ஜெயலலிதா, நரேந்திர மோடி போன்ற வெளிப்படையான தலைவர்கள்தான் நம்முடைய நாட்டுக்கு இப்போது தேவை.பாரதிய ஜனதாவும் அ.தி.மு.க.வும் இயல்பான கூட்டாளிகள் என்றார் பா.ஜ.க .மூத்த தலைவர் அத்வானி.
துக்ளக் இதழ் ஆண்டு விழாவில் அத்வானி பேசியது: "பாஜக-வுக்கும் அதிகமுக-வுக்கும் இடையே இயற்கையான கூட்டணி அமைந்துள்ளது என்பதை ஆரம்பம் முதலே கூறி வருகிறேன். தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் அதிமுக நேரடியாகக் கூட்டணி வைத்துக் கொள்ளவில்லை என்றபோதும், நாடாளுமன்ற கூட்டத்தொடர்களில் இரு கட்சிகளின் ஒற்றுமையும் மேலோங்கி வருகிறது.
இவ்வாறு கூறுவதால், ஏதாவது அரசியல் தந்திரம் உள்ளதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். பல்வேறு விவகாரங்களில் இரண்டு கட்சியும் ஒரே கருத்தை, எண்ணத்தைக் கொண்டிருப்பதே இதற்குக் காரணம்.ஜெயலலிதா, நரேந்திர மோடி போன்ற வெளிப்படையான தலைவர்கள்தான் நம்முடைய நாட்டுக்கு இப்போது தேவை.
நாட்டின் பொருளாதாரம் மேம்பட, மத்தியில் பலமான ஆட்சி தேவை, அதே நேரம், மாநிலங்களில் பலமான ஆட்சியை அமைக்காமல், மத்திய அரசை மட்டும் சக்திவாய்ந்ததாக மாற்றுவதில் எந்தப் பயனும் இல்லை. எதிர்பாராதவிதமாக காங்கிரஸ் அரசு இதைத்தான் செய்து வருகிறது. மாநிலங்களினுடைய அதிகாரங்களைப் பறித்து, மத்திய அரசைப் பலமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. குறிப்பாக, காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறாத கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்கள் மீது விரோதப் போக்கை காங்கிரஸ் அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவை ஆளும் தகுதி தங்களுக்கு மட்டுமே உள்ளதாக காங்கிரஸ் கட்சி நினைத்துக் கொண்டிருப்பதே, இதுபோன்ற நடவடிக்கைகளுக்குக் காரணம். கடந்த காலங்களின் மூலம் எந்தவித பாடங்களையும் இக்கட்சி கற்றுக் கொள்ளவில்லை என்பதே இதில் தெளிவாகிறது. இதுபோன்ற தவறான எண்ணங்களை முறியடிக்க, ஜனநாயக ஆட்சி மலர வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களும், சுமூகமான மத்திய - மாநில உறவு நிலைக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் ஒருங்கிணைய வேண்டும். பாஜக-வும் அதிமுக-வும் ஒருங்கிணைய வேண்டும்` என்றார் அத்வானி
0 comments:
Post a Comment