பிப்.18 அன்று நடைபெற்ற சட்டப்பேரவையில் கர்நாடகத்தில் ஓடும் நேத்ராவதி நதியுடன் பாலாற்றை இணைக்க வேண்டும், என மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அ.அஸ்லம் பாஷா கோரிக்கை விடுத்தார்.
சட்டப்பேரவையில் செவ்வாய்கிழமை நடைபெற்ற நிதிநிலை அறிக்கைமீதான விவாதத்தில் அவர் பேசியதாவது, சரியான மழை இல்லாததாலும், கழிவுகள் கலப்பதாலும் பாலாறு வறண்ட பூமியாகிவிட்டது. இதனால் பாலாற்றை நம்பியுள்ள மாவட்டங்களில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
இதனைக் தடுக்க நதிகள் இணைப்புத்திட்டத்தை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும். பாலாறு - தென்பண்ணையாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
கர்நாடக மாநிலத்தில் ஓடும் நேத்ரா நதியின் நீர் வீணாக அரபிக் கடலில் கலக்கிறது. இந்த நதியை பாலாற்றுடன் இணைத்தால் தமிழகம் வளம்பெறும். எனவே, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.
வக்பு வாரியம் சார்பில் சென்னையில் முஸ்லிம் மகளிர் விடுதி அமைக்க வேண்டும். வக்பு வாரியதில் காலியாக உள்ள 87 பணியிடங்களை நிரப்ப வேண்டும். வேலூர் அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள மொழி மூலம் பிற பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றார்.
0 comments:
Post a Comment