Tuesday, March 11, 2014

ஹார்வர்ட் பல்கலை கழகத்தின் சட்டபிரிவு நுழைவு வயலில் திருமறை அல் குர்ஆன்

அஸ்ஸலாமு அலைக்கும்......

உலக புகழ் பெற்ற பல்கலை கழகங்களில் ஒன்று அமெரிக்காவில் அமைந்துள்ளஹார்வர்ட் பல்கலைகழகம்

இந்த பல்கலை கழகத்தின் சட்டபிரிவு நுழைவு வயலில் திருமறை அல் குர்ஆனின் நான்காவது அத்தியாயத்தின் 135 வசனத்தை ஆங்கில மோழியில் மொழிபெயர்த்து பதித்துள்ளனர்

இந்த நுழைவு வாயிலில் அதிமுக்கியத்துலம் வாய்ந்த வார்த்தைகளை மட்டுமே பதிப்பது வழக்கம்

உலகின் நீதி பரிபாலனை எப்படி இருக்க வேண்டும் என்பதை அற்புதமாக விளக்கும் வசனமாக குர்ஆனின் நான்காவது அத்தியாயத்தின் 135 வது வசனம் அமைந்திருப்பதால் அதனை மொழிபெயர்த்து எங்கள் பல்கலை கழகத்தின் சட்டபிரிவு நுழைவு வாசலின் முகப்பில் பதித்துள்ளோம் என பல்கலை கழக நிறுவாகம் தெரிவித்துள்ளது

பல்கலை கழகத்தை கவர்ந்த வசனம் விரைவில் அமெரிக்க முழுவதையும் கவர்ந்திழுக்க இறைவன் அருள் புரியட்டும்.


///அந்த குர்'ஆன் வசனம்:
நம்பிக்கை கொண்டவர்களே உங்களுக்கோ பெற்றோருக்கோ உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் நீங்கள் நீதியை நிலை நாட்டுவோராகவும் அல்லாவுக்காஹ சாட்சி கூறுவோராகவும் ஆகிவிடுங்கள் (வாதியோ பிரதிவாதியோ) செல்வந்தனாக இருந்தாலும் ஏழையாக இருந்தாலும் அவ்விருவருக்கும் அல்லாஹ்வே பொறுப்பாளன் நீதி வழங்குவதில் மனோ இச்சையை பின் பற்றாதீர்கள் நீங்கள் (சாட்சியத்தை) புரட்டினாலோ புறக்கணித்தாலோ நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கு அறிந்தவனாக இருக்கிறான். [அத்தியாயம் 4 வசனம் 135] ///

செய்திக்கான மூலம்: http://www.bubblews.com/news/223174-quranic-verses-are-enshrined-harvard-university

0 comments:

Post a Comment