Tuesday, February 25, 2014

'ஜெய் ஹிந்த்' என்ற வீர முழக்கத்துக்கு சொந்தக்காரர் ஜெய்னுலாப்தீன் என்ற இஸ்லாமியர் தான்

'ஜெய் ஹிந்த்'க்கு சொந்தக்காரர் ஜெயினுலாப்தீன் !

இந்தியாவின் தேசபக்தர்கள் அடிக்கடி முழங்கும் 'ஜெய் ஹிந்த்' என்ற முழக்கம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுடன் தொடர்பு படுத்திப் பேசப்பட்டு வருகிறது.

'ஜெய் ஹிந்த்' என்ற அந்த வீர முழக்கத்துக்கு சொந்தக்காரர் ஜெய்னுலாப்தீன் என்ற இஸ்லாமியர் தான் என தற்போது தெரியவந்துள்ளது.

'நரேந்திர லூதர்' என்ற வரலாற்று ஆசிரியர் 'Lengendotes of Hyderabad' என்ற புத்தகத்தில் 'ஜெய் ஹிந்த்' என்ற வீர முழக்கம் இந்திய ராணுவத்தின் முழக்கமாக மாறியது எப்படி என்பது, குறித்து எழுதியுள்ளார்.

இரண்டாம் உலகப்போரின் போது, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஜெர்மன் நாட்டில் இருந்துக் கொண்டு, இந்திய சுதந்திர போருக்கான படைகளை திரட்டி பயிற்சியளித்தார்.

அப்போது, நமது வீரர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளும் போது உத்வேகமான ஒரு முழக்கம் குறித்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது, அன்றைய ஹைதராபாத் கலெக்டரின் மகன் ஜைனுலாப்தீன் ஹசன் என்பவர், தேர்வு செய்த முழக்கம் தான் ஜெய் ஹிந்த்.

நேதாஜிக்கு, இம்முழக்கம் மிகவும் பிடித்துப்போக, இதுவே நிரந்தர முழக்கமாக மாறிப்போனது.

இன்ஜீனியரிங் படிப்புக்காக, இந்தியாவிலிருந்து ஜெர்மன் சென்ற ஜெய்னுலாப்தீன், நேதாஜியின் வேண்டுகோளை ஏற்று, படிப்பை இடைநிறுத்தம் செய்து விட்டு சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டதாகவும் மேலும் அப்புத்தகம் கூறுகிறது.

http://timesofindia.indiatimes.com/india/Who-coined-the-slogan-Jai-Hind/articleshow/30939048.cms

0 comments:

Post a Comment