Monday, February 24, 2014

முஸ்லிம்கள் மீது எப்படிப்பட்ட காழ்புணர்வை ஊடகங்கள் கொண்டுள்ளன என்பதற்கு எடுத்துக்காட்டு இன்றைய மாலைமலர் நாளிதழில் வந்த பரபரப்பு செய்தி.

முஸ்லிம்கள் மீது எப்படிப்பட்ட காழ்புணர்வை நமது தமிழக ஊடகங்கள் கொண்டுள்ளன என்பதற்கு மற்றுமொறு எடுத்துக்காட்டு இன்றைய மாலைமலர் நாளிதழில் வந்த பரபரப்பு செய்தி.

த்வானி அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு மதுரை வந்த போது அவர் செல்லவிருந்த பாதையில் பைப் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதாக ஊடகங்கள் கொக்கரித்தன.

இன்றைய நாளிதழில் பறவை பாதுஷா என்பவர் கேரளாவில் கைது செய்யப்பட்டதாகவும் அவர் மதுரை கொண்டு வரப்படுகிறார் என்றும் செய்தி வெளியாகியிருந்தது.

இதில் நம்மை சிரிப்புக்கு உள்ளாக்கிய சம்பவம் என்னவென்றால்; மாலைமலர் செய்தித்தாள் இந்த செய்தியை பரபரப்பாக முதல் பக்கத்தில் வெளியிட்டிருந்ததும், அதில் பெங்களூர் பிஜேபி அலுவலக குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேலாக சிறையில் இருக்கும் சகோ. கிச்சான் புகாரி அவர்களின் படத்தை போட்டு பறவை பாதுஷா என குறிப்பிட்டு இருந்ததும்தான் இவர்களின் பத்திரிக்கை எவ்வளவு பொறுப்போடு செயல்பட்டு வருகிறது என்பதற்கு சிறந்த சாட்சி. 

பொய் சொல்வதற்கு இந்த பார்ப்பன பரதேசி பத்திரிக்கைக்கு ஒரு அளவே இல்லாமல் சென்று கொண்டிருப்பதை இந்த சம்பவத்தின் ஊடாக தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் தமிழக மக்களை எவ்வளவு விவரம் இல்லாதவர்கள் என இவர்கள் நினைத்து கொண்டிருப்பதும் உறுதியாகிறது.

இரண்டாவதாக, பறவை பாதுஷா என்ற பெயர் எப்போதும் இல்லாமல் இப்போது புதிதாக வெளிவந்திருக்கிறது. இப்படி ஒரு பெயரை உடையவர் அந்த பத்திரிக்கையில் குறிப்பிட்டது போன்று மேலப்பாலயத்திலேயே இல்லை என நண்பர்கள் வட்டாரம் உறுதிப்படுத்துகிறது.

பறவை பாதுஷாவும் இல்லை, காராபூந்தியும் இல்லை, மைசூர் பாக்கும் இல்லை. மாலைமலருக்கு இந்த தேர்தல் நேரத்தில் கோவை பாஷா போன்று ஒரு பெயர் தேவை. அதனால், இப்படி ஒரு இல்லாத பெயரை சூட்டி விஷமத்தை பரப்பி முஸ்லிம்கள் மீது நடுநிலையாளர்கள் மத்தியில் வெறுப்பை விதைக்கிறார்கள்.

மூன்றாவது, கிசான் புகாரி அவர்கள் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் அப்பாவி முஸ்லிம்களை வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதில் முனைப்போடு செயல்பட்டவர். அதற்காக சிறந்த வக்கீல்களை அணுகி உச்சநீதிமன்றத்தில் வழக்கை கொண்டு வந்தவர். தமிழகத்தில் எந்த ஒரு இயக்கமும் செய்ய முன் வராத இந்த செயலை தனியே நின்று சிறுபான்மை உதவி அறக்கட்டளையின் உதவியோடு செயல்பட்டார்.

உச்சநீதிமன்றம் வரை இந்த வழக்கை சென்று கொண்டதை பொறுத்துக்கொள்ள முடியாத காவல்துறை பெங்களூருவில் நடந்த பிஜேபி அலுவலகத்திற்கு வெளியில் நடந்த குண்டுவெடிப்பிற்கு இவரை குற்றவாளியாக சேர்த்து முயற்சியை முடக்கியது. அவரை கைது செய்ததற்கு ஆதாரம் இல்லாமல் இருப்பதால் வேண்டுமென்றே சில இளைஞ்சர்களை கைது செய்து வருகிறது என்பது உறுதியான செய்தி. ஆக தமிழகத்திலும், தென்னிந்தியாவிலும் முஸ்லிம் தீவிரவாத அமைப்புக்கள் இன்னும் செயல்பட்டு கொண்டிருக்கிறது என ஒரு பொய்யான பிரச்சாரம் மூலம் பிஜேபி கட்சிக்கு ஆதாயம் தேடவே இவர்கள் முயற்சிக்கிறார்கள் என்பது தெளிவாகவே தெரிகிறது.

இறுதியாக, இதுபோன்ற விஷம செய்திகளை பரப்பும் இந்த பத்திரிக்கையை மக்கள் மத்தியில் தோலுரித்து காட்ட முஸ்லிம்கள் முன் வர வேண்டும். மக்களோடு மக்களாக கலந்து எப்படிப்பட்ட விஷம கருத்துக்களை இவர்கள் பரப்புகிறார்கள் என்பதை ஆதாரத்தோடு முஸ்லிம்கள் மாற்று மத நண்பர்களுக்கு விளக்கும் பட்சத்தில் தேவையற்ற சிந்தனைகள் கில்லி எறியப்படலாம்.

0 comments:

Post a Comment