Sunday, January 05, 2014

இமாம்களுக்கு நிலம் வழங்கி வீடு கட்ட அரசு உதவி – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு


 
இமாம்களுக்கு நிலம் வழங்கி வீடு கட்ட அரசு உதவி – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்புஇது குறித்து மம்தா முஸ்லிம் தலைவர்களிடம் கூறியுள்ளதாவது, “நிலம் மற்றும் வீடு இல்லாத இமாம்களுக்கு “நிஜோ பூமி ,நிஜோ க்ரிஹா” என்ற திட்டத்தின் கீழ் நிலம் மற்றும் வீடுகள் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் மேற்கு வங்காளத்தில் மட்டும் சுமார் 30,000 திற்கும் மேற்பட்ட இமாம்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் வீடுகள் இல்லாமல் உள்ளனர். அவர்கள் விரும்பினால் “நிஜோ பூமி ,நிஜோ க்ரிஹா” என்ற திட்டத்தின் மூலம் 3 கோட்டாக்கள் நிலம் வழங்கப்படும். அவ்விடத்தில் அவர்கள் வீடு கட்டிக்கொள்ள அரசு உதவி செய்யும் என்றும் தெரிவித்தார்.

மேலும், தற்போதுள்ள விலைவாசி ஏற்றத்தைக் கவனித்து இமாம்களுக்கு மாதம்தோறும் ரூபாய் 2500 மாநில வக்ப் போர்டின் மூலம் மானியமாக வழங்க முடிவு செய்துள்ளது. இதற்கென்று அரசு அதிகாரிகள் மற்றும் இமாம்களைக் கொண்டு தனிக்குழு உருவாக்கப்படும். அவர்கள் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த உரிய வழிகாட்டுதல்களை அளிப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.

மேலும், தனது அரசு முஸ்லிம் சமூகத்திற்கு தேவையான இடஒதுக்கீடு வழங்கும் என்று தெரிவித்துள்ள அவர், தனது அரசு 10,000 மதரசாக்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. ஆனால் அந்த மதரசாக்களுக்கு நிதி அளிக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளார். அதேவேளையில் அரசு அங்கீகாரம் கிடைப்பதன் மூலம் அவை மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களின் மூலம் பயன் அடைய முடியும் என்றும் தெரிவித்துள்ளார்
 

0 comments:

Post a Comment