தீர்த்தனர்.
பெண்களின் உரிமைக்காக போராடுவதில் நானும்
சளைத்தவள் அல்ல. ஆனால் தற்போது ஒரு முஸ்லீம்
பெண்மணியாக இருந்து பெண்களுக்கு கிடைக்க
வேண்டிய உண்மையான உரிமைகளுக்காக போராடுகிறேன்.
குடும்பத்தில் பெண்களுக்கு உள்ள முக்கியத்துவம் பற்றிய
கருத்துக்களை முன்னிறுத்துகிறேன்.
நல்ல முஸ்லிம்களாக இருப்பதற்கும்,
கணவன்மார்களுக்கு ஆதரவு கொடுத்து
பொறுப்புகளை எடுத்துக் கொள்வதற்கும்,
குழந்தைகளை நல்லவர்களாக வளர்த்து மனித
சமுதாயத்திற்கு வழிகாட்டக் கூடியவர்களாக
ஆக்குவதற்கு முஸ்லிம் பெண்களுக்கு என்னால்
ஆனதைக் கற்றுக் கொடுத்துக்
கொண்டிருக்கிறேன்.
நம்மைப் படைத்த அல்லாஹ்வை திருப்திப் படுத்துவதற்காக,
‘நிகாப்’ அல்லது ‘ஹிஜாப்’ அணியும்
நமது உரிமைக்காகப் போராடும் அதே வேளையில்; ஹிஜாப்,
நிகாப் அணியாத பெண்களுக்கு, நாம் இதை ஏன்
அணிய வேண்டும், ஏன் இது நமக்கு மிகவும் அவசியம்
என்பதை எல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.
உலகெங்கிலுமுள்ள எல்லா ஊடகங்களிலும்,
விருப்பத்துடனோ, விருப்பமின்றியோ, ‘ஸ்டைல்’ என்ற பெயரில்
மிகமிகக் குறைவாக, ஏறத்தாழ
உடையே இல்லை என்று சொல்லுமளவுக்கு அணிவதற்கு
பெண்கள் வற்புறுத்தப்படுகிறார்கள்.
ஹிஜாபை நான் அணிந்து கொண்டதால்
எனக்குக் கிடைத்ததுபோன்று, ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும்
நிம்மதி, மகிழ்ச்சி ஆகியவைப் பற்றி அறிந்து கொள்ள
பெண்களுக்கு உரிமை இருக்கிறது. இதை நான்
முஸ்லிமல்லாத முன்னாள் பெண்மணியாகவும்
உரக்கச்சொல்வேன்.
எனக்குத்தெரிந்து ஏராளமான மேற்கத்திய
பெண்கள் ‘நிகாப்’ அணிகிறார்கள். திருமணம்
முடிக்காதவர்கள் கூட அதில் அடக்கம். ஒரு விஷயம்
மிகத்தெளிவானது, ‘நிகாப்’ அணியும்
பெண்ணுக்கு குடும்பத்தார்களின், சுற்றத்தார்களின்,
சமூகத்தின் ஆதரவு இருக்கிறதோ இல்லையோ அதைப்பற்றி அவர்கள்
கவலைப்படமாட்டார்கள். ஏனெனில் அவர்கள்
மனதில் ”அந்த உடை அல்லாஹ்வுக்கு பிடித்தமானது”
என்கின்ற நம்பிக்கை அழுத்தமாக பதிந்துவிட்டது.
அடித்துச்சொல்வேன் பெண்களின் புதிய
சுதந்திரக் குறியீடு ‘நிகாப்’ தான் என்று.
சௌத் பீச்சில் என் நீச்சலுடையையும், கவர்ச்சியான மேற்கத்திய
வாழ்க்கை முறையையும் கழற்றி எறிந்து விட்டு, என்னைப்
படைத்தவனோடு நிம்மதியாக இருப்பதிலும்
சுயமரியாதையுடனும் கண்ணியத்துடனும் வாழும்
ஒரு பெண்ணாக என்னைச்
சுற்றியிருப்பவர்களோடு வாழ்வதில்தான்
எனக்கு அளவிலா மகிழ்ச்சியும் நிம்மதியும் இருக்கிறது.
அதனால்தான் நான் ‘நிகாப்’ அணிவதைத்
தேர்ந்தெடுத்துக் கொண்டேன். அதை அணியும்
உரிமைக்காக நான் உயிரை விடவும் தயார் தான்.
நேற்றுவரை நீச்சலுடையை பெண்ணினத்தின் சுதந்திரக்
குறியீடாக நினைத்திருந்தேன். ஆனால் அது முற்றிலும் தவறு.
பெண் விடுதலையின் குறியீடு ‘நிகாப்’தான்.
அது கொடுக்கும் கண்ணியத்தை விட்டுவிட்டு,
அசிங்கமான மேற்கத்திய வாழ்க்கை முறையைத்
தேர்வு செய்யும் பெண்களே, ”நீங்கள்
எதை இழந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிய
மாட்டீர்கள்.”

0 comments:

Post a Comment