மதுரை, பிப்.20:
மதுரை ஐகோர்ட்டு கிளை வக்கீல் சங்க செயற்குழு கூட்டம் வக்கீல் சங்க செயலாளர் ஏ.கே.மாணிக்கம் தலைமையில் நேற்று நடந்தது. துணை தலைவர் லாரன்ஸ் முன்னிலை வகித்தார். பொருளாளர் அமர்நாத், இணை செயலாளர் முகமது அப்பாஸ் உள்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
மதுரை வக்கீல் சங்க உறுப்பினர்களான எம்.காஜா நஜ்முதீன், எஸ்.ஏ.எஸ்.அலாவுதீன் ஆகியோர் மீது தாக்குதல் நடத்திய நாமநாதபுரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தமிழக அரசு உடனடியாக பணி இடை நீக்கம் செய்ய வேண்டும். தாக்குதலுக்கு உள்ளான வக்கீலுக்கு தமிழக அரசு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். போலீஸ் அதிகாரி வெள்ளத்துரை பொதுமக்கள், வக்கீல்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறார். எனவே, அவரை மனநல மருத்துவ சிகிச்சைக்கு தமிழக அரசு உட்படுத்த வேண்டும். வெள்ளத்துரைக்குமனநல சிகிச்சை அளிக்கக்கோரி 21&ந் தேதி(அதாவது நாளை) ஐகோர்ட்டு கிளை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது. பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 8 பேரை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல் அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
0 comments:
Post a Comment