Saturday, April 26, 2014

நபியை திட்டிய பாதிரியாரை ஓங்கி அறைந்த அமெரிக்க முஸ்லிம் பெண்

கிறிஸ்த்துவ மதத்தை பரப்ப ஒரு பாதிரியார் அமெரிக்க நகரம் ஒன்றில் பிரசாரம் மேற்கொண்டார். மூன்று கடவுள் கொள்கையை தனது பிரசாரத்தில் மிக சத்தமாக சொல்லிக் கொண்டிருந்தார்.
அந்த வழியே சென்ற ஒரு அமெரிக்க முஸ்லிம் பெண்மணி இவரின் பொய்யான தகவல்களை சிறிது நேரம் கேட்டார்.
ஏசு நாதரைப் பற்றி தவறான செய்திகளை அந்த பாதிரி சொல்வதைக் கேட்டு அவருக்கு பதிலளிக்க முற்பட்டார். ஏசு நாதர் மூன்று கடவுள் கொள்கையை பிரசிங்கவில்லை. அவரும் ஏக இறைவனையே வணங்கச் சொன்னார் என்று பைபிளிலிருந்து ஆதாரங்களை சொல்ல ஆரம்பித்தார்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த பாதிரியார் அந்த பெண்ணை நோக்கி இஸ்லாத்தை பற்றிய தவறான விமர்சனங்களை வைக்க ஆரம்பித்தார். முகமது நபியை பற்றி மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்தார். முகமது நபியின் மீது அவதூறுகளை வைத்ததை அந்த பெண்ணால் பொறுக்க முடியவில்லை.
கோபம் உச்சத்துக்கு ஏற அந்த பாதிரியாரை ஓங்கி ஒரு அறை விடுகிறார் அந்த பெண்மணி. அங்கு கூடியிருந்தவர்கள் அந்த அமெரிக்க பெண்ணுக்கு எங்கோ ஒரு பாலைவனத்தில் பிறந்த நபிகள் நாயகத்தின் மேல் உள்ள அதீத பற்றை நினைத்து ஆச்சரியப்பட்டனர்.
அமெரிக்காவானது நாகரீகத்தின் உச்சத்தில் உள்ள நாடு. ஆனால் நபிகள் நாயகத்தின் கொள்கையோ அமெரிக்க கலாசாரத்துக்கு எதிரானது. அந்த நாகரீக சமூகத்தில் வாழ்ந்து வரும் அந்த பெண் நபிகள் நாயகத்தின் மேல் வைத்த அன்பை நினைத்து ஆச்சரியப்படுகிறோம்.

ஓரிறைக் கொள்கை பிரசாரத்தில் நம் அனைவருக்கும் இறைவன் பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் தந்தருள்வானாக!
-முத்துப்பேட் நிவ்ஸ்-

1 comment:

  1. சொந்த காசுல சூனியம் வச்சிகிறது இதுதானோ..

    ReplyDelete