Tuesday, August 05, 2014

நெதர்லாந்தில் சுப்பர் மார்கட் ஒன்று இஸ்ரேலிய உற்பத்திகளைப் புறக்கணிக்க ஆரம்பித்துள்ளது

நெதர்லாந்தில் உள்ள ஜேர்மனை தலைமையகமாகக் கொண்ட பிரசித்தி பெற்ற சுப்பர் மார்கட் ஒன்று இஸ்ரேலிய உற்பத்திகளைப் புறக்கணிக்க ஆரம்பித்துள்ளது.
ஜேர்மனுக்குச் சொந்தமான Aldi என்ற சுப்பர் மார்கட் நிறுவனமே இவ்வாறு இஸ்ரேலிய உற்பத்திகளை புறக்கணித்துள்ளது.

இஸ்ரேலின் மேற்குக் கரை, கிழக்கு அல் குத்ஸ் (ஜெரூசலம்) மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட சிரியாவின் கோலன் குன்று போன்ற பகுதிகளின் உற்பத்திகளை புறக்கணிக்கத் தீர்மானிக்கப்பட்டதாக அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறினார்.

சென்ற வார முதல் பகுதியில் நெதர்லாந்தின் முன்னனி சுப்பர் மார்க்கட்களான Hoogvliet, Jumbo என்பன இஸ்ரேலிய உற்பத்திகளை புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளதாக நெதர்லாந்தின் செய்தித் தாள் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தன.

பலஸ்தீனிலுள்ள சட்ட விரோத யூதக் குடியேற்றப் பகுதிகளில் இருந்து வரும் உற்பத்திப் பொருட்களே பிரதானமாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.

"Boycott Israeli Products" என்ற வாசகமும் அந்த சுப்பர் மார்க்கட்டில் விற்பனைக்கெ வைக்கப்பட்டுள்ள பொருட்களில் ஒட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment