Friday, January 31, 2014

ஒரு முஸ்லிம் சிறுபான்மையாக வாழும் நாட்டில் எதிர்நோக்கும் சவால்கள்....?

 
முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் பெரும்பாலான நாடுகள் தமது பொதுவாழ்வில் மதத்தின் தலையீடு இருக்கக் கூடாது எனும் கொள்கையுடன் வாழ்வினது விவகாரங்களை மனிதச் சிந்தனை அடிப்படையில் ஒழுங்குபடுத்தும் தாராண்மைவாதச் சிந்தனையுள்ள முதலாளித்துவ சிந்தனையில் கட்டியெழுப்பப்பட்ட நாடுகளாகும்.

இங்கு மனிதன் சட்டத்தை ஆக்கும் சட்ட சபைகளை கொண்டு வாழ்வினது பிரச்சினைகளுக்கான தீர்வை எட்ட முனைகிறான்.

இந்த முதலாளித்துவ குப்ரிய சிந்தனைகளை ஏற்க மறுக்கும் முஸ்லிம்கள் வாழ்வினது விவகாரங்களை
குர்ஆன் சுன்னா அடிப்படையில் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என ஆசிக்கிறார்கள்.

இன்றைய முதலாளித்துவ உல ஒழுங்கிற்கு மாற்றீடாக இஸ்லாம் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் ஆளுகைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என விரும்புகிறார்கள்!

இதனால் இவர்களை “அடிப்படைவாதிகள்” என்றும் “தீவிரவாதிகள்” என்றும் முத்திரை குத்தி இஸ்லாத்தின் எழுச்சியை தடுத்துவிடலாம் என நாடுகிறார்கள்.

அத்துடன் ஒரு முஸ்லிம் தமது “தேசியத்துக்குள்” வரையறுக்கப்பட்டவனாக “உம்மத்” எனும் சிந்தனையை களைந்தவனாக மாறவேண்டும் என விரும்புகிறார்கள்.

இது குறித்து அல்லாஹ் தனது திருமறையில் இவ்வாறு கூறுகிறான்.

“அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் காபிர்கள் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான்.” (61:8)

முஸ்லிம் சமூகம் இவ்விடயத்தில் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.

இது குறித்து அல்லாஹ் எமக்கு இவ்வாறு எச்சரிக்கிறான்!

“ (முஃமின்களே!) அவர்கள் நிராகரிப்பதைப் போல் நீங்களும் நிராகரிப்போராகி நீங்களும் (இவ்வகையில்) அவர்களுக்கு சமமாகி விடுவதையே அவர்கள் விரும்புகிறார்கள்”[ 4:89]

“நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் உங்(கள் மார்க்கத்தைச் சார்ந்தோர்)களைத் தவிர (வேறெவரையும்) உங்களின் அந்தரங்கக் கூட்டாளிகளாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்;. ஏனெனில் (பிறர்) உங்களுக்குத் தீமை செய்வதில் சிறிதும் குறைவு செய்ய மாட்டார்கள்;. நீங்கள் வருந்துவதை அவர்கள் விரும்புவார்கள்;. அவர்கள் உங்கள் மேல் கொண்டுள்ள கடுமையான வெறுப்பு அவர்கள் வாய்களிலிருந்தே வெளியாகிவிட்டது. அவர்கள் நெஞ்சங்கள் மறைத்து வைத்திருப்பதோ இன்னும் அதிகமாகும்;. நிச்சயமாக நாம் (இது பற்றிய) ஆயத்களைத் தெளிவு படுத்திவிட்டோம்;. நீங்கள் உணர்வுடையோரானால் (இதை அறிந்துகொள்வீர்கள்).”(3:118)

எனவே, இஸ்லாத்தின் பொது எதிரியையும் அவர்களது சதித்திட்டங்களையும், சூழ்ச்சிகளையும் நாம் தெளிவாக விளங்கி அல்லாஹ்வுடைய தீனுல் இஸ்லாம் உலகில் மேலோங்க ஆக்கபல தஃவா முன்னெடுப்புக்களை செய்யவேண்டும்.

0 comments:

Post a Comment