Friday, January 31, 2014

இஸ்லாத்திற்கு எதிராக சவூதி மன்னர் பல இலட்சங்களை செலவிடுகின்றார்




தீவிரவாத தடுப்பு மையத்திற்கு நிதி உதவியாக ஐக்கிய நாடுகள் சபைக்கு சவூதி மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஜிஸ் 100 மில்லியன் டாலரை அளிக்க இருப்பதாக செய்தி நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன. நோன்பு பெருநாள் அன்று ஆற்றிய உரையில் சவூதி மன்னர்“ஐக்கிய நாடுகள் சபைக்கு கீழ் இயங்கும் இந்த மையத்தின் செயல்பாடுகளுக்கு உதவும் வகையாக 100 மில்லியன் டாலரை வழங்க இருக்கின்றேன்” என்று கூறியதாக சவூதி செய்தி நிறுவனம் அறிவித்தது. மேலும்பயங்கரவாத சக்திகளை’முறியடிப்பதற்காக இந்த மையத்திற்கு சர்வதேச சமுதாயம் உதவ வேண்டும்என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கு முன்னரே 2011 ஆம் ஆண்டு, இந்த மையத்தை உருவாக்குவதற்கு உதவுவதாக ஐக்கிய நாடுகள் சபையிடம் சவூதி அரசாங்கம் ஒப்பந்தம் செய்துகொன்டு அம்மையத்தை உருவாக்க 10 மில்லியன் டாலரையும் அளித்தது. இந்த மையத்தை உருவாக்க வேண்டும் என்று முதன்முதலாக யோசனை அளித்தவரும் சவூதி மன்னர் தான் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அவர் இந்த யோசனையை முதன்முதலாக 2005 – ல் கூறினார். பின்பு தீவிரவாத தடுப்பை தன்னுடைய அதிமுக்கிய பணியாகவும் ஆக்கிக்கொண்டார்.
இஸ்லாத்தை எதிர்த்து போரிடுவதற்கும், முஸ்லிம்களின் ஒற்றுமையை சிதைப்பதற்கும், இஸ்லாமிய நிலங்களின் மீதான இராணுவ தாக்குதல்களை நியாயப்படுத்துவதற்கும், உள்நாட்டு பிரிவினைகளின் வாயிலாக முஸ்லிம்களுக்குள் போர் ஏற்படுத்தவும்,அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளால் சர்வதேச மையங்கள் ஒரு கருவியாக  பயன்படுத்தப்படுகின்றன. இதே அடிப்படையை தான் சவூதி அரசாங்கமும் பின்பற்றுகிறது.
இவ்வாறு செய்வதன் மூலம் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக மேற்கத்திய நாடுகள் பரப்பிக்கொன்டிருக்கும் கருத்துக்களை, சொன்னதைச் சொல்லும் கிளிப்ப்பிள்ளையைப் போல் சவூதி மன்னர் பரப்பிக் கொண்டிருக்கிறார். இதனால் இஸ்லாத்திற்கு எதிராக திட்டம் தீட்டி மக்கள் மத்தியில் இஸ்லாத்தின் கண்ணியத்தை மாசுபடுத்தும் இஸ்லாத்தின் எதிரிகளின் பட்டியலில் இவரும் சேர்ந்துவிடுகிறார்.
இந்த கருத்துக்களை முழுமூச்சாக பரப்புவது மட்டுமல்லாமல் அதற்கான பணத்தையும் பெருமளவில் செலவிட்டுக்கொண்டிருக்கிறார். அப்பணத்தை முஸ்லிம் உம்மத்தில்  பசியோடு வாடிக்கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கு உதவி இருந்தால் ஒரு முஸ்லிம்கூட பசி பட்டினியால் உயிர் இழக்கமட்டார்.
தன்னுடைய உரையில் சவூதி மன்னர், இஸ்லாத்தின் எதிரிகளைத்தவிர  வேறு எவரும் பயன்படுத்தாத சொற்களானதீவிரவாத சக்திகள்’ என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார். இவர் கூறும்“சக்திகள்” என்ற வார்த்தை யாரைக் குறிப்பிடுகின்றது என்று இவரால் வெளிப்படையாக கூற இயலுமா?  இஸ்லாமிய உம்மத்தின் எதிரிகளான குஃப்ஃபார்களுக்கு எதிராக அல்லாஹ்வின் பாதையில் போர் செய்ய சில இயக்கங்கள் அழைப்பு விடுக்கின்றன. மேலும் இஸ்லாமிய கிலாஃபா ஆட்சி முறையை நிலைநாட்ட  இஸ்லாமிய அமைப்பு பாடுபடுகின்றது.  இந்த இயக்கங்களைத்தான் இவர் “தீவிரவாத சக்திகள்” என்று குறிப்பிடுகின்றார். இதுபோன்ற வார்த்தைகள், முதன்முதலாக மேற்கத்தியர்களால் இஸ்லாமிய இயக்கங்களைக் குறிப்பிட பயன்படுத்தப்பட்டவையாகும்.
இஸ்லாமிய மறுமலர்ச்சிக்காகவும் உம்மத்தின் பாத்துகாப்பிற்காகவும் பாடுபட்டுவரும் இஸ்லாமிய அமைப்புகளை ஒடுக்க அல்லும் பகலும் பாடுபட்டுக்கொண்டிருக்கும்  அமெரிக்க ஏஜெண்டான இந்த சவூதி குடும்ப ஆட்சியாளர்களுக்கு தீர்ப்பு வழங்கவேண்டிய ஹிஜாஸின் உலமாக்கள் எங்கே! நஜ்து உலமாக்கள் எங்கே! சின்னஞ்சிறிய விசயங்களுக்கெல்லாம் தீர்ப்பு வழங்கும் இவர்கள், இந்த சவூதி ஆட்சியாளர்களுக்கு தீர்ப்பு வழங்குவதில்லையே   ஏன்?   ஊடகங்கள் அனைத்தும் அவர்களை எப்போதும் சூழ்ந்திருக்கும் நிலையில் கூட இது தொடர்பாக ஒரு வார்த்தைக் கூட அவர்களிடமிருந்து ஏன் பெற முடியவில்லை?
அமெரிக்காவையும் மேற்கத்திய குஃப்ஃபார்களையும் பின்பற்றக் கூடிய இது போன்ற ஆட்சியாளர்களையும் அவர்களுடைய தீய எண்ணங்களையும் வெளிப்படுத்த வேண்டியது ஒட்டுமொத்த உம்மத்தின்மீது கடமையாகும்.  இத்தகைய  ஆட்சியாளர்களுக்கு எதிரான   சிந்தனை மாற்றத்தை  மக்கள் மத்தியில் ஏற்படுத்தாதவரை  மறுமலர்ச்சி சாத்தியமாகாது.
புனிதமிக்க ஹரமைன் பகுதிகளிலிருந்தும் மற்ற இஸ்லாமிய நிலங்களிலிருந்தும் மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தை வேரறுக்க வேண்டியதும், சவூதி மன்னர் போன்ற மேற்கத்திய ஆட்சியாளர்களின் ஏஜெண்டுகளின் ஆட்சியைக் கவிழ்த்து, இஸ்லாத்தை மேலோங்கச் செய்யக்கூடிய இஸ்லாமிய ஆட்சியை நிறுவ பாடுபடவேண்டியதும் முஸ்லிம் உம்மத்தின் தற்போதைய மேலான கடமையாகும்.

0 comments:

Post a Comment