Thursday, January 09, 2014

ரூ.1,80,000,000, 000,00 கோடி ஊழல்

ரூ.1,80,000,000, 000,00 கோடி ஊழல்

ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கோடி பிஜேபி ஊழல்

மத்திய அரசு தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்து இருப்பதாகவும் இதனால் அரசுக்கு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கோடி இழப்பு எற்பட்டு இருப்பதாகவும் மத்திய கணக்கு தணிக்கை துறை குற்றம் சாட்டியது.

இதுபற்றி சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. கோர்ட்டின் கண்காணிப்பின் கீழ் விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக ஏற்கனவே தனியார் நிறுவனங்கள் மீது சி.பி.ஐ. மொத்தம் 14 வழக்குகள் பதிவு செய்துள்ளது. இவை அனைத்தும் 2006–ம் ஆண்டு முதல் 2009–ம் ஆண்டு வரை நடந்தவை ஆகும்.

இதற்கிடையே மத்தியில் பாரதிய ஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடந்த போதும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்து இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து 1993–ம் ஆண்டு முதல் நடைபெற்ற நிலக்கரி ஒதுக்கீடு பற்றி விசாதரணை நடத்தப்பட்டது.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் திலிப்ராய், கரியமுண்டா ஆகியோர் சுரங்கத்துறை மந்திரிகளாக இருந்தபோது 2 தனியார் நிறுவனங்கள் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு பெற்று இருந்தன. இதில் நடந்த முறைகேடு தொடர்பாக 2 நிறுவனங்கள் மீது சி.பி.ஐ. புதிதாக வழக்கு பதிவு செய்துள்ளது.

பி.எல்.ஏ. இன்டஸ்டிரீஸ் மற்றும் கேஸ்ட்ரான் டெக்னாலஜிஸ் ஆகிய 2 நிறுவனங்கள் ஆகும். அதன் பெயர் குறிப்பிடப்படாத அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக மேலும் 2 அல்லது 3 வழக்குகள் தொடரப்படும் என்று சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 

0 comments:

Post a Comment