
நெல்லை சேர்ந்த வியாபாரி ஒருவருக்கு நெல்லை டவுணில் வியாபாரம் செய்துவரும் மார்வாடி ஒருவர் லட்சகணக்கில் பணம் தராமல் ரொம்ப காலமாக மோசடி செய்து வந்தார் .பணத்தை கேட்க சென்ற எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகளின் மீது காவல்துறை பொய்யாக வழக்கு பதிந்தது.
மேலும் காவல்துறை வட நாட்டு வியாபாரிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது. இதனை கண்டித்து எஸ்.டி.பி.ஐ சார்பாக மேலப்பாளையத்தில் ஜனநாயக ரீதியில் ஆர்ப்பட்டம் நடைபெற்றது .ஆனால் அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள எஸ்.டி.பி.ஐ சகோதரர்களை விடுதலை செய்ய கோரி ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்தியதால் எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள் உள்ப்பட 130 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது காவல்துறை.நமக்கு ஒரு சந்தேகம் எழுகிறது நாம் வாழ்வது ஜனநாயக நாட்டில்தானா ?
0 comments:
Post a Comment