Monday, February 24, 2014

டார்வினும் பண்டைய மூடக்கொள்கையின் மீள் பிரவேசமும்.

Thales - பரிணாமவியலின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவர்.

18 ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் மீள் எழுச்சி பெற்ற பரிணாமக் கொள்கை பண்டைய பேகன்களின் நம்பிக்கைகளில் ஏற்கனவே வழக்கத்தில் இருந்த மூடக்கொள்கைகளில் ஒன்றாகும்.டார்வின் மூலமாக பிரபலமாக துவங்கிய இந்த கோட்பாட்டின்படி உயிரினங்கள் தற்செயலாக வந்திருக்க வேண்டும், ஒன்று மற்றொன்றாக காலப்போக்கில் மாறியிருக்க வேண்டும். இந்த அளவுகோல்படியே மனிதனும் வந்தான். அதாவது, உயிரினங்கள் ஒவ்வொன்றாக மாறி பின்னர் குரங்கு போன்ற ஒன்றிலிருந்து மனிதன் வந்திருக்க வேண்டும் என்று விளக்குகின்றது இந்த கோட்பாடு.


 கடவுளின் இருப்பை பற்றி அறியாதவர்களாக, போலியான கற்பனை சிலைகளை வணங்கி வந்த பண்டைய பேகன் கலாச்சாரத்து மக்கள் உயிர்கள் உருவானது எப்படி ? என்ற கேள்விக்கு அவர்களாகவே உருவாக்கிக் கொண்ட பதில் தான் " பரிணாமக் கோட்பாடு ".இந்த பரிணாமம் சம்பந்தப்பட்ட கருத்து பண்டைய சுமேரிய கல்வெட்டுகளில் காணப்பட்டாலும் இதற்கு ஒரு வடிவம் கொடுத்தவர்கள் பண்டைய கிரேக்கர்களே.பண்டைய பேகன் தத்துவவாதிகளானThales, Anaximander , Empedocles போன்றவர்களின் கருத்துப்படி உயிர்கள் அதாவது மனிதர்கள், விலங்குகள் மற்றும் தாவரங்கள் அனைத்தும் காற்று - நீர் - நெருப்பு போன்ற உயிரற்ற சேர்க்கை மூலமே என்றனர்.இவர்களின் கருத்துப்படி உயிரினங்கள் என்பது நீரிலிருந்து திடிரென தோன்றியவையாகும்.பின்பு அவை பூமிக்கு ஏத்தது போல் தம்மை இசைவாக்கிப்படுத்திக் கொண்டது.

தேல்ஸ் தனது அதிக காலத்தை எகிப்திலேயே கழித்தார்.அங்குதான் " சேற்றிலிருந்து உயிரினங்கள் தானாகவே தோன்றியது " என்ற ஒரு மூட நம்பிக்கை பரவலாக நம்பப்பட்டு வந்தது.நைல் நதியில் வருடாந்தம் ஏற்படும் வெள்ளப்பெருக்கு காரணமாக அடித்து வரப்படும் வண்டல் மற்றும் களிமண் காரணமாக நைல் நதியை சுற்றியுள்ள பகுதி செழிப்பாகும், இந்த வருடாந்த நிகழ்வே எகிப்தியர்களை அப்படி நம்பத்தூண்டியது.பண்டைய எகிப்தியர்களின் நம்பிக்கைப் படி ஆரம்பத்தில் வானம்,பூமி,பிறப்பு,இறப்பு ஏன் கடவுள் கூட இருக்கவில்லை.படைப்பின் ஆரம்பம் நைல் நதியையே குறித்து நிற்கிறது.இது 'நு' என்று அழைக்கப்படுகிறது.இந்த நீரிலிருந்தே Atum என்ற கடவுளும் உருவானதாக எகிப்தியர்கள் நம்பினர்.'நு' என்று அழைக்கப்படும் இருண்ட எல்லையற்ற நீர்ப் பள்ளத்தாக்கில் இருந்து தானாகவே வெளிப்பட்ட முதல் படைப்புத் தான் இந்த கடவுள் என்று எகிப்தியர்கள் நம்புகின்றனர்.இவர்  திரும்பவும் அந்த பள்ளத்தாக்குக்கு திரும்பி சென்றால் இந்த உலகின் படைப்பு நின்றுவிடும் என்று எகிப்தியர்கள் நம்பிக்கை வைத்தனர்.
According to Egyptians GOD ATUM


எகிப்தியர்களின் இந்த நம்பிக்கையால் கவரப்பட்ட தேல்ஸ் அதற்காக வாதாடினார்.கடைசியில் எந்தவிதமான ஆய்வுகள் பரிசோதனைகள் இல்லாமல் அந்த நம்பிக்கையை ஒரு கோட்பாடாக தனிப்பட்ட முறையில் முன்வைத்தார்.பூமி தட்டை என்றும் அது நீரில் மிதந்து கொண்டிருக்கிறது என்றும் இவர் நம்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Anaximender இவர் தேல்சின் மாணவர்களில் ஒருவர்.இவர் தனது குருவின் கோட்பாடுகளை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை.அவர் அதை வேறொரு பாணியில் முன்வைத்தார்.
  1. பிரபஞ்சம் எப்போதும் இருந்தது அது என்றைக்கும் அழியாமல் இருக்கும்.
  2. உயிரினங்கள் ஒன்றிலிருந்து இன்னொன்று உருவானவை அல்லது பரிணாமம் அடைந்தவை.
பரிணாமம் பற்றி விவாதிக்க பண்டைய காலத்தில் எழுதிவைத்த முதல் குறிப்பு ஒரு மரபுக்கவிதையாகும்.இதை எழுதியவர் Anximander தான்.அந்த கவிதையின் பெயர் 'On Nature'.இந்த தத்துவ கவிதையில் Anaximender பூமி,விலங்குகள்,தாவரங்கள் மற்றும் மனித இனம் என்பவற்றின் பரிணாமம் பற்றி விளக்கியுள்ளார்.அவரின் தத்துவப்படி, சூரியனின் சூடான கதிர்களால் கடல் வற்றத்துவங்கிய போது அதிலிருந்து வெளியேறி பூமிக்கு வந்த மீன் இனம்தான் மனிதன் மற்றும் விலங்குகளின் ஆரம்ப உயிரினம்.சடப்பிறப்புக் கோட்பாடு என்ற தனது நூலில் உலகின் முதல் உயிரினம் மூடுபனியில்தான் உருவானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Anaximender

கிரேக்க நம்பிக்கைகளின் படி தவளையிளிருந்து பரிணாமம் அடைந்த  கிரேக்க  கடவுள்  Apollo



பண்டைய பேகன் தத்துவவியலாளர்களால் முன்வைக்கப்பட்ட பரிணாமக் கொள்கை எனும் எண்ணப்போக்கு மீண்டும் 18 ஆம் நூற்றாண்டில் மேற்கத்தைய அறிஞ்சர்களால் முன்வைக்கப்பட்டது.

பண்டைய பேகன் கொள்கைகளில் அதிக ஈடுபாடு கொண்டவராக காணப்பட்ட டார்வினின் தாத்தாவான Erasmus Darwin ஒரு பரிணாம கொள்கை நம்பிக்கையாளர்.ஸ்காட்லாந்தில் இன்றும் இயங்கி வரும் Canongate Kilwinning  Masonic Lodge இல் Master பதவியில் இருந்தவராவார்.பிரஞ்சு புரட்சியை மிகக் கொடூரமான முறையில் வழிநடத்தியவர்கலானJacobins அமைப்பினரருடன் மிக நெருங்கிய தொடர்பை பேணிய இவர் மதங்களின் மீது குரோதம் பரப்பிய Illuminati அமைப்புடனும் தொடர்புகளை பேணி வந்தார்.தனது 8 ஏக்கர் தாவரவியல் பூங்காவில் அவர் மேற்கொண்ட ஆய்வு பின்னாட்களில் Darwinism க் கொள்கைக்கு உரமூட்டியது.அவர் தனது ஆய்வுகளை Temple Of Nature மற்றும் Zoonomia போன்ற நூல்களில் எழுதிவைத்தார்.

Erasmus Darwin னும் அவர் எழுதிய நூற்களும்.






இன்ஷா அல்லாஹ் 
தொடரும் ...



தொடர்புடைய பதிவுகள்.









Friday, May 10, 2013

நவீன பேகன் கலாச்சாரமும் பாசிசத்தின் வேர்களும்.


அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.



பாசிசத்தின் உருவாக்கம் - பாகம் 2  

அரிஸ்டாட்டில் 

ஐரோப்பிய பேகன் கலாச்சாரம் கிருஸ்தவ மதத்தின் பரம்பல் மூலம் ஐரோப்பியாவிலிருந்து  மறைந்து போனாலும் முழுமையாக அது அழிந்துபோகவில்லை.  கற்கைகள், சில குழுக்கள் மற்றும் பிரீமேசனரி போன்ற இரகசிய சமுதாயங்களின் பலத்தால் பண்டைய பேகன் கலாச்சாரம் மிக ரகசியமாக காக்கப்பட்டு வந்தது.பின்பு 16  ஆம் 17 ஆம் நூற்றாண்டுகளில் அது பாசிசம் என்ற புதுப் பெயர் கொண்டு ஐரோப்பிய களத்துக்கு வந்தது.ப்லேடோ மற்றும் அரிஸ்டாடில் போன்ற கிரேக்க  சிந்தனையாளர்களின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட  ஐரோப்பிய சிந்தனையாளர்களில் சிலர் பேகன் உலகின் கொள்கைகளை  சிந்தனைகளை புதுப்பிக்க நினைத்தனர்.

 இந்த நவீன பேகன் காலச்சாரம் 19 ஆம் நூற்றாண்டளவில் கிருஸ்தவத்தின் செல்வாக்கையும் மீறி தன்னை  முழு ஐரோப்பாவிலும் மிக ஆழமாக நிலைநிறுத்திக் கொண்டது. இந்த நவீன பேகன் கலாச்சாரத்தின் முன்னணியாளர்கள் " Humanist " என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். கிரேக்க சிந்தனைகளில் கவரப்பட்ட இவர்கள் அவற்றை நடைமுறைப்படுத்த நினைத்தனர். கடவுள்  இல்லை என்பதே இந்த " Humanist " களின் அடிப்படை நெறி தவறிய கொள்கை.17 ஆம் 18 ஆம் நூற்றாண்டுகளில் Humanist குழுவினர் Philosophy Of Enlightenment  இன் கொள்கைகளையும் தம் சித்தாந்தங்களில் இணைத்துக்கொண்டனர்.அறிவொளி தத்துவவாதிகள் சடவாத சிந்தனையின் மூலம் கவரப்பட்டு அதை கடுமையாக பாதுகாத்தனர்.சடவாத சிந்தனை Leucippus,Democritus போன்ற கிரேக்க சிந்தனையாலர்களினால் முன்வைக்கப்பட்ட ஒரு பிடிவாதமான கொள்கையாகும்.

பேகன் கலாச்சரத்தின் மறுபிறப்பு பிரான்ஸ் புரட்சியின் போது நன்கு அவதானிக்கப்பட்டது.பிரெஞ்சு புரட்சியை வழிநடத்தியவர்கலான The Jacobins என்ற அமைப்பு பேகன் கலாச்சாரத்தில் தாக்கத்தை கொண்டதாகவும் கிருஸ்தவ மதத்தின் மீது வெறுப்பை கொண்ட ஒரு அமைப்பாக காணப்பட்டது.புரட்சியின் காலத்தின் போது கிறிஸ்தவத்தை நிராகரித்தல் என்ற விடயம் பரவலாக முன்னெடுக்கப்பட்டது.கிருஸ்தவத்துக்குப் பதிலாக     ' Religion Of Reason' என்ற புதிய மதம் ஒன்று உருவாக்கப்பட்டது.இந்த மதத்தை முன் நின்று உருவாக்கியவர்கள் ANTONIYO FRANCIOUS - JACQUES HERBERT - PIERRE GASPARD போன்றவர்களே.கிறிஸ்தவத்துக்கு மாற்றீடாக வந்த இந்த புதிய மதம் கிறிஸ்தவத்தினால் இல்லாமாக்கப்பட்ட பண்டைய பேகன் மதத்தின் குறியீடுகளை மீண்டும்  வழக்கத்துக்கு கொண்டு வந்தது.இதன் முதல் படி 1790 July 14 அன்று புரட்சிகர வழிபாடு (Revolutionary Worship) என்று வழக்கத்துக்கு வந்தது.



பிரெஞ்சு புரட்சியை வழிநடத்தியவர்கலான THE JACOBINS அமைப்பின் தலைவர்களில் ஒருவரான Maximilian De Robesperrire தமது நடவடிக்கைகளை Cult Of Supreme Being என்ற அமைப்பின் கீழ் கொண்டு சென்றார்.இந்த அமைப்பு பிரெஞ்சு புரட்ச்சிக்குப் பின் அரச மதமாக மாறியது.இந்த அமைப்பின் செயற்பாடுகளில் மிகப் பிரபலமான செயற்பாடு எது எனில், பிரான்சின் மிகப் பிரபலமான கிருஸ்தவ தேவாலயமான Notre Dame De Paris, Temple Of Reason ஆக மாற்றப்பட்டதே.இதன் போது கிருஸ்தவ அடையாளங்கள் அழிக்கப்பட்டு அந்த அமைப்பின்அடையாளங்கள் பொருத்தப்பட்டது.மிக முக்கியமாக பண்டைய பேகன் கலாச்சாரத்தின் அறிவின் தேவதையாக வணங்கப்பட்ட Sophia வின் சிலை அங்கு நிறுத்தப்பட்டது.

அந்த தருணம்...


இப்படிப்பட்ட பேகன் கலாச்சார குறியீடுகள் மற்றும் நடைமுறைகள் பிரெஞ்சு புரட்சியின் பல இடங்களில் காணலாம்.அதில் ஒன்றுதான் புரட்ச்சியாளர்கள் அணிந்த Liberty Cap, இது பண்டைய பேகன் கலாச்சாரத்தில் இடம்பெற்ற மித்ரா கடவுள் வழிபாட்டுடன் தொடர்புடையது.இது பிரெஞ்சு புரட்சியின் ஒரு அடையாளமாக கருதப்பட்டது.இதை Phrygian Cap என்றும் அழைப்பார்கள்.
Phrygian Cap or Liberty Cap

Phrygian Cap or Liberty Cap in Mithraic Mystries
In French Revolution




மேலே உள்ள படத்தில் குறிப்பது என்னவெனில், பிரெஞ்சு புரட்சியின் போது மிகவும் பிரசித்தி பெற்றிருந்த The Cordeliers Club இன் அங்கத்தவர் அனுமதி அட்டை.இது பிரெஞ்சு புரட்சியின் ஒரு முக்கியமான புள்ளியான Maximilian De Robesperrire க்கு சொந்தமானது.அதில் விசித்திரமான சில குறியீடுகள் காணப்படுகின்றன, ஒன்று ஒற்றைக்கண் மற்றது Liberty Cap.அதில் காணப்படும் இன்னுமொரு விடயம் தான் படத்தில் குறித்துக் காட்டப்பட்டுள்ள பகுதி.அந்த இடத்தில் மரத்தண்டுகளின் பிணைப்பு மூட்டை ஒன்று காணப்படுகிறது, அதனுடன் சேர்த்து ஒரு கோடரியும் கட்டப்பட்டுள்ளது.இதற்கு லத்தீன் மொழியில் Fascis என்று அர்த்தம்.

இப்போது புரிந்திருக்குமே Fasism என்ற வார்த்தை எப்படி ஒருவானதேன்று.

பேகன் கலாச்சாரத்தின் மறுபிறப்பும் அதன் அறிவார்ந்த ஆதிக்கமும் ஐரோப்பாவில் பாசிசம் என்ற ஒரு கொடிய அரசியல் சித்தாந்தத்துக்கு வழி கொடுத்தது.மேலும் ஹிட்லரின் நாசி கொள்கைகள் பண்டைய பேகன் கலாச்சாரத்க்குரிய ஸ்பார்டாவை அடிப்படையாகக் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment