Wednesday, March 05, 2014

"வெள்ளிக்கிழமை ஜும்ஆ உரையில் அரசியல் பேசிய அறிஞர்கள் மீது சவூதி அரசு நடவடிக்கை!

"வெள்ளிக்கிழமை ஜும்ஆ உரையில் அரசியல் பேசிய அறிஞர்கள் மீது சவூதி அரசு நடவடிக்கை!

4 Mar 2014

ஜித்தா: வெள்ளிக்கிழமை குதுபா எனப்படும் உரைகளில் அரசியல் பேசிய 30 அறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க சவூதி அரசு தீர்மானித்துள்ளது.இதனை சவூதி வக்ஃப் அமைச்சக அதிகாரி அப்துல் முஹ்ஸின் ஆலு ஷேக் தெரிவித்தார்.

எகிப்தில் ராணுவ சதிப்புரட்சிக்கு பிந்தைய அரசியல் சூழலில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ உரைகளை சவூதி அரசு கண்காணிக்க துவங்கியது.சில அறிஞர்கள் உரைகளில் இஸ்லாமிய ஷரீஅத்துடன் தொடர்பில்லாத அரசியல் விவகாரங்கள் குறித்து பேசுவதாக அப்துல் முஹ்ஸின் கூறுகிறார்.

சமகால நிகழ்வுகளை குறிப்பிட்டாலும், இஸ்லாமிய ஷரீஅத் தொடர்பான கருத்துக்களை மட்டுமே பேசவேண்டும் என்று அப்துல் முஹ்ஸின் தெரிவிக்கிறார்.உரைகளில் அரசியல் பேசிய அறிஞர்கள் சிலரை நீக்கம் செய்திருப்பதாகவும், சிலர் சுயமாக தமது தவறுகளை ஒப்புக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

எகிப்தில் நடந்த ராணுவ சதிப்புரட்சிக்கு சவூதி அரசு தனது ஆதரவை அளித்து வருகிறது.எகிப்தில் நடந்த ராணுவ சதிப்புரட்சிக்கு எதிராக சவூதியில் உள்ள சில மஸ்ஜிதுகளின் அறிஞர்கள் விமர்சனம் வெளியிட்டிருந்தனர்.கடந்த ஆகஸ்ட் மாதம் குதுபாக்களில் அரசியல் பேசக்கூடாது என்று சவூதியின் கிராண்ட் முஃப்தி அனைத்து மஸ்ஜிதுகளின் அறிஞர்களுக்கும் அறிவுறுத்தியிருந்தார்.

தூது இணையத்தளம் : http://www.thoothuonline.com/

தூது பேஸ்புக் : http://www.facebook.com/ThoothuOnline

0 comments:

Post a Comment