Thursday, February 20, 2014

சவுதி அரேபியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

المملكة العربية السعودية
அல்-மம்லக்கா அல்-அரபிய்யா அஸ்-ஸுவுதிய்யா
சவுதி அரேபிய இராச்சியம்
சவுதி அரேபியா கொடிசவுதி அரேபியா சின்னம்
குறிக்கோள்
"أشهد أن لا إله إلاَّ الله و أشهد أن محمد رسول ال"
அல்லாவை தவிர வேறு கடவுள் இல்லை;முகம்மது அவனின் தூதர்
நாட்டுப்பண்
"السلام الملكي"
"வாழ்க நம் அரசர்"
Location of சவுதி அரேபியா
தலைநகரம்
பெரிய நகரம்
ரியாத்
24°39′N, 46°46′E
ஆட்சி மொழி(கள்)அரபு மொழி
மக்கள்சவுதி, சவுதி அரேபியர்
அரசுமுழு இராச்சியம்
 - அரசர்அப்துல்லாஹ் பின் அப்துல் அசீஸ்
 - இளவரசுசல்மான் பின் அப்துல் அசீஸ்
தோற்றம்
 - இராச்சியம் கூற்றம்ஜனவரி 81926 
 - திட்டப்படம்மே 201927 
 - ஒன்றியம்செப்டம்பர் 231932 
பரப்பளவு
 - மொத்தம்21,49,690 கிமீ² (14வது)
8,29,996 சது. மை 
 - நீர் (%)குறைச்சல்
மக்கள்தொகை
 - 2007 மதிப்பீடு27,601,038[1] (46வது)
 - அடர்த்தி11/கிமீ² (205வது)
29/சதுர மைல்
மொ.தே.உ
(கொஆச (ppp))
2007 கணிப்பீடு
 - மொத்தம்$446 பில்லியன் (27வது)
 - நபர்வரி$21,200 (41வது)
ம.வ.சு (2004)Green Arrow Up Darker.svg 0.812 (உயர்) (56)
நாணயம்ரியால் (SAR)
நேர வலயம்AST (ஒ.ச.நே.+3)
 - கோடை (ப.சே.நே.)இல்லை (ஒ.ச.நே.+3)
இணைய குறி.sa, السعودية.
தொலைபேசி+966
1Population estimate includes 5,576,076 non-nationals.
சவூதி அரேபியா அல்லது சவூதி அரேபிய இராச்சியம் அரேபியக் குடாநாட்டின் மிகப் பெரிய நாடாகும். வடமேற்கு எல்லையில் யோர்தானும் வடக்கு, வடகிழக்கு எல்லைகளில் ஈராக்கும் கிழக்கு எல்லையில் குவைத்கட்டார்,பக்ரைன் ஐக்கிய அரபு அமீரகம் என்பனவும், தென்கிழக்கு எல்லையில் ஓமானும் தெற்கு எல்லையில் யேமனும்அமந்துள்ளது. மீதமுள்ள எல்லைகளாக பாரசீகக் குடா வடகிழக்கிலும் செங்கடல் மேற்கிலும் அமைந்துள்ளது.
சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் யாத்திரைத் தலங்களான மக்காவில் உள்ள மஸ்ஜித் அல்-ஹராம்,மதீனாவில் உள்ள மஸ்ஜித் அந்-நபவி ஆகிய இரு பள்ளிவாசல்கள் காரணமாக இது சிலவேளைகளில் இரண்டு பள்ளிவாசல்களின் இராச்சியம் எனவும் அழைக்கப்படுவதுண்டு. 1902 ஆம்ஆண்டு தொடக்கம் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை அடுத்து 1932 ஆம் ஆண்டு அப்துல் அஸீஸ் பின் சவூத் தனது மூதாதையரது நகரமான ரியாத்தைகைப்பற்றிய பின்னர் சவூதி அரேபிய இராச்சியத்தைப் பிரகடணப் படுத்தி அங்கீகாரத்தையும் பெற்றுக்கொண்டார்.
சவூதி அரேபியா உலகில் அதிகளவு மசகு எண்ணெயை ஏற்றுமதிச் செய்யும் நாடுகளில் இரண்டாமிடத்தில் இருக்கின்றது [2]. மசகு எண்ணெய் ஏற்றுமதி அந்நாட்டின் 90% பங்கை வகிப்பதோடு அரசின் வருவாயில் 75% இதன் மூலம் பெறப்படுகிறது. இவ்வருவாய் நாட்டின் நலன்புரி பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.[3][4]மசகுஎண்ணெயின் விலை குறையும் சந்தர்ப்பங்களில் அரசு இவற்றுக்கு நிதியை வழங்குவதற்கு சிரமப்படுகிறது[5].மனித உரிமைகள் கண்காணிப்பகம்பன்னாட்டு மன்னிப்பு அவை போன்ற பன்னாட்டு மனித உரிமை நிறுவனங்கள் சவூதி அரேபியாவின் மனித உரிமைகள் நிலைப் பற்றி தொடர்ந்து கவலை வெளியிட்டுள்ளன. எனினும் சவூதி அரசு இதனை மறுத்து வருகின்றது.2013இல் சவுதி அரேபியாவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையின்நிரந்தரமற்ற- உறுப்புறுமை கிடைத்து [6] ஒருநாள் கடந்த நிலையில், அந்நாட்டு அரசு அந்த உறுப்புரிமையை நிராகரித்து.[7]
மக்கா, மதீனா, ரியாத், தமாம், அல்-கோபர், ஜித்தா, தாயிப், யான்பு, அபஹா, அல்-கசீம், அல்-ஹஸா, அல்-ஹவுவ், அர்அர், ஜிஜான்,தபூக் ஆகியவை சவூதி அரேபியாவின் முக்கிய நகரங்களாகும்.

வரலாறு[தொகு]

சவூதி அரேபிய மன்னர்கள்[தொகு]

  • மன்னர் அப்துல் அசீசு பின் சவூத்
  • மன்னர் சவூத் -- மன்னர் அப்துல் அசீசு பின் சவூத்தின் மகன்
  • மன்னர் பைசல் -- மன்னர் அப்துல் அசீசு பின் சவூத்தின் மகன்
  • மன்னர் காலித் -- மன்னர் அப்துல் அசீசு பின் சவூத்தின் மகன்
  • மன்னர் ஃபஹத் -- மன்னர் அப்துல் அசீசு பின் சவூத்தின் மகன்
  • மன்னர் அப்துல்லா -- மன்னர் அப்துல் அசீசு பின் சவூத்தின் மகன்

சவூதி அரேபிய மூத்த இளவரசர்கள்[தொகு]

  • இளவரசர் சவூத் -- மன்னர் அப்துல் அசீசு பின் சவூத்தின் மகன்
  • இளவரசர் பைசல் -- மன்னர் அப்துல் அசீசு பின் சவூத்தின் மகன்
  • இளவரசர் காலித் -- மன்னர் அப்துல் அசீசு பின் சவூத்தின் மகன்
  • இளவரசர் ஃபஹத் -- மன்னர் அப்துல் அசீசு பின் சவூத்தின் மகன்
  • இளவரசர் அப்துல்லா -- மன்னர் அப்துல் அசீசு பின் சவூத்தின் மகன்
  • இளவரசர் சுல்த்தான் -- மன்னர் அப்துல் அசீசு பின் சவூத்தின் மகன்
  • இளவரசர் நெய்ப் -- மன்னர் அப்துல் அசீசு பின் சவூத்தின் மகன்
  • இளவரசர் சல்மான் -- மன்னர் அப்துல் அசீசு பின் சவூத்தின் மகன்

புவியியல்[தொகு]

சவூதி அரேபியா தோராயமாக அரேபியக் குடாநாட்டின் பரப்பளவில் 80% ஆகும். 2000 ஆம் ஆண்டு யேமனும் சவூதி அரேபியாவும் நீண்டகாலமாக தம்மிடையே காணப்பட்ட எல்லைத் தகராறை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் ஒப்பந்தம் ஒன்றைக் கைச்சாத்திட்டன[8]. நாட்டின் ஐக்கிய அரபு அமீரகம், ஓமான் என்பவற்றுடனான தெற்கு எல்லையில் குறிப்பிடத்தக்க அளவு சரியாக நிர்ணயிக்கப்படாமலும் குறிக்கப்படாமலும் உள்ளது. எனவே சவூதி அரேபியாவின் துல்லியமான பரப்பளவை அறிய முடியாதுள்ளது. சவூதி அரேபிய அரசின் மதிப்பீடு 2,217,949 சதுர கிலோமீட்டர் (856,356 சதுர மைல்) என்பதாகும். ஏனைய குறிப்பிடத்தக்க மதிப்பீடுகள் அதன் பரப்பளவை 1,960,582 கிமீ²[9] (756,934 mi²) முதல் 2,240,000 கிமீ² (864,869 மைல்²) வரை வேறுபடுகின்றன. சவூதி அரேபியா பொதுவாக உலகின் 14வது பெரிய நாடாக பட்டியலிடப்படுகிறது.
சவூதி அரேபியாவின் புவியியல் பலதரப்பட்ட வேறுபாடுகளைக் கொண்டது. மேற்குக்கரைப் பகுதியில் (தியாமா) தரை கடல்மட்டத்திலிருந்து மேலெழுந்து சாபல் அல் எயாசு என்ற மலைத் தொடரை ஆக்குகிறது. அதற்கு அப்பால் நசீட் மேட்டுநிலம் அமைந்துள்ளது. தென்மேற்கு அசீர் பகுதி 3000 மீட்டர் (9840 மீட்டர்) வரை உயரமான மலைகளைக் கொண்டுள்ளது. இப்பகுதி சவூதி அரேபியாவிலேயே காணப்படும் பசுமையான தட்பவெப்பநிலையைக் கொண்டுள்ளது. சவூதி அரேபியாவின் உயரமான மலை அதன் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள 3,133 மீட்டர் (10,279 அடி) ஜபல்-சவ்தா மலையாகும். கிழக்குப் பகுதி பாறைகளைக் கொண்ட தாழ்நிலப்பகுதியாகும் இது பாரசீகக்குடாவரை தொடர்கிறது. நாட்டின் தென்பகுதி ரப் அல்-காலி என்றழைக்கப்படும் பாலைவனமாகும். இப்பகுதி குடியிருப்புகள், உயிரினங்கள் அற்ற பகுதியாகும்.
சவூதி அரேபியாவின் மொத்த பரப்பளவில் பாதிக்கும் மேல் வறண்ட பாலைவனமும், அரை வறண்டப் பகுதிகளுமேயாகும். இப்பகுதிகளில் மக்கள் குடியிருப்புகள் இல்லாதிருப்பதோடு பெதோயின் ஆதிவாசிகள் மாத்திரமே சிறிய எண்ணிக்கைகளில் இங்கு வாழ்கின்றனர். இப்பகுதிகளில் பற்றைகளும் புற்களுமே சிறிய அளவுகளில் காணப்படுகின்றன. நாட்டின் பரப்பளவில் இரண்டு சதவீதத்திற்கும் குறைவான பரப்பளவே வேளாண்மைக்கு உகந்த நிலமாகக் காணப்படுகிறது. முக்கிய மக்கள் குடியிருப்புகள் கிழக்கு, மேற்குக் கரையோரங்களிலும் பாலைவனப் பசுஞ்சோலைகளை அண்டியும் அமைந்துள்ளது. சவூதி அரேபியாவின் தென்பகுதியான ரப் அல்-காலியிலும், அராபிய பாலைவனத்திலும் மசகு எண்ணெய் அகழ்விற்காக குடியமர்த்தப்பட்ட சில குடியேற்றங்கள் தவிர மக்கள்குடியேற்றங்கள் அற்றதாகவே காணப்படுகிறது. சவூதி அரேபியாவில் ஆண்டு முழுவதும் பாயும் ஆறுகளோ அல்லது நீர் நிலைகளோ இல்லை எனினும் அதன் கடற்கரை 2640 கிமீ (1640 மைல்) நீளமானது செங்கடல்பக்கமான கடற்கரையில் முருகைப்பாறைகளைக் காணலாம்.

கலாச்சாரம்[தொகு]

கலாச்சார அரேபிய உடைகள்[தொகு]

ஆண்கள்[தொகு]

  1. தோப் : நன்றாக தாராளமாக உள்ள, நீண்ட கைகளை உடைய கணுக்கால் வரையுள்ள ஆடை. கோடை காலத்தில் வெள்ளை நிற காட்டன் துணியிலும், குளிர்காலத்தில் அடர்ந்த நிறத்தில் சற்று தடித்த துணியிலும் (Wool) அணியப்படும்.
  2. தகியா : வெள்ளைத் தொப்பி.
  3. குத்ரா : காட்டன் அல்லது பாலியெஸ்டரிலான சதுர துண்டுத் துணி. தலையை மறைக்க தொப்பிக்கு மேல் அணியப்படுவது. முகத்தோடு காதுகள் இரண்டையும் சேர்த்துக் கட்டி பாலைவன மணற்காற்றிலிருந்து தற்சாட்துக் கொள்ளவும் பயன்படும்.
அகல் : இரட்டிப்பாக சுற்றப்பட்ட, தடித்த, கறுப்பு நிறத்தில் உள்ள கயிறு. குத்ரா துணி நகராமலிருக்க அதற்கு மேல் அணியப்படும்.

பெண்கள்[தொகு]

  1. தோப் : நன்றாக தாராளமாகவுள்ள, நீண்ட கைகளையுடைய கணுக்கால் வரையுள்ள ஆடை. ஆனால், கழுத்து மற்றும் மார்புப் பகுதியில் எம்பிராய்டரி மூலம் அழகுபடுத்தப்பட்டிருக்கும்.
  2. அபயா : கறுப்பு நிறத்திலான, நீண்ட, தாராளமாக, உடல் முழுவதும் மறைக்கும்படியாக தைக்கப்பட்ட மேலங்கி. சில்க் அல்லது சிந்தெடிக் துணியாலானதாயிருக்கும்.
  3. போசியா : கறுப்பு நிறத்திலான, லேசாகவுள்ள, கண்ணை மட்டும் விட்டுவிட்டு, முகத்தை மறைக்கும் துணி.

சட்ட அமைப்பு[தொகு]

சட்டத்தின் முதன்மையான ஆதாரமாக முகம்மது நபியின் போதனைகளை கொன்ட இஸ்லாமிய ஷரியா பின்பற்றபடுகிறது [10] . இஸ்லாமிய ஷரியாவை தவிர ராயல் ஆணைகள் சட்டத்தின் மற்ற முக்கிய ஆதாரமாக இருக்கிறது, ஆனால் இந்த ராயல் ஆணைகள் சட்டங்கள் என்றல்லாமல் கட்டுப்பாடுகள் என குறிப்பிடப்படுகிறது [11]. மேலும், பாரம்பரியமிக்க பழங்குடியின மக்களின் பழக்கவளக்கங்கள் குறிப்பிடத்தக்க அளவில் முக்கியமானதாக கருதப்படுகின்றன 

0 comments:

Post a Comment