Tuesday, August 05, 2014

எக்ஸ்பிரஸ் ரெயில் உணவில் கரப்பான் பூச்சி

ராஜதானி எக்ஸ்பிரஸ் ரெயில் உணவில் கரப்பான் பூச்சி;ஐ.ஆர்.சி.டி.சி.க்கு ரூ.1 லட்சம் அபராதம்
ரெயில்களில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து பல்வேறு புகார்கள் வந்ததால், ரெயில்வே துறை, ரெயில்களில் சிறப்பு ஆய்வு நடத்தியது. அதில்,
13 ரெயில்களில் உணவு மோசமாக இருப்பது தெரிய வந்தது. குறிப்பாக, கொல்கத்தா ராஜதானி எக்ஸ்பிரஸ் ரெயிலில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்தது.
இதற்காக, அந்த ரெயிலின் உணவு நிர்வாகத்தை கவனிக்கும் இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்துக்கு (ஐ.ஆர்.சி.டி.சி.) ரெயில்வே துறை ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது. இதுபோல், மோசமான உணவு வழங்கிய இதர உணவு தயாரிப்பு நிறுவனங்களுக்கும் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டது.
இதன் மூலம், ஒரே நாளில் ரூ.11 லட்சத்து 50 ஆயிரம் கிடைத்தது. 5 தடவை தவறு செய்தால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Dailythanthi

0 comments:

Post a Comment