A.J.M மக்தூம்
இதியாவில் பல நூற்றாண்டுகள் தொடராக ஏற்பட்டு வரும் இந்து,முஸ்லிம் கலவரங்கள், மோதல்கள், இனவெறித் தாக்குதல்கள் என்பவற்றை முடிவுக்கு கொண்டு வர புதிய சட்டம் நடை முறைப் படுத்தப் பட வேண்டும் என இந்திய மக்கள் வலியுறுத்துவதாக ஆங்கில இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் பல நூற்றாண்டு காலமாக பெரும்பான்மை இந்துக்கள் மற்றும் சிறுபான்மை முஸ்லிம்கள் மத்தியில் பல்வேறு மோதல் சம்பவங்கள், பதற்ற நிலைகள் தொடராக ஏற்பட்டு கொண்டே வருகிறது. இதனால் பாரிய உயிர் சேதங்கள் உட்பட பல்வேறு இழப்புக்கள் ஏற்படுவதால் இந்தியா பெரும் சிக்கல்களை எதிர் நோக்கி வருகிறது.
1947 இல் இந்திய பாக்கிஸ்தான் பிரிவினையின் போது வெடித்த கலவரத்தில் சுமார் அரை மில்லியனுக்கு அதிகமானோர் கொள்ளப் பட்டுள்ளனர். அதன் பின் மத வன்முறைகள் கணிசமாக குறைந்து இருந்த போதிலும், சென்ற வருடத்தில் இருந்து கடந்த பத்து மாதங்களுக்கிடையில் ஏற்பட்ட சம்பவங்களில் ஆயிரக்கணக்கனோர் பாத்திக்கப் பட்டுள்ளனர். 143 க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.
அதே நேரத்தில் எதிர் வரும் வருடம் நடாத்த திட்டமிடப் பட்டுள்ள இந்திய பொதுத் தேர்தலில் சர்ச்சைக்குரிய தேசியவாதி நரேந்திர மோடி போட்டியிடுவதால், இனவாத சம்பவங்கள் மேலும் அதிகரிக்கும் நிலை காணப் படுவதாக பெரும்பாலான இந்தியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையிலேயே குறித்த புதிய சட்டம் நடை முறை படுத்தப் பட வேண்டும் என இந்திய மக்கள் வலியுறுத்துகின்றனர். அதில் சம்பந்தப் பட்ட அதிகாரிகள்,
போலீசார் வன்முறைகளை தடுக்க தவறும் பட்சத்தில் கைது செய்யப் படுவதோடு அவர்கள் மீது அபராதமும் விதிக்க வேண்டும் எனவும், விஷேட நீதி மன்றங்களில் குறித்த இனவாத சம்பவங்களை விரைவாக விசாரித்து, பாதிக்கப் பட்டோருக்கு இழப்பீடு வழங்கப் பட வேண்டும் எனவும் கேட்கப் பட்டுள்ளது.
0 comments:
Post a Comment