Sunday, March 02, 2014

தொழுகைக்கு அழைக்கும் அமெரிக்கா வெளியுறவு துறை அமைச்சர்

தொழுகைக்கு அழைக்கும் அமெரிக்கா வெளியுறவு துறை அமைச்சர்
இன்று தொழுகைக்கு அழைத்தவர்
நாளை தொழுகையாளியாக மாறுவாரா??
*********************************************************
தொழுகைக்கான அழைப்பாக உள்ள பாங்கு ஓசைக்கு முன்பாக தமிழகத்தில் சில ஊர்களில் நகரா என்று சொல்ல படுகின்ற கொட்டை அடித்து தொழுகைகான நேரம் வந்து விட்டதை அறிவிக்கும் ஒரு வழமை நடைமுறையில் இருந்தது

ஒலி பெருக்கியின் வருகைக்கு பிறகு இந்த நடை முறை முற்றாக குறைந்து விட்டது

ஆனால் இந்தோனேஷியவில் இன்னும் அந்த வழமை நடைமுறையில் இருந்து வருகிறது

அண்மையில் இந்தோனிஷியாவிர்கு அரசு முறை சுற்று பயணம் சென்றிருந்த அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் அங்குள்ள ஒரு இறை இல்லத்தை பார்வையிட சென்றார்

அப்போது தொழுகைக்கான நேராம் வந்து விடவே நகரா அடிப்பதர்கு சென்ற பள்ளியின் ஊளியரின் கையிலிருந்த கம்புகளை வாங்கி அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் தொழுகைக்கான அழைப்பு விடுக்கும் காட்சியை தான் படம் விளக்குகிறது

முஸ்லிம்களை எதிர்ப்பதையே முழு நேர பணியாக கொண்ட அமெரிக்காவின் வெளியுறவு துறை அமைச்சர் தொழுகைக்காக அழைப்பு விடுக்கும் பணியை செய்திருப்பது இதமான செய்தியாக இருந்தாலும் அவர்கள்செய்துள்ள பாவம் களை கழுகுவதர்கு இந்த நகரா அடிப்பது மட்டும் பரிகாரமாக ஆகாது

இஸ்லாத்தின் அழைப்பை ஏற்று தன்னை முஸ்லிமா மாற்றி கொள்வதால் மட்டு மே அவர் செய்துள்ள பாவத்திர்கு பரிகாரம் தேட முடியம்

இன்று தொழுகைக்கு அழைத்தவர் நாளை தொழுகையாளியாக மாறுவாரா?? இறைவன் நாடினால் அதுவும் சாத்தியமே

0 comments:

Post a Comment