அகமதாபாத், ஜன. 6-
குஜராத்தில் பெண் ஒருவரை போலீசார் உளவு பார்த்ததாகவும், இவரது போன் ஒட்டு கேட்கபட்டதாகவும் ஒரு புகார் எழுந்தது. இதன் பின்னணியில் முதல்வர் நரேந்திர மோடியும், அவரது உதவியாளர் அமித் ஷாவும், இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த சர்ச்சை தொடர்பாக விசாரிக்க மத்திய அரசு, ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளது.
இந்நிலையில் கோப்ரா போஸ்ட் மற்றும் குலைல் இணையதளத்தில் இது தொடர்பாக ஆதாரங்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து, மோடி மற்றும் அமித் ஷா விசாரிக்கப்படவேண்டும் என்றும் கைது செய்ய வேண்டும் என்றும் கோரி, பணி நீக்கம் செய்யப்பட்ட அதிகாரி பிரதீப் சர்மா இன்று காந்தி நகர் காவல் நிலையத்தில் மனு அளித்தார். ஆனால் போலீசார் இந்த புகாரை எப்.ஐ.ஆராக பதிவு செய்ய மறுத்து விட்டனர்.
இது குறித்து பிரதீப் சர்மா நிருபர்களிடம் பேசுகையில், “பெண்ணை உளவு பார்த்த விவகாரத்தில் குற்றவாளியாக மோடி, முன்னாள் அமைச்சர் அமித் ஷா, போலீஸ் உயர் அதிகாரி ஆகியோர் இதன் பின்னணியில் உள்ளனர். இது தொடர்பாக என்னிடம் ஒலி நாடா ஆதாரம் உள்ளது. ஆனால் எனது புகாரை பதிவு செய்ய போலீசார் மறுத்து விட்டனர். நான் கோர்ட்டை அணுகவுள்ளேன். இது போன்று மாநில சட்டப்பிரிவுகளில் பல்வேறு முறைகேடுகள் இருக்கின்றன” என்றார்.

0 comments:
Post a Comment