Friday, February 21, 2014

புஷ்பராஜ் தன்னை திட்டமிட்டே சுட்டதாக பாதிக்கப்பட்ட, 14 வயது சிறுவன் தமீம் அன்சாரி தெரிவித்துள்ளான்.

தொண்டைகுழிக்குள் துப்பாக்கியை வைத்து சிறுவன் சுடப்பட்டது திட்டமிட்ட போலீஸ் அராஜகம் !

இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மீது 'கொலை வழக்கு' பதிவு செய்ய வழக்கறிஞர் சங்கரசுப்பு வலியுறுத்தல் !!

நீலாங்கரை காவல்துறை ஆய்வாளர் புஷ்பராஜ் தன்னை திட்டமிட்டே சுட்டதாக பாதிக்கப்பட்ட, 14 வயது சிறுவன் தமீம் அன்சாரி தெரிவித்துள்ளான்.

ஆய்வாளர் புஷ்பராஜ் முதலில் வெறும் துப்பாக்கியை வைத்து சுட்டுவிடுவேன் என என்னை மிரட்டினார்.

பின்னர் 2 குண்டுகளை துப்பாக்கியில் போட்டு வாயில் வைத்து என்னை சுட்டார். வேண்டுமென்றே என்னை திட்டமிட்டுதான் சுட்டார்.இவ்வாறு தமீம் அன்சாரி கூறினான்.

தமீம் அன்சாரியின் தாய் சபீனார் பேகம் கூறும் போது: 

என்னுடைய மகனை காவல்துறையினர் சுட்ட பிறகு தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். ஆனால் அங்கு அவனுக்கு மருத்துவ உதவிகள் செய்வதை காவல்துறையினர் தடுத்து கொண்டிருந்தனர்.

என் மகனை கைது செய்தது குறித்து காவல்துறையினர் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. அவ்வளவு ஏன் அவனை சுட்ட பிறகு கூட தகவல் தெரிவிக்கவில்லை. பின்னர் பத்திரிகையாளர்கள் வந்து கூறிய பிறகு தான் விவரம் தெரியும் என்றார்.

வழக்கறிஞர் சங்கரசுப்பு கூறும் போது:

தூக்கு போடும் போது நொறுங்கும் எலும்புகளை குறிவைத்து ஆய்வாளர் சுட்டுள்ளார்.

காவல்துறை சமர்ப்பித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது போல் இச்செயல் கவன குறைவால் நடந்ததல்ல.

எனவே காவல்துறை ஆய்வாளர் புஷ்பராஜ் மீது கொலை முயற்சி பிரிவான 307ல் கைது செய்து சிறையிலிடைத்து சாதாரண நபர்களை விசாரிப்பதைபோல் விசாரிக்க வேண்டும்.

இவ்வளவு பாதிப்புக்கு உள்ளான சிறுவனுக்கு தமிழக அரசு வழங்கியுள்ள நிவாரணம் ரூ. 1 லட்சம் மட்டுமே.

அது 'செக்கப்' சிலவுகளுக்கு கூட போதாது.

0 comments:

Post a Comment