ஒரு கோடி சொத்தை ஆக்கிரமிப்பு செய்த விஷ்வ இந்து பரிஷத் மாவட்டச் செயலாளர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர், லஷ்மி நாராயண நகரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி கஸ்தூரி. இவர் அதே பகுதியில் 11 சென்ட் வீட்டுமனை வாங்கி சுற்றிலும் இரும்பு வேலி அமைத்திருந்தார்.
இந்த நிலத்தை போலி ஆவணம் தயாரித்து, ஒசூர் வட்டாட்சியர் சாலையைச் சேர்ந்த விஷ்வ இந்து பரிஷத்தின் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் சூரி, ஒசூரைச் சேர்ந்த சுந்தர்ராஜன், பரிமளா, அண்ணாமலை, பில்லா ரெட்டி ஆகியோர் அபகரித்துள்ளனர். பின்னர், கஸ்தூரி அமைத்திருந்த முள்வேலியை அகற்றிவிட்டு, இவர்கள் புதிதாக முள்வேலியை அமைத்து தங்களுடைய சொத்து என்று அறிவிதான்ர்.
இதுகுறித்து கஸ்தூரி ஒசூர் நகரக் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, ஒசூர் டி.எஸ்.பி கோபி உத்தரவின் பேரில், ஒசூர் நகரக் காவல் ஆய்வாளர் வெங்கடேசன், “சிப்காட்” காவல் ஆய்வாளர் சங்கர் ஆகியோர் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டது.
முழுமையாக விசாரணை நடத்திய போலீசார், சூரியை கைது செய்து, ஒசூர் இரண்டாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைதனர்

0 comments:
Post a Comment