Sunday, January 05, 2014

சுற்றுலா விசாவில் தப்லீக் செய்வதா? நாட்டைவிட்டு வெளியேற இலங்கை உத்தரவு

சுற்றுலா விசாவில் தப்லீக் செய்வதா? நாட்டைவிட்டு வெளியேற இலங்கை உத்தரவு!

இலங்கையில் உள்ள முஸ்லிம்களுக்கு இஸ்லாம் குறித்த போதனைகளை நடத்துவதற்கு வெளிநாட்டிலிருந்து வந்த 161 முஸ்லிம்களை, விசா விதிமுறைகளை மீறியதாக கூறி நாட்டைவிட்டு வெளியேறுமாறு இலங்கை இமிகிரேஷன் அறிவித்துள்ளது. சுற்றுலா விசாவில் இவர்கள் இலங்கை வந்ததாகவும் ஆனால் இவர்கள் விதிமுறைகளை மீறி வேறு செயல்களில் ஈடுபட்டதாகவும் அறிவித்துள்ளது.

இது குறித்து இலங்கை குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்தா பெரேரா கூறுகையில், "இவர்கள் வெவ்வேறு குழுக்களாக, பெரும்பாலும் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலத்தீவு மற்றும் சில அரபுநாடுகளைச் சேர்ந்தவர்கள் எனவும் நாட்டின் பல பாகங்களிலும் அவர்கள் இஸ்லாமிய போதனைகளை நடத்தியதாகவும், அவர்களின் தொடர்பு விபரங்கள் எம்மிடமுள்ளன. அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து நாம் ஏற்கெனவே அவர்களுக்கு அறிவித்துள்ளோம் " என அவர் தெரிவித்தார்.

இது குறித்து, மாகாண ஆளுநர் அலவி மவுலானா கருத்து தெரிவிக்கையில்,"இக்குழுவினர் இலங்கையில் இருப்பது தமக்குத் தெரியும், இவர்கள் அரசியல் நோக்கம் அற்ற தீங்கற்றவர்கள்" என கூறினார்.

இவ்விஷயம் தொடர்பாக தப்லீக் ஜமாஅத்தை சார்ந்தவர்கள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி விரைவில் சந்திப்பதாக அறிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment