Sunday, January 05, 2014

பாபர் மசூதி இடிப்பு: பிரபலமான சம்பவம் என கூறமுடியாது: உச்ச நீதிமன்றம்

பாபர் மசூதி இடிப்பு ஒரு சம்பவம் மட்டுமே, அதை பிரபலம் என்றோ, பிரபலமற்றது என்றோ குறிப்பிட வேண்டியதில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே உள்ளிட்டோர் மீதான குற்றச் சதி தொடர்பான வழக்கு நீதிபதிகள் எச்.எல். தத்து, சி.கே. பிரசாத் ஆகியோர் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிடர் ஜெனரல், "புகழ்பெற்ற` பாபர் மசூதி இடிப்பு வழக்கு என்று தனது வாதத்தைத் தொடங்கினார்.அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இதில் புகழ்பெற்றது என்று என்ன இருக்கிறது. இது ஒரு சம்பவம், இதில் தொடர்புடையதாகக் கூறப்படுபவர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள், அவ்வளவுதான் என்று தெரிவித்தனர்
.

பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்தில் குற்றச் சதியில் ஈடுபட்டதாக பா.ஜ.க. தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி சிவசேனைத் தலைவர் பால்தாக்கரே உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் அவர்கள் மீதான குற்றச்சதி பிரிவு வழக்கை 2001-ல் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. மேல்முறையீடு செய்தது. உயர் நீதிமன்றமும் அந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது.

இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு குறித்து கடந்த ஆண்டு மார்ச்சில் விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், அத்வானி, தாக்கரே, கல்யாண் சிங், உமா பாரதி உள்ளிட்ட 21 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த வழக்கு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிலர் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து மார்ச் 27-ம் தேதிக்கு நீதிபதிகள் விசாரணையை ஒத்தி வைத்தனர்

0 comments:

Post a Comment