*****************************************************************
முன்னாள் பிரதமரான ராஜீவை உருத்தெரியாமல் கொடூரமாக கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் என முடிவுசெய்யப்பட்டு, தூக்குத்தண்டனையும் விதிக்கப்பட்ட மூவரை உச்சநீதிமன்றம் அவர்களின் தூக்குத்தண்டனையை ரத்து செய்ததையடுத்து, அந்த மூவரையும் விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இதே வழக்கு தொடர்பாக சிறையில் இருக்கும் நளினி என்ற பெண்மனியும் விடுதலையாவார் என்றும் தெரிகிறது.
நாம் கேட்பது...ஏற்கனவே சுமார் பத்தாண்டுகாலம் தமிழக சிறையில் வாடி, பின்பு நிரபராதி என விடுவிக்கப்பட்ட மரியாதைக்குரிய மதானி அவர்களின் சுதந்திரத்தை பறிக்கும் வகையில், கர்நாடக காவல்துறை வேறு ஒரு குண்டுவெடிப்பில் தொடர்புபடுத்தி மீண்டும் ஜெயிலில் தள்ளியது. இந்த வழக்கில் மதானி முதல் குற்றவாளி கூட இல்லை. 31 வது குற்றவாளியாகவே பதிவு செய்யப்பட்டுள்ளார். விசாரணை கைதியான அவருக்கு சிறை சட்டப்படி வழங்கப்படும் பரோல், ஜாமீன் போன்றவை கூட எட்டாக்கனியாகவும் போராடிப்பெறும் நிலைதான் உள்ளது. பெங்களூரு குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மதானி பெயரை சொன்னதுதான் ஆதாரமாம். காவி பயங்கரவாதி அசிமானந்தா செய்த குண்டு வெடிப்புகள் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகாவத்திற்கு தெரியும் என்று பகிரங்க பேட்டியளித்தாரே! இந்த பேட்டியின் அடிப்படையில் மோகன் பகாவத்தை தூக்கும் திராணி காவல்துறைக்கு உண்டா?
மேலும் மதானி பிறரை கொல்லும் மனநிலை கொண்டவரா என்றால் இல்லை என்பதற்கு இந்த புகைப்பட செய்தி சான்றாகும். தனது காலை ஒடித்து தன்னை வீல் சேரில் முடக்கிய எதிரியை எவரும் தண்டிக்கவே விரும்புவர். ஆனால் மதானி, தனது காலை ஒடித்த ஒருவனை அதுவும் அவன் முஸ்லிம்களின் பரமவிரோத இயக்கமான RSS காரன் என்ற நிலையில் கூட அவனை மன்னித்த மதானி, அப்பாவிகளை கொல்ல குண்டு வைக்க தூண்டுவாரா என்று சிந்திக்க மாட்டீர்களா? தமிழக சிறையில் அநியாயமாக மதானி கழித்த 10 ஆண்டுகளை எவனாலும் திருப்பித்தர முடியவில்லை. அவ்வாறே பெங்களூரு சிறையிலிருந்தும் அவர் நிரபராதி என விடுதலையாவார் இன்ஷா அல்லாஹ்.அப்போது அவர் சிறையில் கழித்த ஆண்டுகளை எந்த யோக்கியனாவது திருப்பித்தர முடியுமா?
இறுதியாக, குற்றம் நிரூபிக்கப்பட்டு மரணத்தின் வாசல்வரை சென்றவர்களுக்கு விடுதலை அளிப்பது நியாயம் என்றால்.. குற்றம் நிரூபிக்கப்படாத, தண்டனை வழங்கப்படாத எங்கள் சகோதரனை மனிதநேய அடிப்படையில் விடுதலை செய்வதை தடுக்கும் சக்தி எது?
தண்டனை பெற்ற மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி சஞ்சய்தத் பரோல் என்றபெயரில் பல மாதங்கள் வெளியே சுற்றுகையில் எங்கள் சகோதரன் மட்டும் பலிகடாவா?
மதானியின் விடுதலைதான் இந்திய நாட்டில் மதசார்பிண்மை இருக்கிறது என்பதை காட்டும். இல்லையேல் இந்தியாவை ஆள்வது மனுநீதியே என்று உலகம் தீர்மாணிக்கும்.
0 comments:
Post a Comment