----------------------------------------------------------------------------------
\
தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள 3.5 சதவித இடஒதுக்கீட்டை அதிகரித்து தர வேண்டும்,தேசிய அளவில் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் மற்றும் சச்சார் கமிட்டி பரிந்துரைகளின் அடிப்படையில் 10 சதவிகித இட ஒதுக்கீட்டை அளிக்கவேண்டும் என்று வலியுறுத்தி கடந்த வருடம் தமிழகம் முழுவது ரத யாத்திரை பயணத்தை நடத்தியது இந்திய தவ்ஹீத் ஜமாத்.
தமிழகம் முழுவதும் சுமார் 20 நாட்கள் பயணித்த இந்த ரத யாத்திரையின் மூலம் தமிழக முஸ்லிம்கள் மத்தியில் இட ஒதுக்கீட்டின் அவசியத்தையும், அரசாங்கத்திற்கு இந்த கோரிக்கையின் முக்கியத்துவத்தையும் உணர்த்தியது இந்திய தவ்ஹீத் ஜமாஅத்.இந்த யாத்திரை குறித்த செய்திகளை முக்கியத்துவத்துடன் மீடியாக்கள் செய்தி வெளியிட்டன.
ரத யாத்திரைக்கு பின் தொடர்ந்து பல்வேறு வகையில் இட ஒதுக்கீடு குறித்து அரசின் கவனத்திற்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கொண்டு சென்ற வண்ணம் இருந்தது.ரத யாத்திரைக்கு பின் அ.தி,மு.க வின் முன்னணி தலைவர்களை சந்தித்து கோரிக்கை கடிதம் அளித்ததுடன் ,இடவொதுக்கீடு ஒன்றே முஸ்லிம்களை திருப்திபடுத்தமுடியும் இதர சலுகைகள் அல்ல என்ற யதார்த்தமும் அவர்களுக்கு ஜமாஅத்தின் மாநில நிர்வாகிகளால் விளக்கப்பட்டது.
தொடர்ந்து,இடவொதுக்கீடு குறித்த சச்சார் கமிட்டி,மிஸ்ரா கமிஷன் அறிக்கைகள் மற்றும் ஆவணங்கள்,இடஒதுக்கீட்டை அதிகப்படுத்துவதற்கு சாதகமான அம்சங்கள் ஆகியவற்றை தொகுத்து கோப்பு ஒன்றை முதல்வர் ஜெயலலிதாவிடம் கடந்த மாதம் சேர்பித்தது இந்திய தவ்ஹீத் ஜமாஅத்.இதனை அடுத்து,கடந்த சில தினங்களுக்கு முன்,முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் சென்னையில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளை சந்தித்த,அ.தி.மு.க வின் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான குழுவினர், இட வோதுக்கீடு குறித்த கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.அப்பொழுதும் அவர்களிடத்தில் தெளிவான விளக்கங்களை தலைவர் எஸ்.எம்.பாக்கர், துணை தலைவர் முஹம்மது முனீர்,துணை பொது செயலாளர் சித்திக் ஆகியோர் விளக்கினர்.
பாராளுமன்ற தேர்தலில் ஆதரவு குறித்தும் இச்சந்திப்பின் பொது பேசப்பட்டது.அப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன் இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தி தருவோம் என அ.தி.மு.க சார்பில் அறிவித்து அதற்கான முன்முயற்சி எடுத்தால் மட்டுமே இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆதரவை பெற முடியும்,அதன் மூலம்,கடந்த சட்ட மன்ற தேர்தலின் போது இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மேற்கொண்ட அ.தி.மு.க ஆதரவு பிரசாரங்களை போன்று வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க வின் வெற்றிக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் களப்பிரசாரங்களை மேற்கொள்ளும்.ஆயினும் இந்த விஷயத்தில் அ.தி.மு.க வின் உறுதியான நடவடிக்கையை பொறுத்தே இம்மாதம் நடைபெறவிருக்கும் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயற்குழுவில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அவர்கள் விளக்கி கூறினர்.
இவற்றை ஒ.பன்னீர் செல்வம் குழுவினர் முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு கொண்டு சென்றதன் விளைவாக, பிற்படுத்தப் பட்டோர் ,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை துறையின் முதன்மை செயலாளர் அருள்மொழி,தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு கடிதம் அனுபியுள்ளார்.அதில், 'இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் மற்றும் (முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டிற்காக தொடர்ந்து கோரிக்கைகளை எழுப்பி வரும்) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் ஆகியோர் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.அதில் கல்வி வேலை வாய்ப்பில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தி தர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.அந்த கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.அதனை ஆய்வு செய்து,தகுந்த பரிந்துரையை அரசுக்கு விரைந்து அனுப்பி வைக்க வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.
அ.தி.மு.க வின் இந்த முயற்சி வரவேற்கத் தகுந்தது.வெறும் ஆணையத்தின் ஆய்வோடு நின்றுவிடாமல்,பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன் இடவொதுக்கீடு விஷயத்தில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை அ.தி.மு.க தொடங்கினால் மட்டுமே முஸ்லிம் சமுதாயத்தின் ஒட்டு மொத்த ஆதரவையும் அது பெற முடியும் என்பதை ஒ.பன்னீர் செல்வம் குழுவினர் முதல்வருக்கு எடுத்து சொல்ல வேண்டும்.








0 comments:
Post a Comment