Tuesday, February 11, 2014

ஆர்.எஸ்.எஸ். தலைவர் பகவத் உத்தரவு பேரில் குண்டுவெடிப்புகளில் சுசீமானந்த் அளித்த செய்தி அனைத்தும் உண்மையே!


செய்தி சேகரித்த பத்திரிகையாளர் லீனாகீதா ரகுநாத் தகவல்.

சம்ஜோதா விரைவு தொடர்வண்டி குண்டுவெடிப்பில் கைதான அசிமானந்தா என்ற சாமியார் ஹரியானா மாநிலம் அம் பாலா சிறையில் இருந்து வருகிறார். இவரிடம் காரவன் என்ற ஆங்கில மாத இதழ் நேரடி பேட்டி ஒன்று எடுத்தது. இந்த பேட்டியின் போது பல முக்கிய திடுக்கிடும் ...தகவல் களைக் கூறினார். அதில் முக்கியமானது இன்று மத்தியில் ஆட்சி அமைக்க துடித்துக்கொண்டு இருக்கும் பாரதிய ஜனதா கட்சியை இயக்கிக்கொண்டு இருக்கும் ஆர்.எஸ்.எஸின் தலைவர் மோகன் பகவத் தான் இத் தனை தீவிரவாதத் தாக்கு தலுக்கும் காரணமானவர் அவரின் ஆணைப்படிதான் குண்டுகள் வைக்கப்பட்டது என்ற தகவல்.

இந்த செய்தி வெளிவந்த உடனே டில்லியில் அரசியல் களம் சூடுபிடிக்கத்துவங்கியது. எப்போதும் போல் பாரதிய ஜனதா இது பொய்யான ஒரு செய்தி என்றும் ஆதார மில்லாத இந்த செய்தியை பாரதிய ஜனதாவின் நரேந்திர மோடி பதவிக்கு வரவிடாமல் செய்ய காங்கிரஸ் மற்றும் சில தேச விரோத சக்திகளுக்கு வளைந்துகொடுக்கும் கட்சிகளின்\இயக்கங்களின் சதிச்செயல் என்று கூறியது. இந்த செய்தி குறித்து தனியார் தொலைக்காட்சியில் அளித்த நேர்காணலில் கார வான் இதழுக்காக இந்த செய்தியை சேகரித்த இணை ஆசிரியர் லீனா கீதா ரகுநாத் கூறியதாவது. இந்த செய்தி அனைத்தும் உண்மையே.

இது அவரிடம் இருந்து வாய் மொழியாக பதிவுசெய்யப் பட்டுள்ளது, எந்த விசா ரணைக்கும் இந்த குரல் பதிவை கொடுக்கத்தயார் என்று கூறினார். ஹரியா னாவில் உள்ள அம்பாலா சிறையில் உள்ள அசீமானந் தாவை சிறை அதிகாரிகளின் அனுமதியின் பேரில் சந்தித்து பேட்டி எடுத்தேன். மேலும் பேட்டியை அவரது அனுமதி யின் பேரில் தான் குரல் பதிவு செய்தேன் என்று கூறினார். காரவன் இதழ் அசிமானந் தாவின் குரல் பதிவை (இன்று)வெள்ளிக்கிழமை காலை வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியது.
See More

0 comments:

Post a Comment