Monday, August 25, 2014

பீகாரில் லாலு - நிதீஷ் கூட்டணி வெற்றி; பஞ்சாப்-கர்நாடகாவில் காங்., வெற்றி

புதுடில்லி: கடந்த வாரத்தில் பீகார், மத்தியபிரதேசம், பஞ்சாப், கர்நாடகம் 4 மாநில சட்டசபை சில தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதற்கான ஓட்டு எண்ணும் பணி இன்று
காலையில் துவங்கியது. மொத்தம் 18 சட்டசபை தொகுதிகளில் காங்கிரஸ் 6 இடங்களையும், லாலு- நிதீஷ் -காங்., கூட்டணி 7 இடங்களையும், பா.ஜ., 5 இடங்களையும் கைப்பற்றும் என எதிர் பார்க்கப்படுகிறது. பீகாரில் மூன்று பெரும் கட்சிகள் கூட்டணியிலும் பா.ஜ., 3 இடங்களை பிடிக்கிறது என்பது பெரிய விஷயமே .

தற்போதைய ஓட்டு எண்ணிக்கை நிலவரப்படி பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா தொகுதியில் 23, 836 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் காங்., வேட்பாளர் பிரனீத்கவுர் அகாலிதள வேட்பாளரை தோற்கடித்தார். தல்வாண்டிசபோ தொகுதியில் அகாலிதள் வெற்றி பெற்றுள்ளது.
கர்நாடாக மாநிலம் பெல்லாரியில் காங்., வேட்பாளர் கோபால்கிருஷ்ணா 33 ஆயிரத்து 144 ஒட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பெல்லாரி பா.ஜ.,வசம் இருந்த தொகுதி ஆகும். தற்போது இழந்துள்ளது. 


பீகாரில் முதன்முறையாக லாலு- நிதீஷ் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர். இதில் இடைத்தேர்தல் நடந்த 10 தொகுதிகளில் 7 தொகுதிகளில் இந்த கூட்டணி முன்னிலையில் உள்ளது. பா.ஜ., 3 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளனர். பீகாரில் பா.ஜ., (வேட்பாளர் ராஷித் ) - நார்கட்டியாகஞ்ச், ராஷ்ட்டிரிய ஜனதாதளம் கூட்டணி மொகைதீன்நகர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. 

ஜலே தொகுதி (பீகார் மாநிலம் ) ஐக்கிய ஜனதாதளம் வெற்றி, ( முந்தைய தேர்தலில் பா.ஜ., வசம் இருந்த தொகுதி ) 

ஹஜ்பூர் தொகுதி (பீகார் மாநிலம் ) பா.ஜ., வெற்றி ( முந்தைய தேர்தலில் லோக்ஜனசக்தி வசம் இருந்த தொகுதி ) 

பர்படா தொகுதி (பீகார் மாநிலம்) ஐக்கிய ஜனதாதளம் வெற்றி ,( முந்தைய தேர்தலில் லோக்ஜனசக்தி வசம் இருந்த தொகுதி ) ,
மொகனியா தொகுதி (பீகார் மாநிலம்) பா.ஜ., வெற்றி, ( முந்தைய தேர்தலில் காங்., வசம் இருந்த தொகுதி ) ,
பங்கா தொகுதி , (பீகார் மாநிலம் ) பா.ஜ.,வெற்றி , ( முந்தைய தேர்தலில் பா.ஜ., வசமே இருந்த தொகுதி ) ,

சிக்காரிபூரா ( கர்நாடக மாநிலம் ) பா.ஜ.,வெற்றி , ( முந்தைய தேர்தலில் பா.ஜ., வசமே இருந்த தொகுதி ) . 

பெல்லாரி ( கர்நாடக மாநிலம்) , காங்கிரஸ் வெற்றி. ( முந்தைய தேர்தலில் பா.ஜ., வசம் இருந்த தொகுதி ) , 

தல்வாண்டி தொகுதி ( பஞ்சாப் மாநிலம் ) சிரோன் மணி அகாலிதள் வெற்றி , ( முந்தைய தேர்தலில் சிரோன் மணி அகாலிதள் வசமே இருந்தது ) .
பாட்டியாலா ( பஞ்சாப் மாநிலம்) காங்கிரஸ் வெற்றி , ( முந்தைய தேர்தலில் காங்., வசமே இருந்தது ) . 

விஜயராகவ கார், பகோரி பந்த் , அகர் இந்த 3 தொகுதிகளும் மத்திய பிரதேசத்தில் உள்ளது. இந்த 3 யும் பா.ஜ., வே தக்க வைத்து கொண்டது.

மோடி அலை எடுபடவில்லை: நிதீஷ் மொத்தம் 10 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டசபை இடைத்தேர்தலில், லாலு, நிதிஷ் கூட்டணி 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ், 'எங்களுக்கு ஓட்டளித்த மக்களுக்கு நன்றியை தெரிவி்த்துக் கொள்கிறோம். தேர்தல் முடிவுகள் எங்களுக்கு திருப்தியாக உள்ளது,' மோடி அலை எடுபடவில்லை. இந்த முறை ஓட்டு வங்கி அரசியல் தோல்வி அடைந்து விட்டது என்றார்.

0 comments:

Post a Comment