
ஒஸ்ட்ரிய நாட்டு இரண்டு இளம் வயது யுவதிகளை தேடித்தறுமாரு சர்வதேச பொலிஸாரிடம் (இன்டர் போல்) குறித்த விசாரனைகளை ஒஸ்ட்ரிய பொலிஸார் ஒப்படைத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பொஸ்னியா நாட்டிலிருந்து ஒஸ்ட்ரியாவில் வந்து குடியேரிய குடும்பத்தை ஒஸ்ட்ரிய நாட்டு குடியுரிமையுள்ள சம்ரா 16 வயது ,சபினா 15 வயது எனும் இளம் யுவதிகள் இருவரையும் கடந்த 2014 ஏப்ரல் 10 ம் திகதி முதல் காணவில்லை என அவர்களது பெற்றோர்களால் ஒஸ்ட்ரிய பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது,
இதனை தொடர்ந்து குறித்த யுவதிகள் இருவரும் 'ஆயிரக்கணக்கான அப்பாவி சிறுவர்களும் பெண்களும் சிரிய யுத்தத்தில் கொல்லப்படுவதாகவும் முஸ்லீம்களுக்காக சிரிய யுத்தத்தில் தாம் இருவரும் போராட "ஹொலி வோர்" சென்றுள்ளதாக தமது பேஸ்புக் பக்கத்தில் புகைப்படங்களை பதிவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
கடைசியாக இவர்களின் பேஸ்புக பக்கத்தில்' இறப்பு எங்கள் இலக்கு ' ' புனித வீரர்கள் ' களை நாங்கள் திருமணம் செய்யப்போகிறோம் எனவும் பதிவிட்டுள்ளனர்,
குறித்த யுவதிகளின் பெற்றோர்கள் தமது மகள்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என ஒஸ்ட்ரிய பொலிசாரிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
- See more at: http://madawalanews.com/news/world/12312#sthash.kHr5ZsH7.dpuf
0 comments:
Post a Comment