جمهورية العراق ஜும்ஹூரியா அல்-இராக் (அரபு) كۆماری عێراق கொமாரெ ஈராக் (குர்தி)
ஈராக் குடியரசு
| ||||||
---|---|---|---|---|---|---|
குறிக்கோள் الله أكبر (அரபு) "அல்லாஹு அக்பர்" (transliteration) "கடவுள் பெரியவன்" | ||||||
நாட்டுப்பண் மவுதினி (புது) அர்த் அல்-ஃபொரதைன் (முன்னாள்)1 | ||||||
| ||||||
தலைநகரம் பெரிய நகரம் | பாக்தாத்2 33°20′N, 44°26′E | |||||
ஆட்சி மொழி(கள்) | அரபு, குர்தி | |||||
மக்கள் | இராக்கி | |||||
அரசு | வளர்ச்சி பாராளுமன்றக் குடியரசு | |||||
- | குடியரசுத் தலைவர் | --- | ||||
- | பிரதமர் | --- | ||||
விடுதலை | ||||||
- | உதுமானியப் பேரரசிலிருந்து | அக்டோபர் 1 1919 | ||||
- | ஐக்கிய இராச்சியத்திலிருந்து | அக்டோபர் 3 1932 | ||||
பரப்பளவு | ||||||
- | மொத்தம் | 4,38,317 கிமீ² (58வது) 1,69,234 சது. மை | ||||
- | நீர் (%) | 1.1 | ||||
மக்கள்தொகை | ||||||
- | 2007 மதிப்பீடு | 29,267,0004 (39வது) | ||||
- | அடர்த்தி | 66/கிமீ² (125வது) 171/சதுர மைல் | ||||
மொ.தே.உ (கொஆச (ppp)) | 2006 கணிப்பீடு | |||||
- | மொத்தம் | $89.8 பில்லியன் (61வது) | ||||
- | நபர்வரி | $2,900 (130வது) | ||||
நாணயம் | ஈராக்கிய தினார் (IQD ) | |||||
நேர வலயம் | (ஒ.ச.நே.+3) | |||||
- | கோடை (ப.சே.நே.) | பயன்படுத்தவில்லை (ஒ.ச.நே.+3) | ||||
இணைய குறி | .iq | |||||
தொலைபேசி | +964 | |||||
ஈராக் குடியரசு (அரபு மொழியில், இராக்) என அதிகாரபூர்வமாக அழைக்கப்படும் ஈராக் மேற்கு ஆசியாவிலுள்ள மத்திய கிழக்கு நாடாகும். இது பெரும்பாலான வடமேற்கிலுள்ள சாகரோஸ் மலைத்தொடரையும் சிரியப்பாலைவனத்தின் கிழக்குப் பகுதியையும் அராபியப் பாலைவனத்தின் வடபகுதியையும் உள்ளடக்கியுள்ளது. ஈராக்கில் கிழக்கு நடுப்பகுதியில் உள்ள பக்தாத் இதன் தலைநகரம் ஆகும். யூபிரட்டீஸ், டைகிரிஸ் ஆகிய ஆறுகள் இடையில் ஈராக்கின் நடுப்பகுதி அமைந்துள்ளது. இதனால் மேற்கு ஆசிய நாடுகளைப் போல் பாலைவனமாக இல்லாமல் வேளாண்மை செய்யக்கூடியதாக உள்ளது.குவைத், சவுதி அரேபியா ஆகியவை தெற்கிலும், யோர்தான் மேற்கிலும், சிரியா தென்மேற்கிலும், துருக்கிஈரான் கிழக்கிலும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. பாரசீகய வளைகுடாவின் கடற்கரையோரம் உம் காசர் என்ற பகுதி உள்ளது. இங்குதான் உலகில் முதல் நாகரிகமான சுமேரிய நாகரிகம் தோன்றியது.
சரித்திர ரீதியாக ஐரோப்பாவில் கிரேக்க மொழியில் ஆற்றுக்கு இடையில் உள்ள நிலப்பகுதியெனப்பொருள்படும்படி மெசப்பதோமியா என்றே அறியப்பட்டது.
ஈராக் இல் விமான நிலையப் பயணிகள் 202 அமெரிக்க டாலர்கள் வசூலிக்கப்படுவார்கள்.வெளிநாட்டுப் பயணிகள் ஈராக்கில் இறங்கிப் 10 நாட்களுக்குள் HIV சோதனை செய்து சரியெனின் 2 அல்லது 3 அல்லது 6 மாதத்திற்கு உரிய விசா வழங்கப்படும். இதற்கு ஒளிப்படங்களுடன் 90 அமெரிக்க டாலர்கள் வசூலிக்பபடும்.
பொருளடக்கம்
[மறை]வரலாறு[தொகு]
- செம்புக்காலத்தில் டைக்ரிஸ் மற்றும் யுப்ரிடீஸ் நதி பள்ளத்தாக்கு சுமேரிய நாகரிகம் இருந்தா பகுதியே இன்றைய நவீன இராக் ஆகும்.இதுவே இராக்கின் தோற்றமாக கருதப்படுகிறது.
- கி.மு. 24 ஆம் நூற்றாண்டு முதல் கிமு 21 ம் நூற்றாண்டு வரை இப்பகுதியில் அக்காத் பேரரசு ஆட்சி செய்தது
- கி.மு. 2004 ல் எலமைட் படையெடுப்பு மூலம் புதிய அக்கேதியன் நாகரிகம் தெற்கு ஈராக்கில் உருவாகியது
- அதற்கு அடுத்த 14 நூற்றாண்டுகளாக அசிரியர்கள் மற்றும் பாபிலோனியர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது.
- கி.மு.1365-1053 வரை மத்திய அசிரிய பேரரசின் கீழ் இருந்தது.மேலும் பாபிலோனிய பேரரசின் அதிகார மையமாக இது இருந்தது.இக்காலத்திலேயே ஹமுராபி முதலிய புகழ் பெற்ற அரசர்களால் இது ஆளப்பட்டது.
- கி.மு 3-1 ஆம் நூற்றாண்டு வரை இது ரோமானிய பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது.
- 7 ஆம் நூற்றாண்டில் இது இஸ்லாமிய பேரரசின் கீழ் இருந்தது.இசலமிய பேரரசின் முக்கிய வளர்ச்சியில் இப்பகுதி பெரும் பங்கு வகித்தது.13 ஆம் நூற்றாண்டின் பாக்தாத் முற்றுகையின் போது இப்பேரரசு அழிக்கப்பட்டது.
- ஈராக் நாட்டின் நவீன எல்லைகள் 1920 இல் ஒட்டோமான் பேரரசு சேவெர்ஸ் உடன்படிக்கை மூலம் வரையறுக்கப்பட்டது.மேலும் இது மெசபடோமியா பகுதியின் ஐக்கிய ராஜ்யத்தின் அதிகார மையமாக இருந்தது.
- 1921 ஆம் ஆண்டு ஒரு முடியரசு நிறுவப்பட்டது மற்றும் 1932 ல் பிரிட்டனில் இருந்து சுதந்திரம் பெற்றது.
- 1958 ஆம் ஆண்டு மன்னர் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்ட பின் ஈராக் குடியரசு உருவாக்கப்பட்டது.
- ஈராக்கில் 1968 முதல் 2003 வரை பாத் கட்சி மூலம் ஆட்சிசெய்யப்பட்டது. பன்னாட்டு படைகள் தலைமையிலான படையெடுப்பிற்கு பிறகு பாத் கட்சி அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட்டு பாராளுமன்ற தேர்தல்கள் நடத்தப்பட்டன.
- 2011 ல் ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறின.
புவியியல்[தொகு]
ஈராக் 29° லிருந்து 38° வடக்கு அட்சரேகை வரையிலும் 39° லிருந்து 49° கிழக்கு தீர்க்க ரேகைக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது.இதன் மொத்த பரப்பளவு 437,072 சதுர கி.மீ (168,754 சதுர மைல்) ஆகும்.மேலும் இது உலகின் 58 வது பெரிய நாடாக உள்ளது. ஈராக்கில் அதிக அளவு பாலைவன பகுதிகளை கொண்டுள்ளது,எனினும் யுப்ரிடீஸ் மற்றும் டைக்ரிஸ் ஆறுகள் ஆண்டுதோறும் 60.000.000 கன மீட்டர் வளமான வண்டல் மண்ணை சமவெளி பகுதியில் கொண்டுவந்து சேர்க்கின்றது.நாட்டின் வடக்கு பகுதி பெரும்பாலும் மலைகள் நிறைந்து காணபடுகின்றது இந்நாட்டின் உயர்ந்த பகுதி பெயரிடப்படாத 3,611 மீ (11,847 அடி) உயர மலையாகும் எனினும் இது உள்ளூர் மக்களால் சீக்கா தர் (கருப்பு கூடாரம்) என்று அழைக்கப்படுகிறது.மேலும் ஈராக் பாரசீக வளைகுடா பகுதியில் 58 கி.மீ. (36 மைல்) நீள கடலோர பகுதியையும் கொண்டுள்ளது.
காலநிலை[தொகு]
ஈராக்கில் மிக மிதவெப்ப மண்டல சூடான வறண்ட காலநிலையை கொண்டிருக்கிறது.இங்கு சராசரி கோடை வெப்பம் 40 °C (104 °F) க்கு அதிகமாக உள்ளது.எனினும் நாட்டின் பெரும்பாலான பகுதியில் 48 °C (118.4 °F) க்கு மேல் நிலவுகிறது.குளிர்காலத்தில் பகல்நேர வெப்பநிலை 21 °C (69.8 °F) ஆகவும் இரவு நேர வெப்பநிலை 2-5 டிகிரி செல்சியஸ் வரை குறையலாம்.மேலும் குறைவாகவே மழை பெய்கிறது.மழையளவானது ஆண்டுக்கு 250 மி.மீ க்கு குறைவான மழையே பெய்கிறது. மலைப்பாங்கான வடக்கு பகுதிகளில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கும் ஏற்படுகிறது. Wikinews-logo.svg விக்கிசெய்தியில் விக்கிகசிவுகளில் ஈராக்கில் அமெரிக்கப் படையின் துப்பாக்கிச்சூடு காணொளி
தொடர்பான செய்திகள் உள்ளது.
0 comments:
Post a Comment