Monday, April 21, 2014

இஸ்லாமியர்கள் பயப்பட தேவையில்லை’ கூறுகிறார் ராஜ்நாத் சிங்!

புதுடெல்லி: செய்தி நிறுவனத்திற்கு ஒன்று பேட்டியளித்த பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் ‘இஸ்லாமியர்கள் பயப்பட தேவையில்லை’ என்று கூறியுள்ளார்.
பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிதான் அடுத்த பிரதமர் என்று கூறிய ராஜ்நாத் சிங்கிடம், இஸ்லாமியர்கள் கவலை குறித்து செய்தியாளர்  கேள்வி எழுப்பியபோது அதற்கு பதில் அளித்த அவர்,
“நாங்கள் அவர்களுடைய அச்சத்தை படிப்படியாக நீக்கி வருகிறோம். அவர்களுடைய அச்சம் பேச்சுவார்த்தை மூலம் நீக்கப்படும்” என்று கூறினார்.
பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இஸ்மியா தலைவர்களை சந்தித்து பேசவுள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பியபோது ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடக்கிறது. மோடிஜியும் அவர்களுடன் தொடர்ந்து பேசி வருகிறார். தற்போது இஸ்லாமியர்கள் மோடியை ஆதரிப்பதை நீங்கள் பார்க்க முடியும் என்று கூறினார். இஸ்லாமியர்கள் அனைவரும் தற்போது மோடியை ஆதரிக்கின்றனர். நரேந்திர மோடி ஆட்சி செய்யும் குஜராத் மாநில இஸ்லாமிய மக்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கின்றனர். மற்றும் அவர்களுடைய தனிநபர் வருமானம் விகிதமும் மற்ற மாநிலங்களைவிட குஜராத்தில் அதிகமாக உள்ளது என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
இந்த தகவல்கள் படிப்படியாக இஸ்லாமிய மக்களுக்கு கொண்டு செல்லப்படும். காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கட்சிகள் என்று கூறிகொள்ளும் கட்சிகள் தவறான தகவல்களை திட்டமிட்டு பரப்பி வருகிறது. இஸ்லாமியர்கள் மோடிக்கு மிகவும் நெருக்கமாகி வருகின்றனர். பயம் என்ற மாயை விரைவில் முடிவுக்கு வரும் என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
- See more at: http://www.thoothuonline.com/archives/64858#sthash.8P0OKqaQ.dpuf

0 comments:

Post a Comment