கொலை வழக்கில் சவூதி இளவரசருக்கு மரண தண்டனை விதிக்கப்பட இருக்கிறது.
சவூதி இளவரசர் ஒருவர் தன்னுடன் தங்கியிருந்த சக சவூதி அரேபியர் ஒருவரை கொலை செய்துவிட்டார்.
சட்டப்படி, கொலையாளி சார்பில், கொலை செய்யப்பட்டவர் குடும்பத்துக்கு ஒரு பெருந்தொகையை கொடுத்து விட்டால் அவர்கள் மன்னித்து விடுவதுடன் கொலையாளி தண்டனையில் இருந்து தப்பி விட முடியும்.
ஆனால் இந்த வழக்கில் இளவரசர் தரப்பில் தரக்கூடிய தொகையை பெற்றுக்கொண்டு, மன்னிப்பு வழங்க கொலை செய்யப்பட்டவர் குடும்பம் முன்வரவில்லை.
இதனால் சவூதி இளவரசருக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் நிலை உருவாகி உள்ளது. இதற்கான அனுமதியை சவூதி இளவரசர் சல்மான் வழங்கி விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் சவூதி இளவரசருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சவூதியில் பொதுவாக மன்னர் குடும்பத்தில் யாருக்கும் மரண தண்டனை விதிக்கப்படுவதில்லை. தற்போதுதான் மரண தண்டனை விதிக்கப்பட இருக்கிறது.
0 comments:
Post a Comment