Tuesday, August 05, 2014

இஸ்ரேல் காஸாவுக்கெதிரான போரில் தோல்வி என இஸ்ரேல் அமைச்சர் கூறியுள்ளார்


இஸ்ரேல் காஸாவுக்கெதிரான போரில் தோல்வியடைந்து விட்டோம் - இஸ்ரேல் சுற்றுலாத்துறை அமைச்சர்
இஸ்ரேல் காஸாவுக்கெதிரான போரில் தோல்வியடைந்து விட்டது
என இஸ்ரேல் சுற்றுலாத்துறை
அமைச்சர் Uzi Landau கூறியுள்ளார். அவர் கூறுகையில்,
"இஸ்ரேல் பாரியளவான எதிர்பார்ப்புக்களுடன் காஸா மீது தாக்குதல்களை ஆரம்பித்தது.
எனினும் இஸ்ரேல் அதன் எந்த குறிக்கோலையும் இந்த தாக்குதல்கள் மூலம் அடைய முடியவில்லை. குறைந்த பட்சம்
ஹமாஸின் ஏவுகணைத் தாக்குதல்களைக் கூட நிறுத்த முடியாமல் போய்விட்டது.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் கொள்கைகளால் இன்று நாம் உலகின் முன் தலை குனிந்து
நிற்கின்றோம். உலக நாடுகளில் இஸ்ரேலுக்கிருந்த ஆதரவும் குன்றி விட்டது." எனக்கூறியுள்ளார்.
அத்துடன் ஹமாஸின் சுரங்கப்பாதைகளை தகர்க்கும் இஸ்ரெலின் முயற்சியும் படு
தோல்வியில் முடிந்துள்ளதாக கூறிய அவர் இஸ்ரேல் இராணுவத்தைக் கடுமையாக சாடியுள்ளார்.
25 நாட்களாக காஸா மீது நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் வீரர்கள் 65 பேரே கொல்லப்பட்டனர் என இஸ்ரேல் கூறினாலும் அந்த
எண்ணிக்கை 150 ஐயும் தாண்டி விட்டது என ஹமாஸ் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.வெ
http://1.bp.blogspot.com/-E7juQX0TtXQ/U99mlmWLfRI/AAAAAAABYIw/aGvuoP_QwZM/s1600/buij.jpg

0 comments:

Post a Comment