Monday, August 11, 2014

துருக்கியின் நேரடி அதிபர் தேர்தலில் பிரதமர் எர்துகான் வெற்றி!

துருக்கியின் முதல் நேரடி அதிபர் தேர்தலில் பிரதமர் எர்துகான் வெற்றி!
துருக்கியில் நேற்று நடைபெற்ற முதல் நேரடி அதிபர் தேர்தலில் ஏற்கனவே  துருக்கியில் 10 ஆண்டுகளாக
பிரதமர் பதவி வகித்து வந்த  ரஜப் தையிப் எர்துகான் 52 சதவீத வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.
ஏ.கே.கட்சியின் சார்பாக தற்போதைய துருக்கி பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகானும், எதிர்கட்சிகளான சி.ஹெச்.பி, எம்.ஹெச்.பி ஆகியவற்றின் கூட்டு வேட்பாளர் இக்மாலுத்தீன் இஹ்ஸான் ஓக்லுவும், தீவிர வலதுசாரி தேசிய இயக்கத்தின் ஆதரவுடன் குர்து இனத்தைச் சார்ந்த ஸலாஹுத்தீன் தெமிர்தாஸும் அதிபர் தேர்தலில் முக்கிய வேட்பாளர்களாக களமிறங்கினர்.
தேர்தலில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறுபவர்கள் அதிபராக தேர்வுச் செய்யப்படுவார். இதுநாள் வரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வாகவும், மரியாதை நிமித்தமான அலங்கார பதவியாகவும் இருந்த அதிபர் பதவி முதன்முறையாக இந்தமுறை பொதுமக்கள் வாக்கெடுப்பின்மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக பாதி வாக்குகளுக்கு மேல் எண்ணப்பட்ட நிலையில் தனக்கு நெருங்கிய போட்டியாளரான இஹ்ஸான் ஓக்லுவை (38.3) விட 13 புள்ளிகள் அதிகம் பெற்றும், எண்ணப்பட்ட வாக்குகளில் 51.9 சதவிகிதத்தினைப் பெற்றவருமான எர்துகான் வெற்றி பெற்றுள்ளதாக நீதித்துறை அமைச்சர் பெகிர் போஸ்டாக் தனது இணையதள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment