புனித மக்கா பயணம் என்பது பல நூற்றாண்டுகளாக ஆப்ரிக்க மக்களின் மனதில் ஒரு வசீகரத்தையும் பயபக்தியையும் ஏற்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாக இருந்து வந்தது.ஆப்ரிக்க இஸ்லாமிய வரலாற்றில் புகழ்பெற்ற யாத்திரைகலான மாலியின் சுல்தான் மன்சா மூஸாவின் மக்கவுக்கான யாத்திரை ,சொங்ஹாய்(Songhai) பிராந்தியத்தின் ஆட்சியாளர் அஸ்கியா முஹம்மதின் மக்கவுக்கான யாத்திரை மற்றும் டர்பார்(Darfur) பிராந்தியத்தின் சுல்தான் அலி தீனார் அவர்களின் மக்கவுக்கான யாத்திரை என்பன ஆப்ரிக்க மக்களின் புனித யாத்திரைக்கு இருந்த ஈடுபாட்டை மிக அழகாக பிரதிபலித்தன. டர்பார்(Darfur) பிராந்தியத்தின் சுல்தான் அலி தீனார் அவர்களின் மக்கவுக்கான யாத்திரை மிகவும் பிரசித்தி பெற்றது.அதற்கு தக்க காரணமும் இருந்தது.டர்பார் சுல்தானின் பயணக் குழுவிலே மக்காவை போர்த்தும் கிஸ்வா(Kiswa) கொண்டு செல்லப்படும். டர்பார்(Darfur) பிராந்தியத்தின் கடைசி சுல்தான் அலி தீனார்அவர்கள் இந்த பயணத்துக்கு அதி முக்கியத்துவம் கொடுத்துவந்தார்.
![]() |
| சுல்தான் அலி தீனார் அவர்களின் யாத்திரை ஆரம்பம். |
![]() |
| பிரித்தானியர்களால் கொல்லப்பட்ட சுல்தான் அலி தீனர் அவர்களின் ஜனாஸா |
மேற்கு ஆப்ரிக்க முஸ்லிம்களின் மக்காவுக்கான புனித யாத்திரை பெரும்பாலும் சஹாரா பாலைவனத்திநூடாக கெய்ரோ வந்து அதனூடாக மக்கா செல்வதேயாகும்.ஆனால் மக்காவுக்கு பிரயாணம் செய்ய இன்னுமொரு மிகவும் பிரசித்தி பெற்ற பாதை ஒன்றும் இருந்தது,அது சூடானை ஒட்டிய செளிப்பனான புல்நிலங்கள் கொண்ட ஒரு பாதையாகும்.அதிகம் அறியப்படாத இந்த பாதையினூடாக மேற்கு ஆப்ரிக்க மக்கள் மக்காவுக்கு கால்நடையாகவே பயணம் செய்துவந்தனர்.
புனித மக்காவுக்கு நடந்து செல்லல்.
இஸ்லாத்தின் வருகையின் பிறகு கிட்டத்தட்ட 20 ஆம் நூற்றாண்டு வரை ஹஜ்ஜில் ஆர்வமுள்ள ஆப்ரிக்க முஸ்லிம்கள் மக்காவுக்கு நடந்தே செல்வார்கள்.கலாநிதி அல்-அமீன் அபூ-மங்கா அவர்களின் கருத்துக்கு அமைய,ஹஜ் கடமையை மிகவும் சிரமப்பட்டு நிறைவேற்றினாலே அல்லாஹ்வின் வெகுமதிகள் அதிகமாக கிடைக்கும் என்ற எண்ணம் கருத்து மேற்கு ஆப்ரிக்க மக்களிடம் பரவலாக காணப்பட்டது என்றார்.மேலும் ஆப்ரிக்க மக்களிடையே "கிழக்கு" பற்றி அதாவது மக்கா,மதீனா மற்றும் ஜெரூசலம் பற்றி ஒரு ஆன்மிகம் கலந்த அன்பான பார்வை காணப்பட்டது என்கிறார்.
இந்த புனித யாத்திரை பாதை மேற்கு ஆப்ரிக்க பிரதேசங்களிலிருந்து வரும் முஸ்லிம்களை சவான்னாஹ் புல்வேளிகலூடாக டர்பார் பிராந்தியத்தில் கொண்டு சேர்க்கிறது.அதன் பின்பு நைல் நதியோரமாக பிரயாணம் செய்து பின்பு நதியைக் கடந்து இன்றைய சூடானை அடையும்.இதன் பிறகு சூடானின் துறைமுக நகரங்களான சவாகின் அல்லது மஸ்ஸாவா நகரங்களினூடாக கப்பலில் ஏறி ஜித்தாஹ் துறைமுகத்தை அடைவார்கள்.இறுதியில் அவர்கள் புனித மக்காவை அடைவார்கள்.
![]() |
| அரசர் மான்ஸா மூசாவின் ஹஜ் பாதை (1324) |
பத்து வருட புனிதப் பயணம்
புனித மக்கா நகருக்கான ஆப்ரிக்க மக்களின் இந்த பயணப் பாதை உச்ச அளவில் பாதுகாப்பற்ற ஒன்றாகும் என்கிறார் டாக்டர் உமர் அஹ்மத் சயித் அவர்கள்.மக்கா நகருக்கான இந்த பாதை பல சவால்கள் நிறைந்த பாதையாகும்.ஏனெனில் மக்காவுக்கான இந்தப்பாதையில் கொள்ளைக்காரர்கள்,மக்களை கடத்திச் சென்று அடிமைத் தொழில் செய்வோர்,காட்டு கொடிய மிருகங்கள்,நோய்கள் என்பன பரவலாக காணப்படும் சவாலாகும்.இவற்றை விட மிக முக்கியமான சவால் நீர் பற்றாக்குறைப் பிரச்சனை ஆகும்.சில நேரங்களில் சிலர் மக்காவுக்கான தமது கனவு யாத்திரையை தொடந்து மேற்கொள்ள முடியாமல் இடைநடுவே மனம் உடைந்தவர்களாக திரும்பி விடுவார்கள்.
இதுபோன்ற பயணங்கள் அதிகபட்சமாக சில மாதங்களே எடுக்கும்.ஆனால் ஆப்ரிக்க மக்களின் இந்த ஹஜ் பயணமோ மக்காவை சென்றடைய மட்டும் இரு வருடங்கள் பிடிக்கும்.சில பயணக் குழுக்கள் சில ஊர்களில் தற்காலிகமாக தங்கி தமது பயணத்துக்கு தேவையான பணத்தையும் இதர தேவைகளையும் சேர்த்துக் கொள்வார்கள்.
ஆப்ரிக்க மக்களின் இந்த ஹஜ் பயணம் சராசரியாக பத்து வருட காலத்தைக் கொண்டது.அக்காலங்களில் ஹஜ்ஜுக்கு செல்பவர்கள்,தாம் திரும்பி வராதபட்ச்சத்தில் தம் மனைவிக்கு தலாக் பெற்றுக்கொள்ள அனுமதியும் வழங்கிவிட்டே பயணத்தை துவங்குவார்கள்.மனைவி கணவன் திரும்பி வரும்வரை காத்திருக்க தேவையில்லை.
இறுதியில் புனித மக்காவுக்கு பயணம் மேற்கொண்டவர் தமது சொந்த ஊருக்கு திரும்பி வந்தால் அவரை முழு ஊரும் சேர்ந்து விழா எடுத்து வரவேற்கும்.புனித மக்காவுக்குச் சென்று ஹஜ் கடமையை நிறைவேற்றி வந்ததால் முழு ஊரும் அவரை அல்-ஹாஜ் என்று சிறப்புப் பெயர் வைத்தே அழைப்பார்கள்.
இன்று நவீன ஆப்ரிக்காவில் இந்த சவால் நிறைந்த பயணமுறை இல்லை.1950 இன் பிற்பாடு ஏற்பட்ட காலனித்துவ எல்லைகள்,அரசியல் பதற்றம் மற்றும் விமானகள் என்பன இந்த பாதையை இல்லாமலே செய்தது.
ஆனால் இந்த பாதையின் காலாச்சார தாக்கம் இன்றுவரை அழியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
![]() | ||
| அரசர் மான்ஸா மூஸா. |
![]() |
| சுல்தான் அஸ்கியா முஹம்மதின் அடக்கஸ்தலம். |
![]() |
| சுல்தான் அஸ்கியா முஹம்மத். |
| சுல்தான் அஸ்கியா முஹம்மதின் அரசு. |
இந்த கட்டுரை ONISLAM.COM தளத்தில் வெளியான ஆங்கில கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பாகும்.நமது முஸ்லிம் உம்மத்தின் வரலாற்றை எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மொழிமாற்றம் செய்யப்பட்டது.
Very Special Thanks TO
WWW.ONISLAM.COM
Images From WWW.WIKIPEDIA.COM
Writer - Ismail KushKush [FREELANCE WRITER]
தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டவும்
உங்கள் நண்பன்
எம்.ஹிமாஸ் நிலார்












0 comments:
Post a Comment