Sunday, March 09, 2014

உக்ரைனின் கிரீமியா பகுதியும் - தாத்தர் இன முஸ்லிம்களும்..

உக்ரைனின் கிரீமியா பகுதியும் - தாத்தர் இன முஸ்லிம்களும்..

உக்ரைனின் ஒரு பகுதியாக இருக்கும் கிரீமியா ரஷியாவுடன் ஓர் மாகாணமாக இணைய திடீர் முடிவு செய்துள்ளது--- தற்போதைய ரஷ்சியா மற்றும் உக்ரேனின் குழப்பங்களுக்கு மத்தியில் சோவியத் யூனியன் பிளவிற்கு பிந்தைய உக்ரேனின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி கிரீமியா. இப்பகுதி இயற்கை வளம் உள்ள கருங்கடல் பகுதியில் அமைந்துள்ள காகாசஸ் மலைத்தொடரின் அருகில் அமைந்துள்ள பகுதி.. சோவித் யூனியன் பிளவிற்கு பின்னர் மீண்டும் இந்த பகுதியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர ரஷ்சியா முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது..

கடந்த சில நாட்களாக உக்ரேனின் ஐரோப்பிய நலன் சார்ந்த ஐரோப்பிய யூனியனில் உக்ரேனை இணைக்கும் தீர்மானத்திற்கு உக்ரேன் அதிபர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அவருக்கு எதிரான போராட்டத்தில் அதிபர் பதவிட்டு விட்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு உக்ரேனின் கிரீமியா பகுதிகளில் ரஷ்ய ராணுவம் நிலை கொண்டது.. தற்பொழுது கிரீமியா பகுதியில் விருப்ப வாக்கெடுப்பு நடத்தப்பட்டு கிரீமியா ரசியாவிற்கு அல்லது உக்ரேனுக்கு என்று இப்பகுதி ஆட்சியாளர்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.. ஆனால் இந்த முடிவு ரஸ்சியாவின் தூண்டுதலின் பெயரிலான வாக்கெடுப்பு என உக்ரேன் அமெரிக்க ஐரோப்பா நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன..காரணம் 2001 ஆம் ஆண்டு உக்ரேனின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இப்பகுதி மக்களில் சுமார் 58% மக்கள் ரசியர்களே ஆவர் , வெறும் 24% மக்கள் மட்டுமே உக்ரேனியர்கள் ஆவர்..மேலும் 12.10% மக்கள் தாத்தர் இனம் முஸ்லிம்கள் ஆவர்.அதிலும் முஸ்லிம்கள் பெருவாரியாக வசிக்கும் உக்ரேனிய பகுதியே கிரீமியா பிரதேசம் தான்..

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் 1944 ஆம் ஆண்டு வரை இந்த பகுதியில் பெருவாரியான மக்கள் தாத்தர் முஸ்லிம்கள் தான்..14 ஆம் நூற்றாண்டிற்கு பின்னர் தாத்தர் இன மக்கள் செங்கிஸ் கான் ராணுவத்தின் ஒரு பகுதியினராக இருந்து பின்னர் செங்கிஸ் கான் ராணுவம் பல கூறுகளாக பிரிந்த போது இப்பகுதியில் குடியேறிய பின்னர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்..1750-1800 ஆம் ஆண்டு காலகட்டத்தில் பள்ளிவாசல்கள் மற்றும் இஸ்லாமிய கல்வி நிலையங்கள் மட்டும் கிட்டத்தட்ட 1800 அதிகமாக இருந்தது..பின்னர் ஜார் மன்னர் ஆட்சி காலத்தில் தாத்தர் இன முஸ்லிம்களுக்கு எதிரான வெளிப்படையாகவே வன்முறைகள் அரங்கேற்றப்பட்டது..சார் மன்னர் ஆட்சி இப்பகுதில் பல ஆயிரம் ரஷியர்களை வலுக்கட்டாயமாக குடியேற்றினர்.பின்னர் ஜார் மன்னராச்சி வீழ்த்தப்பட்டு சோவியத் ரஷ்யா உருவாக்கப்பட்ட பின்னர் தாத்தர் இனம் உள்ளிட்ட ரஸ்சியாவில் வாழ்ந்த பல இனங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.தாத்தர் இன மக்களின் மொழியும் கிரீமியா பகுதிகளில் அங்கீகரிக்கப்பட்டது.. இவை எல்லாம் 1928 ஆம் ஆண்டு வரை தான்..

பின்னர் ஸ்டாலினின் ஐந்து ஆண்டு திட்டத்தின் மூலம் இப்பகுதி மக்களின் வாழ்க்கை தரம் முற்றிலும் மோசமடைந்தது . விவாசாய வளம் கொழிக்கும் இப்பகுதியில் வலுக்கட்டாயமாக ரஷ்சியர்கள் குறியேற்றம் அதிகரித்தது .மேலும் தாத்தர் இன மக்களின் மொழியின் எழுத்து வடிவமும் ரோமன் எழுத்துருவில் மாற்றப்பட்டது..ரஸ்சியர்களை திட்டமிட்டு குடியேற்றும் ஸ்டாலினின் திட்டத்தின் விளைவாக 500 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் வாழ்ந்து வந்த மக்களின் கிட்டத்தட்ட 1917-1933 ஆம் ஆண்டு வரை 150000 தாத்தர் இன மக்கள் அதாவது அந்த காலகட்டத்தின் சுமார் 50% மக்கள் கொல்லப்பட்டனர் அல்லது இப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்..

பின்னர் 1944 ஆம் ஆண்டு காலகட்டம் இப்பகுதியில் வாழ்ந்து வந்த தாத்தர் இன முஸ்லிம் மக்களுக்கு மிகவும் கொடூரமான காலகட்டம் .இக்கால கட்டத்தில் ஸ்டாலின் அரசு மற்றொரு கொடூரத்தை தாத்தர் இன மக்களுக்கு எதிராக அரங்கேற்றியது ..தாத்தர் இன மக்கள் ஹிட்டர் பாடைக்கு உதவி செய்கிறார்கள் என்ற போர்வையில் ஒட்டுமொத்த தாத்தர் இன மக்களுக்கும் இந்த பகுதியை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். பாதி மக்கள் கொல்லப்பட்டனர்..இதன் விளைவு ஒரு கால கட்டத்தில் கிரீமியா பெரும்பான்மையாக வாழ்ந்து வந்த தாத்தர் இன முஸ்லிம்களின் மக்கள் தொகை முற்றிலும் அழிக்கப்பட்டது.

பின்னர் சோவியத் யூனியன் பிளவிருக்கு பின்னர் கிரீமியா பகுதி மீண்டும் உக்ரேனின் கட்டுப்பாட்டில் வந்தது..1989 ஆம் ஆண்டு வரை வெறும் 38000 தாத்தர் இன மக்கள் வாழ்ந்துவந்தனர்..பின்னர் ரஸ்சியாவின் உடைவிற்கு பின்னர் பல நாடுகளில் அகதிகளாக விரட்டி அடிக்கப்பட்ட தாத்தார் இன மக்கள் தங்களின் கிரீமியா நிலப்பரப்பிற்கு திரும்பினர்..இதனால் இன்று தாத்தர் இன மக்களின் மக்கள் தொகை 270000 ஆயிரமாக அதிகரித்துள்ளது.. இருப்பினும் கூட இன்றும் பெரும்பகுதி ஸ்டாலினால் விரட்டி அடிக்கப்பட்ட தாத்தர் இன மக்கள் துருக்கி உள்ள்ளிட்ட பல நாட்களில் வாழ்ந்து வருகின்றனர்.. அவர்கள் கிரீமியா பகுதிக்கு திரும்பவில்லை.. இதனால் இவர்களின் இன்றைய மக்கள் தொகை என்பது 12% மட்டும் உள்ளது..

மேலும் தற்போதைய நிலையில் ரஷ்சியா எப்படியும் ஓட்டெடுப்பில் கிரீமியா பகுதியை தனது நாட்டின் ஒரு மாகாணமாக இணைப்பது என்பது 100% சாத்தியம்..காரணம் இப்பகுதியின் முன்பு திட்டமிட்டு குடியேற்றப்பட்ட ரஸ்சிய மக்களின் எண்ணிக்கையே அதிகம் அதுவும் 58% அளவுக்கு உள்ளது..இவர்கள் எப்படியும் ரசியாவுடன் இணைவே ஆதரிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.. ஒரு வேலை கிரீமியா ரசியாவுடன் இணைக்கும் பட்ச்டத்தில் முன்னர் தாத்தார் இன மக்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட கொடுமைகள் மீண்டும் அரங்கேற்றப்படுமா ? அதை போல இங்கு வாழும் பூர்வீக 24% உக்ரேன் மக்களின் நிலை என்ன என்பது நிட்சயம் கேள்விக்குறி தான்..?காரணம் ரஸ்சிய ராணுவம் கிரீமியா நகரின் பார்லிமெண்டை கைப்பற்றிய போது அதை எதிர்த்து வலுவாக போராட்டத்தை உக்ரேனியர்கள் நடத்தினர் .அதில் பெரும்பான்மை மக்கள் தாத்தார் இன முஸ்லிம்களே ஆவர்.காரணம் இவர்கள் முன்பு ரசியாவால் அனுபவித்து வந்த கொடுமை அப்படியானது ஏற்கனவே ரசியாவின் கொடூரத்தால் செசன்யா அனுபவித்து வரும் கொடுமைகள் சொல்லிமாளாது..அந்த வரிசையில் கிரீமியா பகுதியும் சேராமல் இருந்தால் நல்லது தான்.. எல்லாம் இயற்கை வளங்கள் மற்றும் அதிகாரத்தை தக்கவைக்க நடக்கும் யுத்தங்கள் ..ஆனால் பாதிகப்படுவது அப்பாவி மக்கள் தான்..

0 comments:

Post a Comment