‘ஆம் ஆத்மி’ கட்சியின் மூத்த தலைவரான வக்கீல் பிரசாந்த் பூஷண், ஒரு டெலிவிஷன் சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘காஷ்மீரில் ராணுவம் நீடிக்கலாமா? கூடாதா? என்பது பற்றி அம...்மாநில மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்’ என்று கூறி இருந்தார். அதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், அவரது கருத்தை ‘ஆம் ஆத்மி’ தலைவரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் நிராகரித்தார். ‘காஷ்மீர் பற்றி பூஷண் கூறிய கருத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அது அவரது தனிப்பட்ட கருத்து. படைகுவிப்பு விஷயத்தில் ராணுவம் என்ன செய்ய விரும்பினாலும், அதுபற்றி வாக்கெடுப்பு நடத்த தேவையில்லை’ என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார். காஷ்மீரில் பாதுகாப்பு என்ற பெயரில் ராணுவம் செய்யும் அநீதிகள், அத்துமீறல்கள் குறித்து பெரும்பலும் உண்மைகள் மறைக்கப்பட்டாலும் அவ்வப்போது ஊடகங்களில் வெளிவராமல் இல்லை. இந்த செய்திகளை எல்லாம் கெஜ்ரிவால் அறியாதவரல்ல. காஷ்மீரில் ராணுவம் இருக்கவேண்டுமா என்பதற்கு வாக்கெடுப்பு என்பதைவிட, காஷ்மீர் மக்களின் பொதுவான மனநிலை என்ன என்பதற்கு வாக்கெடுப்பு அவசியம். இந்த வாக்கெடுப்பு விஷயத்தில் இந்தியா கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டுள்ளது என்பதை காஷ்மீர் வரலாறு அறிந்தவர்கள் அறிவர்கள். மத்தளத்திற்கு இரு பக்கம் இடி என்பதைப் போல இந்தியா-பாகிஸ்தான் என இரு பக்க இடியில் நசுங்கி கொண்டிருப்பவர்கள் காஷ்மீர் மக்கள் என்பது கெஜ்ரிவால் அறியாததா? எனவே பூஷணின் கருத்தில் தவறுமில்லை. கெஜ்ரிவாலின் முடிவு ஆரோக்கியமானதுமில்லை
0 comments:
Post a Comment