Sunday, January 05, 2014


பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட உடனேயே மேலப்பாளையத்தில் வன்முறை தலைதூக்குமோ என்று நினைத்த அரசாங்கள் தொடர்ந்து நான்கு நாள்களுக்கு மின்சாரம், குடிநீர், பால் போக்குவரத்தை தடை செய்து, மேலப்பாளையம் பகுதியை பிற பகுதிகளிடமிருந்து துண்டித்தது. மக்களிடம் அமைதி ஏற்படுத்த என்ற பெயரில் மாவட்ட ஆட்சியாளரிடம் அனுமதி பெறாமல் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் 18 பேர் மீது குண்டு பாய்ந்தது. இதில் இருவர் இறந்துவிட, 16 பேர் சிகிச்சைக்குப் பின்பு உயிர் பிழைத்தனர். முஸ்லிம் சமூகத்தின் மீதான இத்தகைய தாக்குதல் அவர்களுக்குத் தேவையான ஒன்றுதான் என்று கருதும் போக்கே இந்துக்களிடம் காணப்படுகிறது. இதனை நியாயப்படுத்த அவர்களிடம் ஆதாரங்கள் இல்லை. பெரும்பாலும் உண்மைக்குப் புறம்பான, ஆதாரமான தகவல்கள் ஏதுமின்றி, இந்து மத அறிவு ஜீவிகள் என்று தங்களைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் நச்சு மூளைக்காரர்கள் பரப்பிவரும் திட்டமிட்ட பகை உணர்வுக்கு இந்துக்கள் பலியாகி விடுகிறார்கள். இந்திய முஸ்லிம்களின் நிலை குறித்த நீதிபதி ராஜிந்தர் சச்சாரின் அறிக்கையில் வெளிப்படும் உண்மைக்கு உரைகல்லாக உள்ளது மேலப்பாளையம் முஸ்லிம்களின் வாழ்க்கை.

0 comments:

Post a Comment