Saturday, February 22, 2014

திட்டமிட்டே என்னை சுட்டார் - சிறுவன் பகீர் தகவல்!

திட்டமிட்டே என்னை சுட்டார் - சிறுவன் பகீர் தகவல்!

சென்னை: "சுடப்போவதாகச் சொல்லியே காவல்துறை அதிகாரி என்னை சுட்டார்" என்று சிறுவன் தமீம் அன்சாரி தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் சென்னை நீலாங்கரைப் பகுதியில் சந்தேகத்தின் பேரில் சிறுவன் தமீம் அன்சாரி என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது அச்சிறுவனை காவல் நிலையத்தில் வைத்து தொண்டையில் காவல்துறை அதிகாரி புஷ்பராஜ் சுட்டார். இதனால் படுகாயமடைந்த சிறுவன் சிகிச்சைக்குப் பிறகு நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது காவல்துறை அதிகாரி புஷ்பராஜ் சுடப்போவதாகக் சொல்லியே என்னை சுட்டார் என்றும், அது எதிர்பாராத விபத்து அல்ல என்றும் துப்பாக்கிக் குண்டு காயம் அடைந்து உயிர் பிழைத்த சிறுவன் தமீம் அன்சாரி விளக்கம் அளித்துள்ளார்.

இந்திய தவ்ஹீத் ஜமாத் சார்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சிறுவன் தமீம் அன்சாரி கலந்து கொண்டு இந்த விளக்கத்தை அளித்தார்.

மேலும், நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் பொய்யான தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய தவ்ஹீத் ஜமாத் குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக நீலாங்கரை காவல்துறை ஆய்வாளர் புஷ்பராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சிறுவனுக்கு தனியார் மருத்துவமனையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
source inneram.com

0 comments:

Post a Comment