Thursday, March 06, 2014

குஜராத் மாணவர் சங்க தேர்தல் : 'ABVP' படுதோல்வி ; மோடிக்கு பெரும் பின்னடைவு !

குஜராத் மாணவர் சங்க தேர்தல் : 'ABVP' படுதோல்வி ; மோடிக்கு பெரும் பின்னடைவு !

8 இடங்களில் போட்டியிட்ட NSUI "காங்கிரஸ் மாணவர் சங்கம்" 6 இடங்களில் அமோக வெற்றி !!

7 எம்.பி. தொகுதிகளில் பாஜக தோற்பது உறுதி !!!

குஜராத் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தேர்தலில் பாஜகவின் 'ABVP' சங்கத்துக்கும் காங்கிரஸ் கட்சியின் 'NSUI' மாணவர் அமைப்புக்குமிடையில் 8 இடங்களில் நடந்த தேர்தலில் 6 இடங்களில் ABVP படுதோல்வி அடைந்து விட்டது.

காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பு போட்டியிடாத 2 இடங்களில் பாஜகவின் ABVP சங்கம் வெற்றி பெற்றுள்ளது.

மொத்தமுள்ள 10 இடங்களில் காங்கிரஸ் கட்சியின் NSUI 6 இடங்களிலும், ABVP 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவித்தார்.

இதுகுறித்து மாநில காங்கிரஸ் மாணவர் அமைப்புத் தலைவர் தன்ராஜ் சிங் வகேலா கூறுகையில் :

குஜராத்தின் 10 மாவட்டங்களில் உள்ள 'குஜராத் பலகலைக் கழகங்களின் மாணவர்கள் காங்கிரஸ் கட்சியின் பின்னால் அணிவகுத்து நிற்பதையே, இவ்வெற்றி பறை சாட்டுவதாக உள்ளது, என்றார்.

இந்த இளைஞர்களின் இதே மனநிலை நீடித்தால் 7 பாராளுமன்றத் தொகுதிகளில் 'பாஜக' தோற்பது உறுதி என்றார், தன்ராஜ்.

0 comments:

Post a Comment